ADVERTISEMENT
மார்பக புற்றுநோயின் 12 அறிகுறிகள்

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் || Breast Cancer Symptoms in Tamil

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் ||Breast Cancer Symptoms in Tamil

மார்பக புற்றுநோயின் 12 அறிகுறிகள்

மார்பக புற்றுநோயின் 12 அறிகுறிகள்:

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்:-  இன்று பெண்களுக்கு உடம்பில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் பாதிக்க கூடிய ஒரு கொடிய நோய் தான் மார்பக புற்றுநோய். இந்த மார்பக புற்றுநோயை ஆரம்ப காலகட்டத்தில் அறிந்து கொள்வது சற்று கடினமான செயல். ஆனால், நாளடைவில் சிறு அறிகுறிகள் ஏற்படுவதன் மூலம் இதனை நன்றாக கண்டு பிடித்து விடலாம்.

இது போன்று மார்பக புற்றுநோய் வந்தால் என்ன செய்வது? அதன் அறிகுறிகள் எவ்வாறு இருக்கும்? இதற்கு எப்படி பரிசோதனை செய்து தீர்வு காணலாம் என்பதை பற்றிய விரிவான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மார்பக புற்றுநோய் என்றால் என்ன?

மார்பக புற்றுநோய் என்பது பெண்களின் மார்பகத்தில் உருவாகும் புற்றுநோய் ஆகும். மார்பக புற்று நோய்கள் மரபணு மாற்ற காரணங்களால் ஏற்படுகிறது. இது போன்ற புற்று நோய்கள் எங்கிருந்து உருவாகும் என்ற முறையில் இரண்டு வகை புற்றுநோயாக வகைப்படுத்தி உள்ளனர்.

1. லோபுலர் கார்சினோமா புற்றுநோய்

2. டக்டல் கார்சினோமா புற்றுநோய்

ADVERTISEMENT

3. இந்த இரண்டை தவிர சுமார் 18-வகையான பொதுவான மார்பக புற்றுநோய் உள்ளது.

மார்பக புற்றுநோய் வர காரணம்:

மார்பக புற்று நோய்க்கான காரணங்கள் இதுவரை யாராலும் சரியாக கூற முடியவில்லை. சிலருக்கு வயது முதிர்வு போன்றவை காரணமாக மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.

BRCA1 மற்றும் BRCA2 போன்ற மரபணுக்கள் அதிகளவு காணப்பட்டாலும் மார்பக புற்று நோயை உருவாக்கும். இந்த மார்பக புற்றுநோயானது ஆண்களை விட பெண்களில் அதிக அளவு காணப்படுகிறது.

முறையாக தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தாலும் மார்பக புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கிறது. இதனால், குறைந்தது இரண்டு வருடமாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியம்.

கொழுப்புகள் கலந்த உணவை அதிக அளவு எடுத்துக் கொள்வது மற்றும் ஆல்கஹாலை உட்கொள்வதன் மூலமாக மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

புகை பிடித்தல், புகையிலை பழக்கம் போன்றவை பயன்படுத்துவதன் மூலமாகவும் மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.

ADVERTISEMENT

மார்பக புற்றுநோய் எந்த வயதில் வரும்:

* பெண்களுக்கு குறிப்பாக மரபணு ரீதியாக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. புரியும்படி கூற வேண்டுமானால், உங்கள் வீட்டில் தாய் அல்லது சகோதரிகள் யாரேனும் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கூட உங்களுக்கு புற்றுநோய் வருவதற்கு அதிகம் அளவு வாய்ப்புஉள்ளது.

* பெண்கள் 30-வயது கடந்து விட்டாலே இந்த மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதனால்,30-வயதுக்கு பிறகு அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகவும் முக்கியம்.

* மிக மிக இளம் வயதில் பூப்படையும் பெண்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பிறகு உடல் எடை அதிகமாக காணப்படும் பெண்கள் போன்றவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.

* பெண்கள் வயதான நிலையில் கர்ப்பம் தரித்தவர்கள் மற்றும் மன உளைச்சல் அதிகளவில் காணப்படுபவர்களுக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம்.

* பிறந்த குழந்தைகளுக்கு சரியான முறையில் தாய்ப்பால் கொடுக்காத காரணத்தினாலும் மார்பக புற்றுநோய் ஏற்படும் பாதிப்பு உள்ளது. இதனால், உங்களால் முடிந்த அளவுக்கு தாய்ப்பால் கொடுத்து விடுவது சிறந்தது.

