ADVERTISEMENT
விநாயகர் அகவல்

விநாயகர் அகவல் || Vinayagar Agaval in Tamil

விநாயகர் அகவல் || Vinayagar Agaval in Tamil

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல் வரிகள் || Vinayagar Agaval in Tamil:

விநாயகர் அகவல்:- சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாட

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்ப

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

ADVERTISEMENT

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

ADVERTISEMENT

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே

முப்பழ நுகரும் மூஷிக வாகன

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டி

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

ADVERTISEMENT

மாயாப் பிறவி மயக்கம் அறுத்து

திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி

ADVERTISEMENT

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளி

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து

ADVERTISEMENT

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்து அங்குச நிலையும்

ADVERTISEMENT

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்து

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி

குண்டலி யதனிற் கூடிய அசபை

ADVERTISEMENT

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலை

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

ADVERTISEMENT

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டி

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

கருத்தினில் கபால வாயில் காட்டி

ADVERTISEMENT

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன

ADVERTISEMENT

அருள்தரும் ஆனந்தத்தை அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந்தம்அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டி

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்

ADVERTISEMENT

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்தி

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

ADVERTISEMENT

வித்தக விநாயக விரைகழல் சரணே!!!

விநாயகர் அகவல் பலன்கள் || vinayagar agaval lyrics in tamil:

விநாயகர் அகவல்:- அகவல் என்பது “அழைத்தல்” என்று பொருள். விநாயகர் அகவல் என்று அழைக்கப்படும் இந்த பாடல் விநாயகரின் அருள் வேண்டி விநாயகரை அழைத்து போற்றி ஆசிரியப்பாவில் பாடப்பட்டது.

இந்தப் பாடல் ஸ்தோத்திரப் பாடலாக மட்டுமில்லாமல்,ஞானத்தை எளிமையாக விளக்கும் சாஸ்திர பாடலாகவும் இயற்றப்பட்டுள்ளது. வினையாகரின் பெருமைகளையும் அவரை பல்வேறாக துதித்தும் போற்றி இயற்றப்பட்ட பாடலாகும்.

விநாயகர் என்பவர் அகமும்,புறமும், உள்ளமும் ஈசனை காட்டி அளவில்லா சந்தோஷத்தை அளித்து, துன்பங்களை நீக்கி,அருள்வழி காட்டும் கண்கண்ட தெய்வம் ஆவார்.

அளவில்லாத ஞானத்தை மனதிற்குள் காட்டி, உண்மையாக பக்தர்களுக்கு நன்மையை உண்டாக்கி, உண்மையான பொருளை நெஞ்சிலே உருவாக்கி, நம்மை ஆட்கொள்ளும் ஞான வடிவான விநயாக பெருமானே…!! பரிமள சுகந்தமான உமது பாதர விந்தங்களுக்கு சரணம் என்கிறது இந்த பாடல்.

விநாயகர் அகவல் சிறப்பு || விநாயகர் அகவல் பாராயணம்:

ஈசன் கொடுத்த வெள்ளை யானையின் மீது சுந்தரமூர்த்தி நாரானாரும், வெள்ளை குதிரை மீது சேரமான் பெருமாள் நாயனாரும் தங்களது பிறவியின் பயனை முடித்துக் கொண்டு வான் வழியே திருக்கயிலைக்கு பயணம் செய்து கொண்டிருந்தனர்.

ADVERTISEMENT

அந்த தருணத்தில் தான் திருக்கோவலூரில் உள்ள விநாயகர் கோவிலில் கணபதியை பூஜை செய்து கொண்டிருந்தார் ஔவையார். அப்போது இவர்கள் இருவரும் செல்வதை பார்த்த ஔவையாருக்கும் திருகயிலைக்கு செல்லும் எண்ணம் ஏற்பட்டது.

இதனால்,தன்னுடைய ஆசையை பிரார்த்தனையாக்கி விநாயகரை பூஜித்து துதி பாடல் ஒன்றை பாடினார். அந்தப் பாடலை விநாயகர் அகவல் ஆகும். இந்த பாடலை ஔவையார் பாடி முடித்த அடுத்த நிமிடமே ஒரு அற்புத நிகழ்ச்சி நடந்தது.

ஔவையாரின் பூஜை மற்றும் அவர் பாடிய துதி பாடலையும் கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்த விநாயாகர் தன் துதிக்கையால் அவரைத் தூக்கி ஒரே கணத்தில் கையில் சேர்த்தார்.இந்த நிகழ்வு நடந்த பிறகு சுந்தரரும்,சேரமான் பெருமானும் கைலைக்கு வந்து சேர்ந்தனர். ஔவையாரை கண்ட இருவரும் இது எப்படி சாத்தியமாகும் என்று கேள்வியை எழுப்பினார்கள்.

அதற்கு ஔவையார்,

“மதுரமொழி நல்உமையாள் புதல்வன் மலர்ப்பதத்தை

முதிர நினைய வல்லார்க்கரிதோ முகில் போன் முழங்கி

ADVERTISEMENT

அதிரநடந்தும் யானையும் தேரும் அதன் பின்வருங்

குதிரையுங் காதங் கிழவியும் காதங்குல மன்னரே!!!”

என்று கூறினார் அதாவது,“மதுர மொழி கொண்ட உமையின் புதல்வரான விநாயகரை” தாம் துதித்து பாடியதாலும் அதனால், அவர் பெருமகிழ்ச்சி அடைந்ததாலும் அவருடைய அருளால் யானைக்கும், குதிரைக்கு முன்பாகவே தான் கயிலைக்கு வந்து சேர முடிந்தது என்று கூறினாராம்.

இது போன்று ஔவையாரின் விருப்பத்தை நிறைவேற்றிய விநாயகர் பெருமான் இந்த பாடலின் பொருளை உணர்ந்து கடுமையான விரதத்தில் பூஜித்து பாடும் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பும் எல்லாவிதமான விருப்பங்களையும், அவர்கள் வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறார் என்பது ஐதீகம்.

சீத களபச் செந்தா மரைப்பூம் விநாயகர் அகவல் || விநாயகர் அகவல் pdf:

விநாயகர் அகவல்:-விநாயகர் அகவலை தினசரி பூஜித்து பாடி வந்தால் நீண்ட நாட்கள் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நீங்கி சுபமாக நடைபெறும்‌. விருப்பங்களும், பிராத்தனைகளும் கூடிய விரைவில் நிறைவேறும். குழந்தைகள் இதை பூஜித்து பாடினால் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

ஆண்கள் வேலையில் மேல் பதவிக்கு செல்ல வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது. சுயதொழில் செய்யும் நபர்களும் அதில் சிறந்து விளங்குவார்கள். பெண்கள் மங்கல வாழ்வு பெற்று மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். சுருக்கமாக கூற வேண்டுமானால், பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் புண்ணிய பாடல் தான் இந்த விநாயகர் அகவல் பாடலாகும்.

ADVERTISEMENT

Read Also:- திருக்குறள் சிறப்புகள்

Leave a Reply