IPL 2024 ஆர்.சி.பி அணிக்கு இந்த முறையாவது கப்பு கிடைக்குமா? || ஆர்.சி.பி அணியின் பலம் – பலவீனம் பற்றிய முழு விவரங்கள்
ipl trending news in tamil:
2024-ஆண்டு இந்தியாவில் நடக்கும் 17-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது இந்த நிலையில் இந்தியாவின் மக்களவைத் தேர்தல் நடைபெறும் காரணத்தினால் முதல் 21-போட்டிக்கான அட்டவணை மட்டுமே தற்போது பி.சி.சி.ஐயால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஐபிஎல் போட்டியில் மொத்தம் 10-அணிகள் கலந்து கொள்கின்றன. மார்ச் 22-ஆம் தேதி நடக்கும் முதல் ஐ.பி.எல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்க உள்ளது.
நடப்பு சாம்பியனானா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-முறை ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளது. அதுபோன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் 5-முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் போட்டியில் அறிமுகமான முதல் வருடத்திலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ipl 2024 latest news:
கடந்த முறை இறுதிப் போட்டி வரை சென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது. இது போன்று ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியை தீவிரமாக ஐ.பி.எல் கோப்பையை வெல்ல ஆயுதப்படுத்தும் நிலையில் கடந்த 16-சீசன்களிலும் ஐபிஎல் கோப்பைக்காக போராடிக் கொண்டிருக்கும் ஆர்.சி.பி அணி இந்த முறையாவது ஐபிஎல் கோப்பையை வெல்லுமா என்ற கேள்வி ரசிகர்களும் தற்போது எழுந்துள்ளது. முதற்கட்டமாக ஐந்து போட்டிகளில் விளையாடும் ஆர் சி பி அணி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.
ஆர்.சி.பி அணியின் பலம்:
ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியில் பேட்டிங் இந்த முறையும் மிகவும் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஓபனிங் ஜோடியாக பாப் டூ பிளேசீயும் – விராட் கோலியும் அணிக்கு தூணாக இருக்கின்றனர். மிடில் ஆர்டரில் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல் ரவுண்டான க்ளைன் மேக்ஸ் வெல்லும் கேமரன் க்ரீனும் பக்க பலமாக இணைகின்றனர். இவர்களுடன், ரஜத் பட்டிதாரும் பேட்டிங்கில் இணைய உள்ளார்.
ஆர்.சி.பி அணியின் பலவீனம்:
என்னதான் பேட்டிங்கில் பலமாக இருந்தாலும் பவுலிங்கில் சொதப்புவோம் சிலர் ஆர்.சி.பி அணியில் ஒவ்வொரு வருடமும் காணப்படுகின்றனர். அந்த வகையில் இந்த வருடமும் யாஷ் தயாள், டாம் கரண், அல்ஜாரி சோசப் போன்ற பவுலிங்கில் சொதப்பும் வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்த வரிசையில் கேமரன் கிரீன் பேட்டிங் போலவை பவுலிங்கிலும் சிறப்பாக செயல்படுவார். அதுபோன்று மேக்ஸ் வெல்லும் கடந்த 50-ஓவர் உலகக் கோப்பையில் சுழற் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். இதனால், இவர்கள் இருவரும் 8-ஓவர்களை நன்றாக வீசும் தருணத்தில் ஓரளவு ஆர்.சி.பி அணியின் பலம் அதிகரிக்கும்.
ஆர்.சி.பி அணியின் ஸ்குவாட்:
பாப் டு பிளசிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல், ரஜத் படித்தார், சுயாஸ் பிரபு தேசாய், மஹிபால் லோம்ரோர், கேமரன் கிரீன், தினேஷ் கார்த்திக், முகமது சிராஜ், விஜயகுமார் வைஷாக், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப், டாம் கரன், ரீஸ் டாப்லி, லாக்கி பெர்குசன், மனோஜ் பந்தேஜ், வில் ஜாக்ஸ், ஹிமாஷூ சர்மா
2024 ipl RCB team squad:
பிளேயிங் லெவன் எதிர்பார்ப்பு:
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், கேம்ரூன் கிரீன், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், யாஷ் தயாள், முகமது சிராஜ், அல்ஸாரி ஜோசப்.
Read Also:- ஐபிஎல் 2024 சி.எஸ்.கே அணியின் கான்வே காயம் காரணமாக இந்த சீசனின் விளையாட மாட்டார்