ADVERTISEMENT

IPL-2024 ஐ.பி.எல்.லில் புதிய வரலாற்று சாதனை 523-ரன்கள் குவிப்பு 38-சிக்ஸர்கள் – சன் ரைசர்ஸ்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி

IPL-2024 ஐ.பி.எல்.லில் புதிய வரலாற்று சாதனை 523-ரன்கள் குவிப்பு 38-சிக்ஸர்கள் – சன் ரைசர்ஸ்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி

ஐபிஎல்-20204 மார்ச் 22-ஆம் தேதி கோலாகலமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்றது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பல பரிச்சனை நடத்தின.

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து சீன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக மயங் அகர்வால் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் இருவரும் களமிறங்கினர்.

பிட்ச் ரிப்போர்ட்:

ஹைதராபாத் ஆடுகளத்தின் பிட்ச் எப்போதுமே பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் பிட்ச் ஆகும். இதன் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஹெட் மீது அதிகளவு நம்பிக்கை வைத்து களமிறக்கியது. இதனால் அவர்களின் நம்பிக்கையை வீணடிக்காமல் ஹெட் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாட தொடங்கினார்.

அதிரடி ஆட்டம்:

முதலில் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மயங்க் அர்வால் மற்றும் ஹெட் ஆகியோர் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மயங்க் அகர்வால் 11-ரன்னில் தன்னுடைய விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன் பிறகு ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா மற்றும் ஹெட் ஜோடி தொடர்ந்து மும்பை அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நான்கு திசைகளிலும் அதிரடியாக பறக்க விட்டனர்.

ADVERTISEMENT

பவர் பிளே ரிசல்ட்:

இந்த அதிரடி ஆட்டத்தின் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6-ஓவர்களிலேயே 81-ரன்களுக்கு 1-விக்கெட்டை மட்டுமே இழந்து அதிரடி காட்டியது. குறிப்பாக, டிராவிஸ் ஹெட் மட்டுமே 18 பந்துகளில் அதிவேக அரைசதம்(50-ரன்கள்)அடித்து அசத்தினார். அதன் பிறகு சாவ்லா வீச வந்த 7-வது ஓவரில் அபிஷேக் ஷர்மா 3-சிக்ஸர்களை அதிரடியாக பறக்க விட்டு வான வேடிக்கை காட்டினார்.

இதன் காரணமாக சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 7-ஓவர்களிலேயே 102/1 ரன்களை குவித்து ஐ.பி.எல்லில் வரலாற்று சாதனை படைத்தது. அபிஷேக் ஷர்மா மற்றும் ஹெட் அதிரடியாக ஆடிய காரணத்தினால் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி முதல் 10-ஓவர்களில் 148/2-ரன்கள் குவித்து அதிரடி காட்டியது.

இந்த தருணத்தில் தான் ஹெட் 24-பந்துகளில் 62-ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அடுத்து இது அதோட மட்டும் நிற்காமல் அபிஷேக் சர்மா மற்றும் மார்க்கரம் இருவரும் இணைந்து மீண்டும் அதிரடி காட்டத் தொடங்கினார்கள். இதனால், அந்த அணி 11-ஓவர்களில் 150-ரன்களை கடந்தது.

அதிரடி ஆட்டம்:

அபிஷேக் ஷர்மா 23-பந்துகளில் 64-ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.அதன் பிறகு இணைந்த மார்க்கரம் மற்றும் கிளாஸன் இருவரும் இணைந்து மும்பை அணியின் பந்துவீச்சை நான்கு புறமும் வானத்தில் பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.இவர்களின் ஆட்டத்தை கடைசி வரை கட்டுப்படுத்த முடியவில்லை.

20 ஓவர்களின் முடிவில்:

கிளாசன் 80(34) மற்றும் மார்க்கரம் 42(28) ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20-ஓவரின் முடிவில் 277/3 ரன்களை குவித்து அசத்தியது. மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவைத் தவிர அனைத்து பௌலர்களும் ஓவருக்கு 10+ ரன்கள் வாரி வழங்கினர்.

குறிப்பாக கோட்ச்சி 57-ரன்களையும், ம்பாகா 66-ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். இந்த 277 என்ற இமாலய ரன்களை குவித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெற்றது.

ADVERTISEMENT

மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி:

278-என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிசான் ஆகியோர் ஆரம்ப முதலே அதிரடி காட்டினார்.

ரோஹித் சர்மா 26(12), இஷான் கிசான் 34(13)என்ற ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
அதன் பிறகு வந்த நமன் தீர் 30 (14) திலக் வர்மா 64(34) என்ற ரன்களில் தங்களுடைய விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார்கள். இறுதித் தருணத்தில் ஹார்திக் பாண்டியா 24(20) மற்றும் டிம் டேவிட் 41(32) அணியின் வெற்றிக்கு தேவையான ரன்களை அடிக்க முடியவில்லை. இதனால்,மும்பை இந்தியன்ஸ் அணி 20-ஓவர் முடிவில் 246-ரன்கள் எடுத்து 31-ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

Leave a Reply