* உள்ளாடைகள் இறுக்கமான அணிந்தால் மார்பகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக மார்பகத்தை இறுக்கமாக அழுத்தும் அளவிற்கு உள்ளாடைகள் (ப்ராக்களை) அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ADVERTISEMENT

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்:

* மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறி மார்பகத்தில் வலியில்லாத கட்டிகள் உருவாகும். இது சில சமயத்தில் வலியை ஏற்படுத்தினாலும் இல்லை என்றாலும் கூட மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனால், இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் முறையான சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம்.

* மார்பகத்தை சுற்றியுள்ள தோல் பகுதிகளில் சுருக்கம், குழிகள் மற்றும் தோல் சிவந்து ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இது போன்று காணப்பட்டால் இது மார்பக புற்றுநோய்க்கான அறிகுறி ஆகும்.

* ஒரு மார்பகத்தை விட இன்னொரு மார்பகம் பெரிதாக இருப்பது போன்று காணப்படும்.

* மார்பக புற்றுநோயின் பொதுவான அறிகுறி மார்பகம் மற்றும் அக்குள் பகுதிகளில் வலியில்லாத கட்டிகள் உருவாகும்.

* திடீரென மார்பகம் ஊதா அல்லது சிவப்பு நிறத்தில் காணப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.

* முளைக்காம்பில் இருந்து தாய்ப்பால் தவிர வேறு ஏதேனும் திரவங்கள் குறிப்பாக இரத்தம் இதுபோன்று வெளியேறினால் மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

ADVERTISEMENT

* உங்கள் குடும்பத்தில் அம்மா, சகோதரிகள்,பாட்டி போன்ற யாராவது ஒரு நபருக்கு புற்றுநோய் இருந்தால் கூட உங்களுக்கு ஏற்படவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

* உடல் எடை திடீரென குறைந்தால் கூட புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

* மார்பகம் மற்றும் முலைக்காம்பு பகுதிகளில் எரிச்சல், அரிப்பு மற்றும் அதிகளவு வெப்பம் போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் அது மார்பக புற்று நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இதனால், இதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.

* மார்பகத்தில் தொடர்ச்சியாக வலி ஏற்பட்டால் அதனை சிறிதும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

* முளைகாம்பில் வலி ஏற்பட்டால் அல்லது மார்பகத்தின் முளைக்காம்பு உள்நோக்கி திரும்பி இருப்பதும் புற்று நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

* மார்பகங்களில் வலி, வீக்கம் ஏற்படுதல்,நெறி கட்டுதல், மார்பக காம்புகள் உள்ளங்கிய நிலையில் காணப்படுதல் போன்றவை மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும்.

ADVERTISEMENT

early symptoms breast cancer in females || பெண் மார்பக புற்றுநோய் அறிகுறிகள்:

1. இரவு நேரத்தில் அதிகளவு வியர்ப்பது மார்பக புற்றுநோயில் ஒரு அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

2. பசியின்மை ஏற்பட்டு திடீரென உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் மெட்டாஸ்டாடிக் பிரஸ்ட் கேன்சரின் அறிகுறிகள் ஆகும்.

மார்பக புற்று நோய் சுய பரிசோதனை:

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்:-  சுய பரிசோதனை செய்யும் பொழுது ஏதேனும் கட்டிகள் இருந்தால் நீங்கள் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால், 80 சதவீதம் கட்டிகள் புற்றுநோய் உருவாக்கும் கட்டிகள் இல்லை.

குறிப்பாக, குளிக்கும்போதோ அல்லது கைகளில் லோசன் போன்றவற்றை வைத்துக்கொண்டோ இந்த பரிசோதனை செய்யக்கூடாது. அப்படி பரிசோதனை செய்யும்போது ஏதேனும் கட்டிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

1) பார்வையிடுதல்:

ஒரு கண்ணாடி முன்பாக நீங்கள் நின்று கொண்டு மார்பகத்தின் வடிவம் நிறம், சருமம் போன்றவற்றையெல்லாம் நன்றாக பார்வையிட வேண்டும்.

* வடிவம் – முதலில் மார்பகத்தை ஒன்றுடன் ஒன்று நன்றாக ஒப்பிட்டு பார்க்க வேண்டும் இதில் ஒரு மார்பகத்தை விட மற்றொரு மார்பகம் சற்று பெரிதாக காணப்படலாம் எனவே இதை நன்றாக கவனிக்க வேண்டும்.

