ஐ.பி.எல்-2024 CSK vs RCB ஐபிஎல் போட்டிகளில் ஏற்பட்டுள்ள புதிய விதிமுறை மாற்றங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஐபிஎல் 2024-ஐபிஎல் 17-வது சீசன் இன்று இரவு 8-மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக ஏ.ஆர்.ரகுமான் தலைமையில் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று கோலாகலமாக தொடங்க இருக்கின்றது.
இந்த ஆண்டு ஐபிஎல் முதல் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பாப் டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளது இந்த போட்டிக்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தான் 2024-ஐ.பி.எல் தொடருக்கான புதிய விதிமுறை மாற்றங்களை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் துடுப்பாட்ட வீரர்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளதாக பார்க்கப்படுகிறது.
பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான விதிமுறைகள்:
விதிமுறைகள்:
• இதுவரை கிரிக்கெட் தொடரில் ஒரு ஓவரில் ஒரு பவுன்சர்கள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் வீசலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், இந்த முறை நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் இருந்து ஒரு ஓவரில் ஒரு பந்துவீச்சாளர் இரண்டு பவுன்சர்களை வீசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
• இந்த விதிமுறை கடைசி ஓருவரை வீச வரும் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என முன்னாள் வேக பந்துவீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.
• கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விதி தான் அகல பந்து(வைட்) மற்றும் நோ பந்துகளை(நோ பால்) அணிகள் சரி பார்ப்பதற்கு மீள்பார்வை(ரிவிவ்) செய்யலாம்.
• ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு இரண்டு மீள்பார்வை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
• இம்பாக்ட் வீரரை(impact player)இடையில் களம் இறக்கும் விதி அறிமுகப்படுத்தப்பட்டதால் அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் கூடுதலாக பலம் கிடைக்கிறது.
• ஐசிசி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டாப் க்ளொக்(Stop Clock) முறையை இன்னும் ஐபிஎல் தொடரிலே அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.