இனிமேல் ஐபிஎல் டிக்கெட் நேரடி முறையில் விற்பனை செய்யப்படாது || சி.எஸ்.கே அணி நிர்வாகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் என்ன காரணம்
இன்னும் சரியாக 10-நாட்களில் நடக்க இருக்கும் 2024-ஆம் ஆண்டுக்கான 17-வது சீசன் ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் சேப்பாக்கம் மைதானத்தில் நேரடியாக விற்பனை செய்யப்படாது என்று கூறப்பட்டுள்ளது. இது ரகசியருடைய மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற 50-உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்பட்டது என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.
இந்திய அணி விளையாடிய எந்த ஒரு போட்டிக்கான டிக்கெட்டுகளும் அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிக்கெட் விற்பனையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. ரசிகர்கள் பலரும் டிக்கெட்டுகளை VIP-களுக்கு விற்று விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் கூறியுள்ளனர்.
2024-ipl trending news in tamil:
இந்த நிலையை தான் தற்போது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் டிக்கெட் விற்கப்பட்ட முறையிலேயே பின்பற்ற பி.சி.சி.ஐ நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
17-வது சீசன் கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சி.எஸ்.கே அணியும் அதனை எதிர்த்து நட்சத்திர அணியாக பார்க்கப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் களம் இறங்க உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கும் இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால், தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் ஆக இது இருக்கலாம் என்றும், அதற்கு ஏற்றது போல் தோனியும் விண்டேஜ் ஹேர் ஸ்டைலில் தற்போது களமிறங்க உள்ளார். இதனால், அவரைக் காண பல கோடி ரசிகர்கள் திரண்டு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2024-ipl news in tamil:
இந்த நிலை தான் பலரும் ஐ.பி.எல் தொடருக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என்ற கேள்விகளை இணையத்தில் கேட்டு வருகின்றனர். ஏனென்றால், கடந்த சீசனில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு தனி வரிசை இருந்தது.
இதனால், தங்கள் வீட்டுப் பெண்களை வரிசையில் நிறுத்தி ரசிகர்கள் டிக்கெட்டை பெற்று போட்டியை கண்டு களித்தனர். அது போன்று பிளாக்கிலும் சி.எஸ்.கே போட்டிக்கான டிக்கெட் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தான் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணி விளையாடும் அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்களும் ஆன்லைன் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது.
இது சி.எஸ்.கே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
Paytm இன்சைடர் செயலி மூலமாக ரசிகர்கள் சி.எஸ்.கே போட்டிக்கான டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் எனவும், டிக்கெட்டுகள் விற்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பிளாக்கில் சி.எஸ்.கே போட்டிக்கான டிக்கெட் அதிகளவு விற்க வாய்ப்பு உள்ளது.