IPL-2024 ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகிய 9-வீரர்கள் || பின்னடைவை சந்திக்கும் ஐ.பி.எல் அணிகள் – யார் அந்த 9-வீரர்கள் அவர்களின் மொத்த லிஸ்ட் இதோ…!!!
ipl 2024 latest news in tamil:
2024 க்ஷ-ஆம் ஆண்டு ஐ.பி.எல் 17-வது சீசன் வருகின்ற மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இந்த ஐபிஎல் 17-வது சீசனின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளது.
இந்த நிலையில் மொத்தம் 10-அணிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் சில வீரர்கள் விலகி உள்ளனர். இதனால், அவர்களை வாங்கிய அணிகளில் சில பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவர்களைப் பற்றிய விவரங்களை இதில் பார்க்கலாம்.
9-வீரர்கள் விலகல்:
இந்த முறை ஐபிஎல் போட்டி அட்டவணை 20 போட்டிகளுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதனால் அது முடிந்த பிறகு மீதி போட்டிகான அட்டவணை வெளியிடப்படும் என பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தான் ஐபிஎல் 17-வது சீசனில் இருந்து 9-முக்கியமான வீரர்கள் விலகி உள்ளார்கள்.
ipl 2024 trending news in tamil:
1. டிவோன் கான்வே:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன் டிவோன் கான்வேவுக்கு வலது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் 8-வாரங்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்பட்டுள்ளது.
2. முகமதுஷமி:
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமதுஷமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் இருந்து அவர் விலகி விட்டார். அதுமட்டுமில்லாமல் 2024-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் டி-20 உலகக் கோப்பை போட்டியில் இருந்தும் அவர் விலகி விட்டார் என கூறப்பட்டுள்ளது.
3. மேத்யூ வேட்:
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ வேட் ஷெபீல்ட் ஷீல்டு டி-20 லீக் கிரிக்கெட் தொடரின் பைனலில் விளையாட உள்ள காரணத்தினால் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடும் முதல் இரண்டு போட்டிகளில் மேத்யூ வேட் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.
4. ஹஸ் அட்கின்சன்:
இங்கிலாந்தின் வேக பந்துவீச்சாளர் ஹஸ் அட்கின்சன் ஐ.பி.எல் 17-வது சீசனில் இருந்து விலகிவிட்டார். இதற்கு, காரணம் அட்கின்சன் வொர்க் லோட் மேனேஜ்மென்ட் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகி விட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இவருக்கு பதிலாக சமீரா சேர்க்கப்பட்டுள்ளார்.
5. ஜேசன் ராய்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் தன்னுடைய சொந்த காரணங்களால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி விட்டார். இவருக்கு மாற்று வீரராக இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் பிலிப் சால்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
6. மார்க் வுட்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் ஒர்க் லோட் மேனேஜ்மென்ட் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி விட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இவருக்கு மாற்று வீரராக சமர் ஜோசப் சேர்க்கப்பட்டுள்ளார்.
7. ஹேரி ப்ரூக்:
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் 4-கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஹேரி புரூக் இந்த ஐபிஎல் சீசனில் பாட்டி இறந்து விட்டார் என்று கூறி விலகி விட்டார்.
8. லுங்கி நெகிடி:
டெல்லி கேப்பிட்டல் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி நெகிடிக்கு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகி விட்டார். இவருக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல்ரவுண்டர் ஜேக் ப்ராசர் மிக்குர்க் என்ற வீரர் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
9. பிரசித் கிருஷ்ணா:
ராஜஸ்தான் ராயல் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா கடந்த மாதம் தான் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதன் காரணமாக இந்த வருடம் நடக்கும் ஐபிஎல் 17-வது சீசனில் இருந்து விலகி விட்டார்.