கருப்பு கவுனி அரிசி தீமைகள் || Karuppu Kavuni Rice Benifits in Tamil
கருப்பு கவுனி அரிசி தீமைகள்:
கருப்பு கவுனி அரிசி தோற்றம் || கருப்பு கவுனி அரிசி என்றால் என்ன?
கருப்பு கவுனி அரிசி தீமைகள்:- கருப்பு கவுனி அரிசி வட அமெரிக்காவில் உருவானது. இது ஒரு சாப்பிடக்கூடிய அரிசி வகையாகும். இந்தியாவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் அதிக அளவு இந்த அரிசி விளைவிக்கப்படுகிறது. இது பெயருக்கு ஏற்றது போல் கருமை நிறத்தில் காணப்படுகிறது. இதில், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இயற்கையாகவே ஆக்சிஜனேற்ற சக்தியை கொண்டுள்ள காரணத்தினால் நாம் அன்றாட உபயோகப்படுத்தும் ‘வெள்ளை’ அரிசிக்கு பதிலாக இதை மாற்றி பயன்படுத்தலாம். இந்த கருப்பு கவுனி அரிசியில் ஏராளமான ஆரோக்கிய நிறைந்த சத்துக்களும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இதில், சில மருத்துவ குணங்கள் இருந்தாலும், ஒரு சிலருக்கு சேராமல் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
இதை பண்டைய காலத்தில் பெரும்பாலும் அரச குடும்பத்தார்கள் தான் பயன்படுத்தியுள்ளனர். இந்த கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
கருப்பு கவுனி அரிசியின் உணவு வகைகள்:
• கருப்பு கவனி அரிசி கொண்டு நாம் வெள்ளை அரிசியில் சமைக்கப்படும் உணவுகளான இட்லி, தோசை போன்ற உணவுகள் சமைக்கலாம்.
• நாம் சாப்பிடக்கூடிய சாதத்தையும் கருப்பு கவுனி அரிசி கொண்டு சமைக்கலாம்.
• இனிப்பு பொங்கல், பாயாசம் போன்ற இனிப்பு வகைகளை கருப்பு கவுனி அரிசி கொண்டு நாம் செய்யலாம்.
• கருப்பு கவனி அரிசியில் கஞ்சி செய்து குடிக்கலாம்.
கருப்பு கவுனி அரிசி நன்மைகள் || Karuppu Kavuni Rice Benifits in Tamil
1. புற்றுநோயிலிருந்து பாதுகாக்க:
“ஆன்டி ஆக்சிடென்ட் மூலக்கூறுகள்” இந்த கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவு காணப்படுவதனால் இதில், சமைக்கப்பட்ட உணவுகளை எப்போதாவது சாப்பிடும்போது உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது. ஏற்கனவே, புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும், மருத்துவரின் ஆலோசனைப்படி கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவு வகைகளை சாப்பிடலாம்.
2. இதய ஆரோக்கியத்திற்கு:
கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து LDL கொழுப்பின் அளவை உடலில் குறைக்கிறது. இதய நோய்கள் உருவாக இந்த LDL கொழுப்பு தான் முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த கருப்பு கவுனி அரிசியில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய “ஃப்ரீரேடிக்கல்களை” நீக்க உதவி செய்கிறது. இந்த “ஃப்ரீரேடிக்கல்கள்” புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் உருவாக காரணமாக இருக்கிறது.
கருப்பு கவுனி அரிசியில் புரதம் அதிக அளவு காணப்படுகிறது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி உடலில் அதிக அளவு கொழுப்பு சேராமல் தடுத்து இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.
3. ஆஸ்துமா நோயை குணப்படுத்த:
ஆஸ்தா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரலில் அதிக அளவு “மியூக்கஸ்” எனப்படும் சளி சுரப்பு உருவாகும் போது அவர்களால் சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்படும். கருப்பு கவுனி அரிசி கொண்ட உணவு வகைகளில் ஏதேனும் ஒன்று சாப்பிட்டால் அதில் உள்ள “அந்தோசயனின் சத்துக்கள்” நுரையீரலில் அதிகளவு சளி சுரப்பு ஏற்படாமல் தடுத்து ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறிது நோய் நிவாரணம் தருவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
4. உடல் எடையை குறைக்க || கருப்பு கவுனி அரிசி உடல் எடையை குறைய:
கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுகிறது. இதனால், செரிமானத்தை மெதுவாக நடைபெற செய்கிறது. இதன் மூலம், உடல் எடையை குறைக்க உங்களால் முடியும். ஏனென்றால், இது நீண்ட நேரம் பசி எடுப்பதை தவிர்க்கிறது. இதனால், அதிகமாக நாம் சாப்பிடுவதை நிச்சயம் தடுக்க முடியும்.
5. கொழுப்பை குறைக்க உதவுகிறது:
கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதன் காரணமாக, புரதமும் அதிக அளவில் காணப்படுகிறது. பிறகு உடலுக்கு தேவையான ஆற்றல்களை அவ்வபோது வழங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இதில் உள்ள நார் சத்துக்கள் அதிகளவு பசியுணர்வை தூண்டாமல் இருக்க உதவுகிறது. அதன் காரணமாக நாம் அதிக அளவு உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் கொழுப்பின் அளவும் உடலில் குறைகிறது.
அதிகளவு கலோரிகள் நாம் சாப்பிடாமல் இருக்கும் பட்சத்தில் கொழுப்பின் உருவாக்கமும் குறையும். கருப்பு கவுனி அரிசியில் ஆன்டி ஆக்சிடென்ட் அதிக அளவில் உள்ளது. இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை முற்றிலுமாக நீக்க உதவுகிறது.
6. கண் ஆரோக்கியத்தை பலப்படுத்த உதவுகிறது:
கண் பார்வைக்கு அவசியமான கரோடினாய்டுகள் இந்த கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவில் காணப்படுகிறது. கண் பார்வைக்கு மிக முக்கியமான லூடின் மற்றும் zeaxanthin கண்ணில் காணப்படும் மஞ்சள் நிற நிறங்களாகும். இது கண்களை சூரிய ஒளியில் இருந்து உருவாகும் புற உதாக்கதிர்வீச்சுகளில் இருந்து கண்ணை பாதுகாக்கிறது. எனவே, கருப்பு கவுனி அரிசியில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக சூரிய ஒளியால் கண்ணிற்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.
7. எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது:
அதிகளவு நார்ச்சத்து கருப்பு கவுனி அரிசியில் காணப்படுவதனால் இது உடம்புக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய புரதங்களை கொடுக்கிறது. இதில் உள்ள புரதம் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் எலும்புகளை வலிமைப்படுத்த அதிக அளவு உதவுகிறது.
இதனால், ஆன்டி ஆக்சிடென்ட்கள் எலும்புகளை சேதப்படுத்தும் நிலைமை ஏற்படும் தருணத்தில் ஃப்ரீரேடிகல்களை எதிர்த்து போராடுகிறது. கருப்பு கவுனி அரிசியை சாப்பிடுவதன் மூலமாக எலும்புகள் வலுவாகி திடமாகிறது. இதனால், எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து குறைகிறது.
8. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த:
கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவு நார் சத்துக்கள் மற்றும் புரதங்கள் காணப்படுகின்றது. இதனால், இந்த நார் சத்துக்கள் உடலில் செரிமானத்தை மெதுவாக நடைபெற செய்கிறது.
இன்சுலின் எனப்படுவது இரத்த சர்க்கரையை செல்லுக்குள் போக அனுமதிக்கும் ஹார்மோன் ஆகும். இந்த கருப்பு கவுனி அரிசியில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகளவு இருப்பதன் காரணமாக இன்சுலியை எதிர்ப்பை குறைக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் பெருமளவில் உதவுகிறது.
இன்சுலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் பண்புகள் கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவில் காணப்படுகிறது.
9. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது:
கருப்புக் கவுனி அரிசியை நாம் தினமும் உட்கொள்வதன் மூலம் நம் உடலில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகிறது. இதனால், நம் உடல் பல்வேறு வகையான நோய்கள் இருந்து தப்பிக்க முடியும். இதற்கு காரணம், இதில் உள்ள நார் சத்துக்கள். ஏனென்றால், நார்ச்சத்துக்கள் செரிமானத்தை சீராக மேம்படுத்த உதவுகிறது. இது குடல் ஆரோக்கியத்தை சீராக்கவும், உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அதிக அளவில் உதவி செய்கிறது.
10. நீரிழிவு நோயை குணப்படுத்த || கருப்பு கவுனி அரிசி சர்க்கரை நோய்:
ஒரு சில நேரங்களில் கருப்பு கவுனி அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் ஏற்படாது. இதற்கு காரணம், இந்த அரிசியின் மேல் இருக்கும் கருப்பு நிற பொட்டுக்களில் குளுக்கோ சத்து மிகவும் அதிகளவில் காணப்படுகிறது.
இந்த அரிசியில் முன்பு சொன்னது போல நார் சத்துக்கள் அதிகம் இது இந்த குளுக்கோஸ் சத்துக்களை உடலில் சேர உதவி செய்கிறது. இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக இருக்குமாறு உதவி செய்கிறது. இதனால், நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
கருப்புக் கவுனி அரிசி தீமைகள்:
• இதில் பக்க விளைவுகளாக ஈயம், ஆர்சனிக் மற்றும் காட்மியம் போன்ற கன உலோகங்கள் அதிக அளவில் இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்படுகிறது. இதனால் இந்த அரிசியை அதிக அளவு பயன்படுத்தினால் நிச்சயம் நம் உடலுக்கு ஆபத்து ஏற்படும். எனவே, இந்த அரிசியை சரியான அளவில் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
• கருப்பு கவுனி அரசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்பட்டாலும் சில தீமைகளும் காணப்படுகிறது. இந்த கருப்பு கவுனி அரிசியை தொடர்ந்து அளவிற்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் அரிசியில் உள்ள கன உலோக மூலக்கூறுகள் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
மருத்துவ குறிப்பு:
கருப்பு கவுனி அரிசி 1-கிலோ விலை || கருப்பு கவுனி அரிசி விலை:
1-கிலோ கருப்புக் கவுனி அரிசியின் விலை 160-ரூபாய் முதல் விற்கப்படுகிறது.
கவுனி அரிசி தினமும் சாப்பிடலாமா?
கருப்புக் கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகின்றன காரணத்தினால் நாம் எந்த உணவு சாப்பிட்டாலும் அதிக அளவு பசி உணர்வை தூண்டுவதில்லை. இதனால், கருப்பு கவுனி அரிசியால் செய்யப்பட்ட உணவு வகைகளை வாரத்திற்கு 2 அல்லது 3-முறை எடுத்துக் கொள்வது சிறந்தது. அதற்கும் மீறி தினமும் இதனை சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஆபத்துக்கள் ஏற்படும்.
கருப்பு கவுனி அரிசி கஞ்சி பயன்கள்:
கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து LDL கொழுப்பின் அளவை உடலில் குறைக்கிறது. இதய நோய்கள் உருவாக இந்த LDL கொழுப்பு தான் முக்கிய காரணமாக இருக்கிறது.
இதனால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு நேரமாவது கருப்பு கவுனி அரிசியை கஞ்சி செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
கருப்பு கவுனி அரிசி சமைப்பது எப்படி?
• கருப்புக் கவிஞரீஸ் என் அன்பு கழுவி ஒரு பாத்திரத்தில் சுமார் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு ஒரு கப் அரிசிக்கு மூன்று லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும் ஒரு 40 நிமிடங்கள் சாதம் நன்றாக வேக வேண்டும். சாதம் வெந்ததும் இறக்கி அப்படியே கஞ்சியாகவும் குடிக்கலாம் அல்லது கஞ்சியை வடித்து விட்டு உங்களுக்கு பிடித்த குழம்பை சேர்த்தும் சாப்பிடலாம்.