ADVERTISEMENT

* சருமம் – மார்பகத்தை சுற்றியுள்ள சருமம் ஆரஞ்சு நிறத்தில் காணப்படுதல், சிவந்து போதல், சொறி, சிரங்கு,பக்குகள் போன்றவை காணப்படலாம்.இதையும் நன்றாக கவனிக்க வேண்டும்.

2) தொடுதல்:

உங்களது வலது பக்க மார்பகத்தை இடது பக்கமாக சுழற்றிப் பாருங்கள். இடது கையை கொண்டு சுழற்றும்போது அதில் இருக்கும் மூன்று விரல்களை பயன்படுத்தி சிறிய அளவில் சுழற்ற வேண்டும். இப்படி ஒவ்வொரு முறையும் சுழற்றும்போது அழுத்தத்தை மாற்றி மாற்றி சுழற்றுங்கள்.

இது போன்று 3-முறை சுழற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு முறை மிதமாகவும்,மறுமுறை நடுத்தரமாகவும், அடுத்த முறை ஆழமாகவும் சுழற்ற வேண்டும். இப்படி நீங்கள் சுற்றும் போது அதில் உள்ள திசுக்களை நன்றாக கவனிக்க முடியும்.

மார்பக கட்டி அறிகுறிகள்:

* முளைக்காம்பு பகுதிகளில் வீக்கம் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுதல். சில நேரங்களில் வழியில்லாத கட்டிகள் இருப்பது போல் உணருதல்.

•மார்பகங்களின் முலைக்காம்புகளில் சிவந்த நிறத்தில் காணப்படுதல்.

* முளைக்காம்பு பகுதியில் இருந்து தாய்ப்பால் தவிர மஞ்சள் நிற திரவம்,அடர் பழுப்பு நிற திரவம் அல்லது இரத்தம் போன்றவை வெளியேறுதல்.

ADVERTISEMENT

மார்பக புற்றுநோய் குணமாக:

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்:- மார்பகப் புற்று நோய்க்கான சிகிச்சை நோயாளிகளின் வயது மற்றும் புற்றுநோயின் நிலையை பொறுத்து செய்து அளிக்கப்படுகிறது.

மார்பக புற்று நோய்க்கு வழக்கமாக செய்யப்படும் சிகிச்சை அறுவை சிகிச்சை தான். இதை தவிர கதிர்வீச்சு சிகிச்சை, ஹீமோதெரபி போன்ற சிகிச்சைகள் மார்பக புற்று நோய்க்கு அளிக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில மருந்துகளும் புற்று நோயை குணப்படுத்த அளிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு முன்னதாக செய்யப்படும் சிகிச்சைகள் அனைத்தும் “நீயோட் ஜூவண்ட் தெரபி” என்று அழைக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நுண்ணிய கட்டி செல்களை வெளியேற்றி அழிப்பதற்காக கதிர்வீச்சு சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக நுண்ணிய கட்டிகளை அழித்து புற்றுநோயை குணப்படுத்த முடியும் என மருத்துவர்களால் கூறப்படுகிறது.

மருத்துவ குறிப்பு || மார்பக புற்றுநோய் படங்கள்:

மார்பகப் புற்று நோய் என்றால் என்ன?

மார்பக புற்றுநோய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு புற்றுநோய் ஆகும். இது மார்பக திசுக்களில் இருந்து உருவாகிறது. இது மார்பகத்தை சுற்றி பால் சுரக்கும் சுரப்பி நாளங்களின் முலைக்காம்பு பகுதிகளில் ஏற்படுகிறது.

மார்பக புற்று நோயின் முதல் அறிகுறி என்ன?

மார்பக புற்றுநோயின் முதல் அறிகுறியாக மார்பகத்தை சுற்றியுள்ள பகுதி வீக்கம் அடைந்து காணப்படும். அதுமட்டுமில்லாமல்ல் வலியில்லாத கட்டிகள் இருப்பதை உணர முடியும்
இது மார்பக புற்றுநோயின் முதல் அறிகுறி ஆகும்.

ADVERTISEMENT

மார்பக புற்றுநோய் கட்டி எப்படி இருக்கும்?

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்:- மார்பகப் புற்றுநோய் கட்டிகள் அளவு, வடிவம், அமைப்பு ஆகியவற்றின் மூலம் வேறுபட்டு காணப்படும். இது பட்டாணி வடிவத்தில் சிறியதாகவும் அல்லது பெரியதாகவும் கூட காணப்படலாம். பல மார்பக கட்டிகள் வலியை ஏற்படுத்துவது கிடையாது.

Read Also:- தைராய்டு அறிகுறிகள் பெண்கள்

Leave a Reply