Kadai Elu Vallalgal History in Tamil – கடையேழு வள்ளல்கள் வாழ்க்கை வரலாறு
Kadai elu vallalgal history in tamil: பள்ளிப் பருவத்தில் தமிழ் மொழியில் பயின்ற அனைவருக்கும் இந்த கடையேழு வள்ளல்களில் யாரேனும் ஒருவரின் வாழ்க்கை பற்றி தெரியாமல் பள்ளி பருவத்தினை கடந்து வந்திருக்க முடியாது. இந்த கடையெழு வள்ளல்கள் யார் இவர்களின் வாழ்க்கை வரலாறு என்ன என்று இந்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம்.
கொடைமடம் என்றால் என்ன?
கொடைமடம் என்பது மனதில் சிறிதளவும் எந்தவித யோசனையும் இன்றி தனது பகுத்தறிவு மடமையோடு தன்னை தேடி வருபவர்களுக்கு என்னிடம் இருக்கும் பொருளை கொடுப்பது ஆகும்.
7 கடையேழு வள்ளல்கள் || 7 வள்ளல்கள் பெயர்கள் in tamil
1. பேகன் – கடும் குளிரில் நடுங்கிய மயிலுக்கு “போர்வை” அளித்தார்.
2. பாரி – முல்லைக்கு தன்னுடைய முத்துக்களால் பதித்த “தேரை” அளித்தார்.
3. காரி – தன்னை தேடி வருபவர்களுக்கு “குதிரையை” கொடையாக அளித்தார்.
4. ஆய் – தன்னை நாடி வந்தவர்களுக்கு “ஊர்களை” கொடையாக அளித்து மகிழ்ந்தார்.
5. அதியமான் – தனக்கு கிடைத்த சாகா வரம் பெற்ற “நெல்லிக்கனியை” தமிழ் குடும்ப பெற்ற சங்க கால புலவரான ஔவைக்கு கொடுத்து மகிழ்ந்தார்.
6. நள்ளி – தன்னிடம் கொடை கேட்டு வந்தவர்களுக்கு பிறரிடம் மறுமுறை போய் எந்த ஒரு கொடையும் கேட்காத அளவிற்கு தன்னிடம் உள்ள பொருட்களை எல்லாம் கொடுத்தார்.
7. ஓரி – கூத்தாடும் கலைஞர்களுக்கு நாடு கொடுத்து மகிழ்ந்தார்.
கடையெழு வள்ளல்கள் பெயர்கள் மற்றும் சிறப்புகள் || முதல் ஏழு வள்ளல்கள் வரலாறு
பேகன்:
கடையேழு வள்ளல்களில் முதன்மையான வள்ளாலாக கருதப்படுபவர் தான் இந்த பேகன். இவர், பொதினி மலையை ஆட்சி செய்து கொண்டிருந்தார். இன்றைய காலகட்டத்தில் அந்த பொதினி மலையானது சிறப்புமிக்க முருகப்பெருமானின் பழனி மலை ஆகும்.
பழனி மலைப்பகுதி எப்போதும் மழைவளம் மிக்க செல்வ செழிப்பாக இருக்கும் இந்த மலைப்பகுதியில் அதிகளவில் மயில்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது ஒரு நாள் அந்த மலையில் பேகன் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி சுற்றிப் பார்த்து கொண்டிருந்த வேலையில் மயில் ஒன்று தொடர்ந்து அகவி கொண்டு இருந்தது. இதனை, கவனித்த பேகன் அந்த மயில் அகவும் இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போதுதான் தெரிந்தது அந்த மயில் கடும் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தது.
இதனால், கடும் வேதனை அடைந்த பேகன் அந்த மயிலை குளிரிலிருந்து காக்க வேண்டும் என்று எண்ணினார். இதனால், சற்றும் எதைப் பற்றியும் யோசிக்காமல் தான் போர்த்திருந்த போர்வையை குளிரில் நடுங்கும் அந்த மயிலுக்கு போர்த்தினார்.
இதனையே, “கொடைமனம்” என சங்க இலக்கிய நூல்கள் பேகனின் பெருமையை விளக்குகிறது.
பாரி:
சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் இரண்டாவது வள்ளல்தான் பாரி. இவர் பறம்பு மலையை ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னர் என கருதப்படுகிறார். இவருடைய புகழ்பெற்ற பெயர் “வேள்பாரி”. ஒரு முறை பாரி தனது தேரில் சென்று கொண்டிருந்த வேளையில் அந்த வழியில் ஒரு அழகான முல்லைக்கொடி படர்ந்து இருப்பதை பார்தார்.
அந்த முல்லைக்கொடி படர்ந்து வளர அருகில் ஒரு மரமோ அல்லது வேறு எதுவும் செடியோ இல்லாமல் அந்த கொடி வழியில் இருப்பதை பார்த்து பெரும் துன்புற்றார் பாரி. இதனால், பாரி முத்துக்களும், நவரத்தினங்களும் பாதிக்கப்பட்டு செய்யப்பட்ட நீண்ட காலம் தான் பயன்படுத்திய “தேர் வாகனத்தை” அந்த முல்லைக்கொடி படர்ந்து வளர்வதற்காக அந்த இடத்தில் விட்டுவிட்டு நடந்து சென்றார்.
