ADVERTISEMENT

IPL 2024- என்னைப் போன்று தான் ருத்ராஜும் || அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன் – ருத்ராஜை பற்றி தோனி பேசிய பகிர்வு

IPL 2024- என்னைப் போன்று தான் ருத்ராஜும் || அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன் – ருத்ராஜை பற்றி தோனி பேசிய பகிர்வு

புதிய வீரர்களிடம் நான் அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன். என்னை போல தான் ருத்ராஜ் கெய்க்வாட் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழி நடத்தி வருகிறார் என்று முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், ஐபிஎல் தொடருக்கு ஒரு நாளைக்கு முன் நடைபெற்ற கேப்டன்சி மாற்றத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் வரவேர்த்ததுடன், ருத்ராஜை செயல்பாடுகளுக்கு ஆதரவையும் அளித்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மண்ணில் விளையாடிய 2-போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு சென்னை அணியை வழிநடத்தி அனைவரின் நம்பிக்கையும் காப்பாற்றியுள்ளார் ருத்ராஜ் கெய்க்வாட்.

இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களான எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்தரா மற்றும் சிவன் துபே ஆகிய நான்கு பேரும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

அப்போ அந்த நிகழ்ச்சியில் ரச்சின் ரவீந்திரவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில்,குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 3-கேட்சுகளை நீங்கள் பிடித்தீர்கள். அதேபோல் ஒரு கேட்ச்சை தவறவிட்டீர்கள். அந்த கேச்சை தவறவிட்டபோது எம்.எஸ்.தோனியின் முகத்தை பார்த்தீர்களா? அவர் என்ன சொல்வார் என்று நினைத்தீர்களா? என்று கேட்கப்பட்டது.

ADVERTISEMENT

அப்போது தொகுப்பாளரிடம் இடையில் பேசிய தோனி இப்போது சென்னை அணியில் புதிய கேப்டன் இருக்கிறார் என்று கூறும்போது அரங்கமே சிரிப்பு அலையில் மூழ்கியது. அதன் பிறகு, தோனி தொடர்ந்து பேசும்போது எப்போதும் களத்தில் நடக்கும் செயல்களுக்கு பெரிதாக நான் ரியாக்ட் செய்ய மாட்டேன்.

அதிலும்,சென்னை அணிக்காக முதல் அல்லது இரண்டாவது போட்டியில் விளையாடும் வீரரின் தவறுகளுக்கு நிச்சயம் எந்த ரியாக்சன் என்னிடம் இருக்காது. ஏனெனில், புதிய வீரர்கள் முதலில் விளையாடும் போது சில பதற்றங்களும், மன அழுத்தங்களும் இருக்கக்கூடும். ஆனால், இரண்டு அல்லது மூன்று போட்டிகள் விளையாடிவிட்டால் அந்தப் பதற்றம் இருக்காது.

இது போன்ற பதட்டங்களால் சிறு சிறு தவறுகள் ஏற்படக்கூடும். இதில் பெரிதாக ரியாக்ட் பண்ண எதுவும் கிடையாது.அதுபோன்று தான் கிட்டத்தட்ட என்னைப்போல் புதிய கேப்டனாக இருக்கும் ருத்ராஜ் கெய்க்வாட்-ன் மன நிலையையும் தற்போது உள்ளது.

ரச்சின் ரவீந்தரா 360 டிகிரியிலும் ஃபீலிங் செய்து கொண்டிருக்கிறார். எந்த பக்கம் திரும்பினாலும் அங்கு அவர்தான் இருக்கிறார்.இதனால், அவரை பார்க்கவே உற்சாகமாக எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply