Bhogi Pandikai History in Tamil – போகி பண்டிகை வரலாறு
Bhogi Pandikai History in Tamil – போகி பண்டிகை வரலாறு:- இந்த போகி பண்டியானது மார்கழி மாதம் கடைசி நாள் தமிழகத்தில் பெருமளவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இந்தப் போகிப் பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து கொண்டாடுவார்கள். அது மட்டும் இன்றி மக்களின் மனதில் உள்ள தீய எண்ணங்களை அறவே தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
போகிப் பண்டிகை என்றால் என்ன?
கடந்த ஆண்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தான் இந்த போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை அகற்றி வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.
போகி என்பதன் பொருள் – “பழையன கழித்து, புதியன புகவிடும்”.
போகி பண்டிகையின் சிறப்பு || போகிப் பண்டிகை பிரித்து எழுதுக.
“பழையன கழித்து, புதியன புகவிடும்” என்று கொண்டாடப்படுகிறது. பழமையான பொருட்களை போக்கக்கூடிய இந்த பண்டிகைக்கு ‘போக்கி’ என்ற பெயர் இருந்தது அது காலப்போக்கில் “போகி” என மாறி உள்ளது. தமிழரின் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் வீட்டை சுற்றி உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து, வீட்டிற்கு வண்ணக் கலர்கள் அடித்து வீட்டை அலங்கரிப்பார்கள். பெரும் பொங்கல், மகரசங்கராந்தி மற்றும் லோரி என்று அழைக்கப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில் இந்த போகி பண்டியானது கொண்டாடப்படுகிறது.
இந்த போகிப் பண்டிகை என்பது விடியற்காலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் உள்ள பழைய பொருள்கள் எல்லாம் ஒன்று சேர்த்து எரித்து மகிழ்வார்கள். மேலும், “கொட்டு” எனப்படும் போகி மேலம் அடித்தும் கொண்டாடி மகிழ்வார்கள்.
போகி பண்டிகை எதற்காக கொண்டாடுகிறோம் || pogi pandikai history in tamil
Bhogi Pandikai History in Tamil:- போகம் என்ற சொல்லின் பொருள் “மகிழ்ச்சி” அதாவது, நம் அனைவரும் இன்பமாக இருப்பதை குறிக்கிறது. போகம் என்ற சொல்லிற்கு உடனானவர் “இந்திர பகவான்” ஆவார். விவசாயம் செய்யும் மக்களுக்கு சரியான நேரத்தில் விவசாயம் செய்யும் போது மழையை பூமியில் பொழிவிக்கின்ற இந்திர பகவானே சிறப்பித்து போற்றும் விதமாகத்தான் இந்த போகிப் பண்டிகை ஆனது ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் கடைசி நாள் கொண்டாடப்படுகிறது.
இந்திரனின் கடுமையான ஆணவம்:
தான் மழை பொழிவிப்பதால் தான் இந்த பூமியில் விவசாயம் செல்வ செழிப்பாக நடைபெறுகிறது என்ற கருவத்தால் இருந்த இந்திரனின் ஆணவத்தை குறைக்க கோகுல கிருஷ்ணன் இந்திரனின் வழிபாட்டை மக்களிடையே தடுத்து கோவர்த்தனம் மலைக்கு வழிபாடுகளை செய்வதற்காக திசை திருப்பினார்.
இதனை கண்டு கடும் கோபமுற்ற இந்திரன் தொடர்ச்சியாக 7-நாட்கள் விடாமல் கடுமையான மழை பொழிவை பூமியில் பொழிய வைத்து மக்களை துன்புறுத்தினார்.
மக்களை பாதுகாத்த கிருஷ்ணர்:
Bhogi Pandikai History in Tamil:- இவ்வாறு மக்கள் பெரும் துன்பத்தில் இருக்கும் பொழுது அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று எண்ணிய கிருஷ்ணர் கோவர்த்தன மலையை ஒரு குடை போன்று தன்னுடைய ஒற்றை விரலால் பிடித்து இந்திரனின் ஆணவத்தை அடக்கினார். இதனால் தன்னுடைய ஆணவத்தை முழுமையாக திறந்த இந்திரன் கிருஷ்ணரை போற்றி பணிந்தார். இதனால், இந்திர விழாவை கொண்டாடும் விதமாக போகிப் பண்டிகை இந்திரனுக்கு வரமாக கொடுத்தார் கிருஷ்ணர்.
போகிப் பண்டிகை அன்று செய்ய வேண்டிய விஷயங்கள் மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள்:
செய்யக்கூடிய விஷயங்கள்:
• போகிப் பண்டிகை அன்று வீட்டு தெய்வங்களை வழிபடும் பழக்கம் நம்மில் பல பேருக்கு உண்டு. இதனால், நம் முன்னோர்களை குலதெய்வம் கோவிலுக்கு சென்றோ, நடு வீட்டில் விளக்கு ஏற்றியோ நாம் வழிபடலாம். கன்னிப்பெண்கள் யாரேனும் இறந்து போய் இருந்தால் அவர்களை சீலைக்காரியாக வழிபடும் பழக்கம் இன்றும் பல இடங்களில் உண்டு.
• மழை காலம் முடிந்ததும் குளிர்காலம் உச்சமாகும் என்பதால் நோய்க் கிருமிகள் பரவும் ஆபத்து உள்ளது. இதனால், நோய் தொற்று பரவும் இந்த காலகட்டத்தில் பாரம்பரியமாக நாம் செய்து வரும் மருத்துவ முறைகளை கடைபிடிக்க வேண்டும். இதில், குறிப்பாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ முறை மஞ்சள், சாணம் போன்றவற்றை வீட்டை சுற்றியும், வீடு முழுவதும் தெளித்தும் சாம்பிராணி புகை போட்டும் நம் சுற்றுச் சூழலை பாதுகாக்கலாம்.
• Bhogi Pandikai History in Tamil:- இந்த போகி பண்டிகை காப்பு கட்டும் நிகழ்வை நாம் கடைபிடிக்கலாம் அதாவது வீட்டு பின் வாசலில் மூலிகை இலைகளை கட்டி தொங்க விடலாம். அதாவது, மா இலை, நொச்சி, வேம்பு, ஆவாரம் பூ, மஞ்சள் கொத்து, தும்பை, பிரண்டை, துளசி போன்றவை இதில் இருக்க வேண்டும். இது ஒரு சிறந்த கிருமி நாசினியாக இருந்து நம்மளையும், கால்நடைகளையும் பாதுகாக்கும்.
• இந்த நாளில் பழைய ஓலைச்சுவடிகளில் சேதமடைந்த மற்றும் சிதைந்த ஏடுகளை எடுத்துவிட்டு புதிய ஏடுகளை சேர்த்து பயன்படுத்துவார்கள். அதுபோல, நாமும் நம்மிடம் இருக்கும் புத்தகங்களை பராமரிக்கும் பணியை கூட செய்யலாம்.
• போகிப் பண்டிகை அன்று நிலக்கடலை உருண்டை, போளி, ஒப்பிட்டு, வடை, சோமாசு, பாயாசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றுடன் “நிலை பொங்கல்” வைத்து வீட்டு தெய்வங்களை வழங்கும் பழக்கம் இன்றும் ‘கொங்கு நாடு’ பகுதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் இந்த நாளில் எல்லோரும் குலசாமிகளையும், கன்னி தெய்வங்களையும் வணங்குவது நலமானது.
செய்யக்கூடாதவை:
• இந்த போகி திருநாள் அன்று இந்திரன், சூரியன், வீட்டு தெய்வங்களை வரவேற்கும் நாள் என்பதால் இந்த நாளில் மாமிசம் சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது. மேலும், போதை வஸ்துகள், பகல் தூக்கம் என எதுவும் பண்ண கூடாது.
• சில பேர் போகி பண்டியன்று வீட்டிற்கு வெள்ளை அடித்து வீட்டை சுத்தப்படுத்துகின்றனர். ஆனால், அதைவிட முந்தைய நாளில் சுத்தப்படுத்துவது முறையானது. போகிப் பண்டிகை அன்று தெய்வங்களை வழிபடுவது சிறந்தது. மூட பழகங்கள், தீய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் சர்ச்சை போன்றவை “ருத்ர ஞான யக்ஞம்” என்று அழைக்கப்படும் நம் மன யாக குண்டத்தில் எரித்து விட வேண்டும்.
• Bhogi Pandikai History in Tamil:- அன்றைய காலகட்டத்தில் போகி பண்டிகையை கொண்டாடும் விதமாக பழைய துணிகள், சேதம் அடைந்த பொருட்களை போன்றவற்றை எரித்து கொண்டாடும் காலம் கடந்து, நகரங்களில் இப்போதெல்லாம் டயர்களையும், பிளாஸ்டிக் பொருட்களையும் எரித்து காற்றை மாசுபடுத்தும் செயல் செய்யக்கூடாத ஒரு செயலாக பார்க்கப்படுகிறது.
• புதுமையான மழை நீரால் நிரம்பி இருக்கும் கிணறு, குளம், ஆறு போன்றவற்றில் நீர் சுவையாக இருக்கும் தருவாயில் சுத்தமாகும் வகையில், தண்ணீரில் நெல்லி,பனை போன்ற மரங்களின் துண்டை போடுவார்கள். ஆனால், இந்த அடிப்படை வழக்கம் தெரியாமல் இன்று கிராமங்களில் அதிகளவில் மரங்களை வெட்டி நீரில் போடும் வழக்கத்தை செய்யக்கூடாத ஒன்று.
• கிராமப்புறங்களில் இருக்கும் ஆறுகள், குளங்கள், ஏரிகளில் மீன் பிடிக்கும் விழா அதிகளவில் நடைபெறும். இதில், ஊர் மக்கள் ஒன்று திரண்டு மீன்பிடிப்பது தவறு கிடையாது. ஆனால், குளத்தையோ, ஆற்றையோ, ஏறியவோ அளித்து மீன் பிடிக்கும் என்ற எண்ணத்தில் அதில் இருக்கும் நீரையெல்லாம் வெளியே இறைத்து வெளியேற்றுவது மிக மிக தவறான ஒரு செயல் இதை செய்யவே கூடாது.
இயற்கைக்கு எதிராக, காற்றை மாசு படுத்தாத எந்த ஒரு செயலையும் நாம் செய்யாமல் இந்த போகிப் பண்டிகையை நண்பர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்வோம்.
டோரி என்னும் பெயரில் எந்த மாநிலத்தில் அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது?
• போகி பண்டிகை வரலாறு:- பஞ்சாப் மாநிலத்தில் “லோரி” என்ற பெயரில் அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது.
• குஜராத் ராஜஸ்தான் மாநிலங்களில் உத்தராயன் என்ற பெயரில் அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது.
• வாழ்க்கைக்கு வளம் தரும் விவசாயத்திற்கு செல்வ செழிப்பை ஏற்படுத்தும் மழைக் கடவுளை வழிபடும் விதமாக அந்த காலத்தில் போகிப் பண்டிகை இந்திர விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது.
Read More:- தீபாவளி பிறந்த கதை