பாரியின் கொடைத்தன்மையை பறைசாற்றும் எடுத்துக்காட்டு பாடலாக இது போற்றப்படுகிறது.
“பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவற்
புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே”.
என பாரியின் கொடைத்தன்மையை பற்றி தெரிந்த சங்க காலம் புலவர் கபிலர் பாரியின் புகழை போற்றி பாடியுள்ளார்.
காரி:
காரி என்ற வள்ளல் திருக்கோவிலூர் நகரை தலைநகரமாகக் கொண்டு “மாலாடு” என்னும் பகுதியை ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னர் ஆவார். இந்தப் பகுதி திருக்கோயிலூக்கு மேற்கே உள்ள தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் இருக்கும் பகுதி ஆகும். இவருக்கு, மலையமான் என்றும் மலையம்மன் திருமுடிக்காரி மற்றும் கோவற் கோமான் என்ற பல சிறப்பு பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
காரி தன்னை நாடிவரும் மக்களிடம் மிகவும் அன்பாக பேசும் அழகிய குணம் கொண்டவர். ஒலிக்கின்ற மணியை கழுத்தில் அணிந்திருப்பார். “தலையாட்டம்” என்கிற அணிகலனை தலையிலும் அணிந்திருப்பார். இது போன்ற ஏனைய விலைமதிக்க தக்க செல்வங்களை தன்னை தேடி வரும் மக்களுக்கு உலகமே உயர்ந்து பார்க்கும் வகையில் தானம் கொடுத்து வழங்கியதாக காரியின் கொடையை புறநானூற்றுப் பாடல்கள் கூறுகிறது.
கபிலர் பெருஞ்சித்தனார் மற்றும் நப்பசலையார் போன்ற சங்க காலப் புலவர்கள் காரி குறித்தும் அவரது கொடை பற்றியும் பாடிய பாடல்கள் புறநானூறு நூலில் இடம் பெற்றுள்ளது.
ஆய்:
ஆய் என்னும் கொடை வள்ளல் பொதிகை மலை சாரலில் அதாவது, தற்போது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள “ஆய்க்குடி” எனும் பகுதியை தலை நகரமாக கொண்டு ஆட்சி செய்த ஒரு மன்னர் என வரலாற்று சான்றுகள் குறிப்பிடுகின்றது. இவருக்கு, வேல் ஆய் மற்றும் ஆய் அண்டிரன் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு.
இவருக்கு ஒரு சமயத்தில் நீல நிறத்தில் இருக்கின்ற அதிசயமான தெய்வீக நச்சு பாம்பு ஒரு அரிய வகை ஆடையை கொடுத்ததாகவும் அந்த ஆடையை தான் உடுத்திக் கொள்ளாமல் காட்டில் ஆலமரத்திற்கு அடியில் தவம் புரிந்த சிவபெருமானுக்கு அந்த ஆடையை கொடுத்த வள்ளல் ஆவர்.
இவரின், கொடை வள்ளல் தன்மையை பற்றி உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் மற்றும் துறையூர் ஓடைக்கிழார் போன்ற சங்க காலப் புலவர்கள் பாடி இருக்கின்றனர்.
அதியமான் (அ) அதிகன்:
அதியமான் சங்க காலத்தில் “தகடூர்” என்ற ஊரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த ஒரு மாமன்னர் ஆவார். இந்த தகடூர் என்பது தற்போதுள்ள தர்மபுரி மாவட்டம் சார்ந்த பகுதிகளாக இருக்க கூடும் என வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றது.
இவருக்கு அதிகன், அதிகனுக்கு அஞ்சி அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகைமான் போன்ற பல பெயர்கள் இவருக்கு உண்டு.
ஒரு நாள் அவர் ஆட்சி செய்த நகரின் மலையின் உச்சியில் இருந்த ஒரு நெல்லி மரத்தில் அரிய வகை ‘நெல்லிக்கனி” ஒன்றை பெற்றார். அந்த நெல்லிக்கனியை உண்பவர்களுக்கு நரை, திரை, மூப்பு இன்றி அதிக நாள் வாழ வைக்கும் அதிசய நெல்லிக்கனியாகும். அந்தக் நெல்லிகனியை அதியமான் உண்ணாமல் அதை வைத்திருந்து தன்னைக் காண வந்த நல்லிசைப் புலமை பெற்ற பெண் புலவர் ஔவையாருக்கு கொடையாக தந்து அழியா அறபுகழ் பெற்று வாழ்க என தனது கொடையின் புகழில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றார்.
தன்னுடைய உயிரை பொருட்படுத்தாமல் தமிழுக்கு தொண்டாற்றிய நம் உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்த அதியமான் குறித்து ஔவையார் பாடிய பாடல்கள் புறநானூறு நூலில் இடம் பெற்றுள்ளது.
