ADVERTISEMENT
மார்ச் 31-தேதிக்குள் இததையொல்லாம் கட்டாயம் முடித்து விடுங்கள்

மார்ச் 31-தேதிக்குள் இததையொல்லாம் கட்டாயம் முடித்து விடுங்கள் || இல்லையென்றால் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும்…!!!

மார்ச் 31-தேதிக்குள் இததையொல்லாம் கட்டாயம் முடித்து விடுங்கள் || இல்லையென்றால் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும்…!!!

மார்ச் 31-தேதிக்குள் இததையொல்லாம் கட்டாயம் முடித்து விடுங்கள்

இந்த வருடம் மார்ச் 31-ஆம் தேதி உடன் நிதியாண்டு முடிவடைந்து கணக்குகள் சரிபார்க்கப்படும். இதனால், நிதி சார்ந்த பல்வேறு பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். அதன்படி, பார்க்கும்பொழுது மார்ச் 31-ஆம் தேதிக்குள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளான வரி மற்றும் நிதி சார்ந்த பணிகள் எதுவென்றும், அதைக் கற்ற தவறினால் எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டிய நிலை வரும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வரி விலக்கு:

2023-24 நிதியாண்டு வரி விலக்குகள் விண்ணப்பிப்பவர்கள் அதற்கான முதலீடுகளை மார்ச்-31 தேதிக்குள் செய்திட வேண்டும். இதனால், நீங்கள் வரி சலுகைக்காக முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் இன்னும் 10-நாட்களே உள்ளது.

2021-22 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட ஐடிஆர் தாக்கல் செய்ய மார்ச் 31-ஆம் தேதி தான் கடைசி நாள். அதேபோன்று, 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி ஆவணத்தை புதுப்பித்து தாக்கல் செய்ய நினைப்பவர்களுக்கும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில்,அபதாரம் கட்ட நேரிடும்.

ஃபாஸ்டேக் கேஒய்சி:

ஃபாஸ்டேக் கேஒய்சி வாடிக்கையாளர்கள் தங்களுடைய கேஒய்சி அப்டேட் செய்வதற்கு மார்ச்-31 தான் கடைசி நாளாகும். பே.டி.எம் பேமெண்ட்ஸ் ரிசர்வ் வங்கிக்கு தடை விதித்ததை அடுத்து அதில், ஃபாஸ்டேக் கேஒய்சி பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், இதற்காக அடுத்த மாதம் 31-ஆம் தேதி வரை கேஒய்சி தேதி நீடிக்கப்பட்டது.

பிரதான மந்திரி வய வந்தனா திட்டம்:

மூத்த குடிமக்களுக்கு என ஒதுக்கப்பட்ட திட்டம் தான் பிரதான மந்திரி வயா வந்தா என்னும் திட்டம் இந்த திட்டத்தில் 60-வயதுக்கு மேற்பட்ட அனைவரின் பேரிலும் செய்யப்படும் முதலீடு 7.4% என வட்டியாக கிடைக்கும். இந்த திட்டத்தில் மார்ச் 31-ஆம் தேதிக்குள் முதலீடு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

இந்த திட்டத்தின் கால அவகாசம் 10-ஆண்டுகள் ஆகும்.இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடி மக்களுக்கு வட்டிக் கணக்கிட்டு 10-ஆண்டுகளுக்கான வருமானமாக திருப்பி தரப்படும். இதை அரசு எல்.ஐ.சியுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

சொத்து விற்பனை:

பிப்ரவரி மாதத்தில் வருமான வரி சட்டத்தின் பிரிவு 194-IA  கீழ் பெற்ற அசையாத சொத்து விற்பனை தொடர்பான வரி சலுகைக்கான சலான் மற்றும் அறிக்கையை சமர்ப்பிக்க மார்ச் 31-கடைசி நாள் ஆகும். அதேபோன்று பிரிவுகள் 194-IB, 194-M, 194-S ஆகியவற்றின் கீழ் வரி சலுகை கோரியவர்களுக்கும் அதற்கான சலாம் மற்றும் அறிக்கையை மார்ச் 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கூறிய, அனைத்திற்கான சரியான ஆவணங்களையும், சலான்களையும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க முடியாத பட்சத்தில் அதற்கான அபராதங்களை கட்ட நேரிடும்.

Leave a Reply