ADVERTISEMENT
ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு செய்தி

ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு செய்தி || தமிழக அரசின் அதிரடியான திட்டம்

ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு செய்தி || தமிழக அரசின் அதிரடியான திட்டம்

ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு செய்தி

இந்தியா மட்டுமில்லாமல், தமிழகத்தில் தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டத்தின் படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளின் மூலமாக அரிசி இலவசமாகவும், சமையல் பருப்பு, சீனி, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் மிகவும் குறைவான, மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவு பயன்பெற்று வருகின்றனர். மேலும் ரேஷன் அட்டையின் மூலம் தமிழக அரசின் பல்வேறு சலுகைகளை பெற்று மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இந்த நிலையில் தான் மகளிர் உரிமைச் திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட தருணத்தில் இதுவரை ஒரே குடும்பமாக இருந்த நிறைய பேர் தனி ரேஷன் கார்டு விண்ணப்பிக்க ஆரம்பித்தனர்.

இதுபோன்று, புதிதாக திருமணமானவர்களும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்க ஆரம்பித்தனர். இதனால், ரேஷன் கார்டுகளின் பதிவு எண்ணிக்கை அதிகளவில் குவிந்த வண்ணம் காணப்பட்டது. இதனால், தமிழக அரசு விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆரம்பித்தது.

 இந்த நிலையில் தான் ஏற்கனவே இணைய வழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதி உடைய 45,510 புதிய ரேஷன் கார்டுகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளின் உரிமையாளர்களுக்கு தொலைபேசியின் வாயிலாக மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இது போன்ற புதிய ரேஷன் கடைகளை வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ அல்லது உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவரை அனுப்பியோ பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு ரேஷன் கடை கடை ஊழியர்களின் கைரேகை வைத்து சரி பார்ப்புக்கு பின், ரேஷன் கார்டு நபர்கள் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 இந்த நிலையில் நான் மகளிர் உதவி தொகை 2024-2025 ஆம் ஆண்டு திட்டத்திற்கு 13,720 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கூடுதலாக 7-லட்சம் ரூபாய் மகளிருக்கு உதவி தொகையாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க அரசு கூடிய விரைவில் செய்திகள் கூறப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.

இதன் காரணமாக புதிய குடும்ப அட்டை வாங்கும் மகளிருக்கு கண்டிப்பாக நிதி உதவித்தொகை வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி, தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மகளிருக்கு வழங்கப்படும் மாதம் 1000-ரூபாயை திட்டம் இன்னும் அதிகமாக வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Leave a Reply