ஐ.பி.எல் 2024 டிக்கெட் ஆன்லைன் விற்பனை மற்றும் கவுன்டர் சேப்பாக்கத்தில் நேரடி டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் || IPL-2024 Match Tickets Price How Much
IPL-2024 Match Tickets Price How Much:- 2024-மார்ச் 22-ஆம் தேதி தொடங்கும் 17-வது சீசன் ஐ.பி.எல் முதல் 21-போட்டிக்கான அட்டவணை தற்போது ஐ.பி.எல் நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கும் தோனி, கோலி, ஜடேஜா, மேக்ஸ்வெல் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஆடும் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்களின் ஆனந்தமும், கோஷங்கள் தான் அதிக அளவில் மக்களையும், விளையாட்டு வீரர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும். அந்த வகையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என ரசிகர்களிடையே தற்பொழுது ஆர்வமாக பார்க்கப்பட்டு வருகிறது.
ipl 1-st match tickets sale date:
தற்போது, நடந்து முடிந்த உலக கோப்பை தொடருக்கான அனைத்து போட்டிகளின் டிக்கெட்களும் தொடர் நடைபெறுவதற்கு முன்னதாகவே விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஐ.பி.எல் கிரிக்கெட்
போட்டிகளின் டிக்கெட் எப்போதும் ஒவ்வொரு போட்டி தொடங்க இருக்கும் முன்பாக தான் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும்போது மார்ச் 22-ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டிக்கான மொத்த டிக்கெட்களையும் சென்னை அணியின் நிர்வாகமே விற்பனை செய்கிறது.
இதில், மைதானத்தில் உள்ள கவுன்ட்டர்கள், ஆன்லைனில் புக் செய்வது போன்ற இரண்டு வழிகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கடந்த முறை டிக்கெட் விற்பனை குறித்து ரசிகர்களிடமிருந்து அதிகளவில் புகார் வந்தது. அதில் குறிப்பாக, ரசிகர்களுக்கு டிக்கெட் விற்காமல் திருட்டுத்தனமான முறையில் பிளாக்கில் டிக்கெட் அனைத்தும் VIP-களுக்கு விற்பனை செய்கிறார்கள் என்ற கடுமையான குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் கூறினர்.
ipl 2024 1-st match ticket price how much?
IPL-2024 Match Tickets Price How Much:- கடந்த சீசனில் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் 1500 ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டது. இந்த முறையும் அதே விலையில் டிக்கெட்டுகள் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் போட்டி நடைபெறும் மூன்று நாட்களுக்கு முன்பாகவே விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இதனால், மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 19-ஆம் தேதி தொடங்க அதிகளவில் வாய்ப்பு இருக்கிறது.
ஐ.பி.எல் போட்டி அட்டவணை வந்ததிலிருந்து கிரிக்கெட் ரசிகர்கள் அதே அளவில் மகிழ்ச்சியில் உள்ளனர். ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் வகையிலும் தோனி, ருத்ராஜ் கெய்க்வாட், சிவம் துபே போன்ற சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் அதிக அளவில் பரவி வருகிறது.
எனவே, மார்ச் 22-ஆம் தேதி நடக்கும் ஐ.பி.எல் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. எனவே, போட்டிகளை மகிழ்ச்சியாக கண்டு மகிழுங்கள்.
Read Also:- ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை