ADVERTISEMENT
new ration card apply in tamil

புதிய ரேஷன் கார்டு | new ration card apply in tamil

புதிய ரேஷன் கார்டு | new ration card apply in tamil

ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி? New ration card apply online..!!

new ration card apply in tamil

How to apply new ration card in tamil :-

new ration card apply in tamil:- பொதுவாக நாம் சந்திக்கின்ற மிகப்பெரிய பிரச்சனை தான் அரசு அலுவலகங்களில் நமக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள் ஆன குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற பல வகையான சான்றிதழ்களை அந்த அளவுகளில் பெறுவதுதான். இருப்பினும் இதுமாதிரியான சான்றிதழ்களை நாம் வீட்டில் இருந்தபடியே மிக எளிமையாக ஆன்லைன் மூலம் அப்ளை செய்து தர முடியும்.

அந்த வகையில் இந்தப் பதிவில் புதிய ரேஷன் கார்டு(New ration card apply in tamil) ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே எப்படி அப்ளை செய்து தரலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க.

ரேஷன் கார்டு அப்ளை செய்வது எப்படி?

ADVERTISEMENT

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tndps.gov.in/ என்ற இணையதளம் மூலம் ரேஷன் கார்டை ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே அப்ளை செய்து பெறலாம். இந்த TNPDS இணையதளம் மூலம் எப்படி குடும்ப அட்டை விண்ணப்பித்து பெறலாம் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

குறிப்பு:.

ஆன்லைன் மூலம் புதிதாக ரேஷன் கார்டு அப்ளை செய்ய நினைப்பவர்கள், தங்களுடைய பெயர் வேறு எந்தக் குடும்ப அட்டையிலும் இருக்கக்கூடாது. எனவே தங்களுடைய பெயரை குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கம் செய்து விட்டுதான். புதிய குடும்ப அட்டைக்கு அப்ளை செய்ய வேண்டும்.

நியூ ரேஷன் கார்டு அப்ளை Step :1

முதலில்https://www.tndps.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இப்போது TNPDS-இன் முகப்புப் பக்கம் ஓபன் ஆகும். அதில் மின்னணு அட்டை சேவைகள் என்று இருக்கும். அவற்றில் மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை தேர்வு செய்யுங்கள்.

நியூ ரேஷன் கார்டு அப்ளை Step : 2

மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை தேர்வு செய்தபின் மேல் காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல், மற்றொரு பெயர் ஓபன் ஆகும். அதில் குடும்ப தலைவர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், முகவரி, எந்த மாவட்டம், எந்த மண்டலம், அல்லது வட்டம், எந்த கிராமம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண், கிராமம் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அந்த பேஜ்ஜில் டைப் செய்ய வேண்டும்.

நியூ ரேஷன் கார்டு அப்ளை Step : 3

அதன் பிறகு குடும்ப தலைவர் புகைப்படம் என்ற இடத்தில் குடும்ப தலைவரின் புகைப்படத்தை 5.0 MB அளவிற்கு உள்ள jpeg,jpg,pngபுகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

நியூ ரேஷன் கார்டு அப்ளை Step : 4

குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர் விவரங்களை சேர்ப்பதற்கு, உறுப்பினரை சேர்க்க என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். அவற்றை கிளிக் செய்ததும் மேல் காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் ஒரு படிவம் ஓப்பன் ஆகும். அவற்றில் முதலில் குடும்ப தலைவரின் விவரங்களை உள்ளிட வேண்டும். அதாவது குடும்ப தலைவரின் பிறந்த தேதி ,பால் ,இனம் ,தேசிய இனம் ,உறவுமுறை ,தொழில் ,மாத வருமானம் ,வாக்காளர் அட்டை எண் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.

நியூ ரேஷன் கார்டு அப்ளை Step : 5

அதன்பிறகு மற்ற ஆவணங்கள் என்ற இடத்தில் குடும்ப தலைவரின் ஆதார் அட்டையின் இரண்டு பக்கத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் வேண்டும் .அதன் பிறகு குடும்ப உறுப்பினர்களை சேமி என்ற ஒரு பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் சேமிக்கப்படும். பின் எவ்வாறு தங்கள் குடும்பத்திலுள்ள எத்தனை உறுப்பினர்கள் விவரங்களை உள்ளிட வேண்டும். அவர்களின் விவரங்களையும் இவ்வாறு அதாவது அவர்களின் பிறந்த தேதி, பாலினம், தேசிய என்னும், உறவுமுறை, தொழில், மாத வருமானம், வாக்காளர் அட்டையில், ஆதார் எண் போன்ற விவரங்களை உள்ளிட்டு சேர்த்துக் கொள்ளலாம்.

நியூ ரேஷன் கார்டு அப்ளை Step : 6

அடுத்ததாக அட்டை தேர்வு தேர்ந்தெடுக்கவும் என்ற இடத்தில் பண்டகமில்லா அட்டை, அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, மற்றவை என நான்கு வகையான அட்டைகள் இருக்கும். அவற்றில் தங்களுக்கு என்ன அட்டை வேண்டுமோ அந்த அட்டையை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

நியூ ரேஷன் கார்டு அப்ளை Step : 7

அதன் பிறகு குடியிருப்பு சான்று இருக்கும்.அவற்றில் ஆதார் அட்டை, மின்சாரக்கட்டணம் ,வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, சொந்த வீடு இருந்தால் அதன் சொத்துவரி, பாஸ்போர்ட் என்ற சில ஆப்ஷன்கள் இருக்கும் அவற்றில் ஏதாவது ஒரு குடியிருப்பு சான்று ஆவணங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள். பின் தேர்வு செய்த அந்த ஆவணத்தின் நகலை Choose file என்ற இடத்தில் கிளிக் செய்து அந்த ஆவணத்தை பதிவு ஏற்ற வேண்டும். (குறிப்பு: நீங்கள் 1.0 MB அளவு  png, gif, jpeg மற்றும் pdf  கோப்புகளை பதிவேற்றம் முடியும்)

குறிப்பு : தற்போதைய முகவரி ஆதார் அடையாள அட்டையில் உள்ள முகவரியில் இருந்து வேறு பட்டிருந்தால் முகவரி சான்று தேவை.

நியூ ரேஷன் கார்டு அப்ளை Step : 8

அடுத்ததாக எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள் உள்ளிட வேண்டும் தங்களிடம் எரிவாயு இணைப்பு உள்ளது என்றால் மேலே காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் ஒரு படிவம் இருக்கும் மாவட்டத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும் .

ADVERTISEMENT

நியூ ரேஷன் கார்டு அப்ளை Step : 9

new ration card apply in tamil:- உறுதிப்படுத்துதல் என்பதை இப்போது கிளிக் செய்யுங்கள் தங்கள் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்கள் சரியாக இருந்தால், பதிவு செய் என்பதை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

பதிவு செய்தபிறகு தங்களுடைய கைபேசி எண்ணிற்கு ஒரு குறிப்பு எண் அனுப்பப்படும், அந்த குறிப்பு எண்ணை தாங்கள் பத்திரமாக நோட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த எண்ணை வைத்து தான் தங்களுடைய மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்க முடியும் .எனவே இந்த குறிப்பு என்னை பத்திரமாக நோட் செய்து வைத்திருங்கள்.

நியூ ரேஷன் கார்டு அப்ளை Step : 10

new ration card apply in tamil:- மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலையை அறிய, www.tndps.gov.in இணையத்தின் முகப்பு பக்கத்திற்கு திரும்பவும் செல்லுங்கள் .அவற்றில் மின்னணு அட்டை சேவைகள் என்ற இடத்தில் மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது மேல் காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் ஒரு பேர் திறக்கப்படும் அவற்றில் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்து பின் பதிவு செய்ய என்பதை கிளிக் செய்யுங்கள்.

நியூ ரேஷன் கார்டு அப்ளை Step : 11

new ration card apply in tamil:- பிறகு மேல் காட்டப்பட்டது போல் திறக்கப்படும் தாங்கள் விண்ணப்பித்த படிவத்தை டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ளலாம். இந்த விண்ணப்பப் படிவம் நாம் விண்ணப்பம் செய்ததற்கான ஒரு ப்ரூவ் தான். இருந்தாலும் நாம் புதிதாக ஒரு ரேஷன் கார்டு அப்ளை செய்தால் அதற்கு நான்கு அல்லது ஐந்து வகையான செயல் முறைகள் (processing) நடைபெறும். அவற்றில் ஒரு செயல்முறை தங்கள் வீட்டிற்கு நேரிடையாக வந்து சோதனை செய்வார்கள்.

இந்த அனைத்து processing நடைபெற்ற பிறகு இறுதியாக தங்களுடைய கைபேசி எண்ணிற்கு புதிய பதிவு எண் அனுப்பப்படும். அந்த பதிவு எண்ணை எடுத்துக்கொண்டு தங்கள் ஊரில் அருகாமையிலுள்ள விநியோக முயற்சிகளுக்கு சென்று தங்களுடைய புதிய ரேஷன் கார்டினை பெற்றுக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

Leave a Reply