ADVERTISEMENT
ஐபிஎல்

IPL-2024 ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய சி.எஸ்.கே அணி || 6-விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணியை வீழ்த்தியது

ஐபிஎல்

ipl 2024 daily news in tamil

ஐபிஎல் 2024 தொடர் நேற்று தொடங்கிய நிலையில் முதல் போட்டியானது மிகவும் கோலாகலமான இசை நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

போட்டி சரியாக இரவு 8-மணி அளவில் தொடங்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மாற்றப்பட்ட நிலையில் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டூ பிளேசிஸ் டாஸ் போட மைதானத்திற்குள் வந்தனர். பாப் டூ பிளேசிஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆர்.சி.பி அணியின் தொடக்க வீரர்களாக பாப் டூ பிளேசிஸ் மற்றும் விராட் கோலி களமிறங்கினார்கள்.பாப் டூ பிளேசிஸ் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆட தொடங்கினார். முதல் விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் சேர்த்து டூ ப்ளசிஸ் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.அதன் பிறகு வந்த ரஜத் பட்டிதாரும், கிளைன் மேக்ஸ் வெல்லும் ரன் ஏதும் எடுக்காமல் 0-ரன்னில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்கள்.

விராட் கோலியும் 21-ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேமரூன் கிரீனும் 18-ரன்களில் ஆட்டம் இழந்தார். 11.4 ஓவர்களல் 5-விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் 78-ரன்கள் மட்டுமே ஆர்.சி.பி அணி எடுத்திருந்தது.

அதன் பிறகு ஜோடி சேர்ந்த இளம் வீரரான அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் பொறுப்பாக விளையாடி ரன்களை அடிக்க ஆரம்பித்தனர். அனுஜ்ராவத் 25-பந்துகளில் 3-சிக்ஸர்கள், 4-பவுண்டரிகளுடன் 48-ரன்கள் குவித்தார். தினேஷ் கார்த்திக் 26-பந்துகளை எதிர்கொண்டு 2-சிக்ஸர் 3-பவுண்டரிகளுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.

சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் தரப்பில் முஸ்தபிஷர் ரகுமான் 4-முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். 20-ஓவர்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 173-ரன்கள் குவித்தது.

ADVERTISEMENT

174-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் 15-ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு ரச்சின் ரவீந்தரா 15-பந்துகளில் 37 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து அவரும் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த அஜின்கையா ரகானே 21-ரன்களும், டேரில் மிட்சல் 22-ரன்களும் எடுத்து சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 12.3-ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 110-ரன்கள் எடுத்திருந்தது. 4-விக்கெட்களையும் இழந்திருந்தது.

அதன் பிறகு, இணைந்த சிவம் துபே மற்றும் ஜடேஜா ஜோடி நிதானமாக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். சிவம் துபே 28-பந்துகளை எதிர்கொண்டு 4-பவுண்டரிகள் மற்றும் 1-சிக்சருடன் 34-ரன்கள் குவித்தார். ரவீந்திர ஜடேஜா 17-பந்துகளை எதிர்கொண்டு 1-சிக்ஸருடன் 25-ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4-ஓவர்களில் 4-விக்கெட் மட்டுமே விட்டுக் கொடுத்து 174-என்ற இலக்கை சேஷ் செய்து இந்த வருடத்திற்கான முதல் ஐபிஎல் போட்டியின் வெற்றியை பதிவு செய்தது.

Leave a Reply