நள்ளி:
நள்ளி என்னும் குறுநில மன்னன் அதிக மலைகளைக் கொண்ட கண்டீர நாட்டினை ஆட்சி செய்தார். இவருக்கு நள்ளிமலை நாடார், கண்டீரக் கோப்பெரு நள்ளி, பெரு நள்ளி என்று பல பெயர்கள் உண்டு.
நள்ளி என்னும் வள்ளல் தன்னை தேடி கொடை கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லி அள்ளி அள்ளி கொடுத்த ஒரு கொடை வள்ளல் ஆவார். அதுமட்டுமின்றி, கொடை பெற்ற மக்கள் பிறரிடம் சென்று மீண்டும் ஒருமுறை கொடை கேட்காமல் இருக்கும் அளவிற்கு போதுமான அளவு மக்களுக்கு தேவையான கொடைகளை அளித்து சிறப்பு புகழ்பெற்ற ஒரு கொடை வள்ளல் ஆவார்.
‘வன்பரணர்’ என்ற சங்ககாலப் புலவர் நல்லியை பற்றி புறநானூற்றில் பாடல்களை பாடி உள்ளார்.
ஓரி:
கடையெழு வள்ளல்களில் கடைசியாக போற்றப்படுபவர் தான் இந்த ஓரி. இவர், வில் போரில் சிறந்த வல்லவராக இருந்தார். இவர், “வல்வில் ஓரி” என்று அழைக்கப்பட்டார்.
ஓரி தன்னைத் தேடி வரும் இசைவாணர்களுக்கு யானைகளை கொடையாக அளித்தார். அதுமட்டுமின்றி, பசிப்பிணியால் வாடிய பாணர்களுக்கு விருந்துணவு அளித்து அவர்களின்,பசி என்னும் நோயை போக்கிய மாபெரும் கொடைவள்ளல் தான் இந்த ஓரி.
இதைவிட பெரிய கொடை எதுவென்றால், பூத்துக் குலுங்கிய புதுமையான மலர்களை உடைய, இளமையும் முதிர்ச்சியும் கொண்ட மரங்களும், சிறிய மலைகளும் போன்ற செல்வ செழிப்புமிக்க நாட்டை கூத்தாடும் கலைஞர்களுக்கு பரிசாக கொடுத்து தனது கொடை வள்ளல் தன்மையை சிறப்பித்தார்.
இந்த கடையேழு வள்ளல்கள் தான் சங்க கால இலக்கிய நூல்கள் சிறப்பித்துக் கூறும் கொடை வள்ளல்கள் ஆவார்கள். இவர்களுக்கு பிறகு பெரிதளவில் யாரும் கூறும் வகையில் கொடைவள்ளல் மக்களுக்கு கொண்டு வரலாற்றில் இடம் பெறவில்லை.
இந்த கடையில் வள்ளல்களின் சிறப்புகளையும் பெருமைகளையும் கொடை தன்மையையும் புறநானூறு, அகநானூறு, நற்றிணை போன்ற சங்க இலக்கிய நூல்களில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கடையெழு வள்ளல்கள் pdf || kadai EZHU vallalgal images
யார் kadai EZHU Vallalgal?
தன்னைத் தேடி வருபவர்களுக்கு சிறிதளவும் யோசிக்காமல் தன்னிடம் உள்ள செல்வங்களை கொடையாக கொடுக்கும் வல்லள்களில் பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி என ஏழு வள்ளல்கள் தமிழ் சங்க இலக்கியத்தில்
முக்கியத்துவம் பெறுகின்றனர்.
பேகன் என்பவர் யார்?
பேகன் என்பவர் ஒரு தமிழ் வேளிர் மன்னர் என கருதப்படுகிறார். இவர், தமிழ் இலக்கியங்களில் போற்றப்படும் கடையேழு வள்ளல்களில் ஒருவர். சங்க காலப் புலவர் பரணரின் சமகாலத்தவர்.இவர் கொடைக்கும், கருணைக்கும் புகழ்பெற்றவர். பொதினி(பழனி), மலையே ஆட்சி செய்தவர்.
நள்ளி என்ன செய்தார்?
தோட்டி என்னும் செல்வ செழிப்பு மிக்க மலைநாட்டிற்கும், காடுகளுக்கும் மன்னராக இருந்தவர் தான் இந்த நள்ளி.
இவர், “இயல்வது கரவேல்” என்பதற்கு சான்றாக தன்னைத் தேடி வருபவர்களுக்கு இல்லறத்தை இனிது நடத்தப் பொருள்களை ஈந்து கொடுத்து மகிழ்ந்தவன். இவர், வன்பரணர், பெருந்தலை சாத்தனார் எனும் பெரும் சங்க காலப் புலவர்களால் பாடப்பட்ட பெருமைக்குரியவர் ஆவார்.
கடையெழு வள்ளல்கள் பற்றி கூறும் நூல் எது?
இந்த கடையெழு வள்ளல்களை பற்றிய செய்திகளையும், குறிப்புகளையும் புறநானூறு, அகநானூறு மற்றும் எட்டுத்தொகை போன்ற சங்க கால நூல்களின் பாடல்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
Read Also:- கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி