ADVERTISEMENT
Manaiyadi Sasthiram

மனையடி சாஸ்திரம் 2024 – Manaiyadi Sasthiram

மனையடி சாஸ்திரம் 2024 – Manaiyadi Sasthiram

Manaiyadi Sasthiram

Manaiyadi Sasthiram – மனையடி சாஸ்திரம் நீளம், அகலம், மனையடி சாஸ்திரம் பற்றி முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. மனையடி சாஸ்திரம் என்பது ஒரு வீடு அல்லது வீட்டுமனை கட்டும் பொழுது அதனுடைய அகலம் நீளம் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளது ஏனென்றால் ஒவ்வொரு அளவுகளும் ஒவ்வொரு விதமான பலன்கள் தருகின்றன. ஒவ்வொரு நீளத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளன.

Manaiyadi sasthiram tamil || மனையடி சாஸ்திரம் 2024:

நாம் புதிதாக வீடு கட்ட போகும் போது கண்டிப்பாக மனையடி சாஸ்திரம் தெரிந்து கொள்ள வேண்டும். அது போன்று ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு சாஸ்திரங்களும் ஒவ்வொரு நன்மைகளும் உள்ளது. இதனை நீள, அகல அடிகள் என்று பிரித்து பலன்களை கூறுவார்கள். அது போன்ற மனையடி சாஸ்திரங்களை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

நீளம் அகலம் மனையடி சாஸ்திரம் pdf:

06 அடி – நன்மைகள் உண்டாகும்.

07 அடி – வீட்டிற்கு தரித்தரம் ஏற்படும்.

ADVERTISEMENT

08 அடி – பாக்கியம் கிடைக்கும்.

09 அடி – வீட்டில் பீடை உண்டாகும்.

10 அடி – நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

11 அடி – பாக்கியம் கிடைக்கும்.

12 அடி – செல்வ செழிப்பு குறைந்து போகும்.

13 அடி – அனைவரையும் பகைத்து கொள்ளும் நிலை ஏற்படும்.

ADVERTISEMENT

14 அடி – நஷ்டம், மன கஷ்டம் உண்டாகும்.

15 அடி – நல்ல காரியங்கள் தடைபடும்.

16 அடி – மிகுந்த செல்வம் உண்டாகும்.

17 அடி – அரசனை போன்ற அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும்.

18 அடி – வீட்டு மனை சீர்குலையும்.

19 அடி – மனைவி, மகள் யாரேனும் ஒருவருக்கு மரணம் ஏற்படும்.

ADVERTISEMENT

20 அடி – இராஜயோகம் கிடைக்கும்.

21 அடி – கல்வி செழிக்கும், பசுவின் பாக்கியம் கிடைக்கும் .

22 அடி- சந்தோஷம் அதிகரிக்கும், பகைவர் பயம் கொள்வார்கள்.

23 அடி – நோயுடன் இருக்க கூடிய நிலை ஏற்படும்.

24 அடி – வயது குன்றும்.

25 அடி – தெய்வ பலன் கிடைக்காது.

ADVERTISEMENT

26 அடி – இந்திரனை போல வாழ்வீர்கள்.

27 அடி – செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்.

28 அடி – வீட்டில் செல்வம் அதிகரிக்கும், தெய்வ அருள் உண்டாகும்.

29 அடி – பால் பாக்கியம் கிடைக்கும், செல்வம் சேரும்.

30 அடி – வீட்டில் எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் தோன்றும்.

31 அடி – இறைவனின் அருள் பாக்கியம் கிடைக்கும்.

ADVERTISEMENT

32 அடி – திருமால் (முகுந்தன்) அருள் பெற்று வாழ்வார்.

33 அடி – வீட்டில் நன்மை கிடைக்கும்.

34 அடி – குடிகள் விட்டொழியும் (தீமை பயக்கும்).

35 அடி – லக்ஷ்மி கடாட்சம் நீங்காமல் இருக்கும்.

36 அடி – அரசரோடு அரசாள்வார்.

37 அடி – இன்பம், லாபம் கிடைக்கும் .

ADVERTISEMENT

38 அடி – வீட்டில் ஆவிகள் குடியிருக்கும்.

39 அடி – இன்பமும், சுகமும் ஏற்படும்.

40 அடி – எப்போதும் சலிப்புடன் காணப்படுவீர்கள்.

நம்மில் பெரும்பாலான மக்கள் சரியான விதத்தில் மனையடி சாஸ்திரத்தை வைத்து வீடுகளை கட்டுகின்றனர். அதுக்கு காரணம் அவர்கள் தங்கி வாழக்கூடிய வீட்டில் எந்த ஒரு கெட்ட விஷயங்கள் நடக்க கூடாது என்பதற்காக மனையடி சாஸ்திரம் பார்க் பட்டு வீடு கட்டப்படுகிறது. நாம் ஒரு வீடு மனை கட்டும் பொழுது அல்லது ஒரு வீட்டு மனைகள் வாங்குவதற்கு முன்பாக இந்த மனையடி சாஸ்திரம் பற்றி முழுமையாக தெர்ந்தவர்களை வைத்து வீட்டு மனைகள் வாங்க வேண்டும்.

Manaiyadi Sasthiram – மனையடி சாஸ்திரம் தவறாமல் இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டில் இருப்பவர்கள் நோய்வாய்ப்படுதல் மற்றும் கெடுதல்கள் அதிக அளவு நடக்கும் உயிர் பாதிப்பு போன்ற விஷயங்கள் அதிக அளவு நடக்க வாய்ப்புண்டு. இன்றைய காலகட்டத்தில் இருந்தே மனையடி சாஸ்திரம் பார்க்கப்பட்டு வருகிறது. மனையடி சாஸ்திரம் பல்வேறு விதமான நன்மைகளை ஏற்படுத்தும் இது அனுபவபூர்வமான உண்மைகள் தான் எனவே நீங்களும் மனையடி சாஸ்திரத்தை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

41 அடி – இன்பமும் செல்வமும் உண்டாகும்
42 அடி- லக்ஷ்மி தங்கியிருப்பாள்
43 அடி – வீட்டில் தீங்கு உண்டாகும்
44 அடி – கண்களில் பாதிப்பு ஏற்படும்
45 அடி – சற்புத்திரர் உண்டு, சகல பாக்கியம் கிடைக்கும்
46 அடி – தீமை உண்டாகக்கூடும்
47 அடி வறுமை இருக்கும்
48 அடி – குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவு ஏற்படும்
49 அடி – மூதேவி குடியிருப்பாள்
50 அடி – பசுவினுடைய பால் பாக்கியம் கிடைக்கும்
52 அடி – தான்யம் அதிகரிக்கும்
56 அடி – வம்சம் விருத்தியாகும்
60 அடி – பொருள் உற்பத்தி, செல்வ செழிப்பு அதிகரிக்கும்
64 அடி – சகல செல்வங்கள் அனைத்தும் வந்தடையும்
66 அடி- சற்புத்திரர் பலன் கிடைக்கும்                                                                                                                                                                                                                                    68 அடி – நஷ்டம் விலகி லாபம் உண்டாகும்
71 அடி – பெரும்புகழ், யோகம் இருக்கும்.
72 அடி – செல்வ பாக்கியம் சேரும்
73 அடி- குதிரைகள் கட்டி ஆட்சி செய்வர்
74 அடி – அதிக செல்வம் உண்டாகும்
77 அடி- யானைகள் கட்டி வாழ்வான்
79 அடி – காளை விருத்தி
80 அடி – மகாலட்சுமி வாசம் செய்வாள்
84 அடி – சகல பாக்கியமும் கிடைக்கும்
85 அடி – செல்வம் அதிகரித்து செல்வந்தராக வாழ்வார்கள்
88 அடி – சௌபாக்கியத்துடன் வாழ்வார்
89 அடி பல வீடுகள் கட்டி வாழ்வர்
90 அடி – யோகம் கிடைக்கும்
91 அடி சகல சம்பத்தும் கிடைக்கும்
93 அடி-கடல் கடந்து பொருள் ஈட்டுவர்
95 அடி – வெளிநாடுகளிலிருந்து பணத்தினை சேர்ப்பீர்கள்
96அடி – அயலதேசம் செல்வார்
97 அடி – செல்வந்தராக வாழ்வார்
98 அடி – பல தேசங்கள் செல்வர்
90 அடி – ராஜ்ஜியம் ஆழ்வார்
100 அடி – இறைவன் அடி போற்றப்படுவர்.அருள்பெற்று சமுதாயத்தில் சிறந்த மனிதனாக                                                                                                                  101 அடி – வருவாய் விருத்தி ஆகும். சேமிக்க முடியும். புகழ் கிடைக்கும். மன மகிழ்ச்சி, பூரிப்பு உ
102 அடி – பரந்த நோக்கம் வளரும். நன்மைகள் தேடி வரும். பிறறை கவரும் வசீகர சக்தி உண்டாகும்.
103 அடி – தீய நன்பர்களின் உறவு ஏற்பட்டு துன்பங்கள் மிகும். திருடர் பயம் ஏற்படும். நேர்மை குணம் மறையும்.
104 அடி – வருவாய் விருத்தி அடையும். துணை கிடைக்கும். இலாபம் தரும். உறவினர்களால் செலவு ஏற்படும். மன
அமைதி குறையும்.
105 அடி – இல்லறம் நல்லறம் ஆகாது. மனைவியால் துன்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் சண்டை சச்சரவு
ஏற்படும்.
106 அடி – பொருள் வரவு உண்டாகும். ஆற்றல் பெருகும். அறிவு வளரும். அன்புள்ளம் கொண்டவர் நட்பு ஏற்படும்.
107 அடி – அடிசம்பாதித்த பொருளை இழக்க வேண்டி வரும். ஈன குணமுள்ள மனிதர்களின் தொடர்பு ஏற்படும்.
வறுமை தாண்டவமாடும்.
108 அடி – ஆன்மிக வாதிகளின் அன்பும், தொடர்பும் ஏற்படும் மன அமைதி உண்டாகும். எதிபாராத நன்மைகள்
வந்து சேரும்.

ADVERTISEMENT

Manaiyadi Sasthiram 2024 In Tamil

110 அடி – எந்த வகையிலும் சேமிப்பு ஆகும். உடல் நிலத்தில் உற்சாகம் பிறக்கும். பொருள் தேடி வரும்.
111 அடி  -நிறைவேற முடியாத காரியங்களும் நிறைவேறும். சுப நிகழ்வுகளே அதிகமாக நடக்கும்.
112 அடி – நினைத்தது நிறைவேறும். தடங்கல்கள் நீங்கும். பொன் பொருள் சேர்க்கை சிறப்பாக இருக்கும்.
113 அடி – எதையும் தைரியமாக செய்யலாம். வரவுகள் மிகுதியாக இருக்கும். யோகம் நிறைவாக இருக்கும்.
114 அடி – தொழில் காரணமாக பயணங்கள் நிறைவாக இருக்கும். பெரிய நகரங்களில் வாழும் நிலை ஏற்படும். உலகம் சுற்றும் வாலிபனாகத் திகழ்வார்.
115 அடி – பணம் வரவு சிறப்பு தரும். குதூகலமான குடும்ப வாழ்க்கை உண்டாகும். அமைதியான சூழ்நிலை
நிலவும்.
116 அடி – குன்றாத செல்வமும், குறைபடாத வாழ்வும் கிடைக்கும். வாழ்வில் துன்பங்களே நெருங்காது.
117 அடி – வணிகம் நன்றாக இருக்கும். பண்ணைத் தொழில் சிறப்பு தரும். கால்நடை செல்வங்கள் பெருகும்.
118 அடி – தீயபலனே வரும். செல்வம், சொத்து அழியும். மன நிலை பாதிப்பு தரும். வறுமை நட்பு கொள்ளும்.

Manaiyadi Sasthiram – சாதாரணமாக ஒரு அறையில் உள்ள அளவு 10 அடி நீளம் ஆறடி அகலம் என்றால் அது நல்ல அளவு. ஆனால் 10 அடி நீளம் 7 அடி அகலம் என்றால் அது தீய பலன்கள் தரக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் ஏழு அடியில் அகலமோ நீளமோ இருந்தால் தரித்திரம் உண்டாகும் என்று சாஸ்திரம் கூறுகிறது மனையடி சாஸ்திரம்.

அகல நீள அட்டவணைப்படி 6, 8, 10, 11,16, 17, 20, 21, 22, 26, 27, 28, 29, 30, 32, 33, 35, 36, 37, 39, 41, 42, 45, 50, 52, 54, 56, 59, 60, 64, 66, 68, 71, 72, 73, 75, 77, 79, 80, 84, 85, 88, 89, 90, 91, 92, 95, 97, 99, 100 ஆகிய அடிகளில் வீட்டின் அறைகளையும் வீட்டையும் அமைக்கலாம். ஆனால் இதிலும் யோகம் தரக்கூடிய சில அளவு முறைகள் உள்ளன. அவை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

Manaiyadi Sasthiram – மனையடி சாஸ்திரம் அளவு படி யோகம் தரக்கூடிய அளவுகள்:. 6 அடி அகலமும் 8 அடி நீளமும், 8 அடி அகலமும் 10 அடி நீளமும், 10 அடி அகலமும் 16 அடி நீளமும், 16 அடி அகலமும் 21 அடி நீளமும், 21 அடி அகலமும் 30 அடி நீளமும், 30 அடி அகலமும் 37 அடி நீளமும், 37 அடி அகலமும் 50 அடி நீளமும், 39 அடி அகலமும் 59 அடி நீளமும், 42 அடி அகலமும் 59 அடி நீளமும், 50 அடி அகலமும் 73 அடி நீளமும், 60 அடி அகலமும் 80 அடி நீளமும் வீட்டின் அளவாகவோ அல்லது அறையின் உள்ளளவாவோ இருப்பது யோக அளவாகும்.

மனையடி சாஸ்திரம் மேலே குறிப்பிட்டுள்ள வாஸ்து பலன்கள் அனைத்தும் நான் முன்னோர்கள் எழுதிய பழமையான பாடல்களின் மூலம் எழுதப்பட்ட மனையடி சாஸ்திரம் ஆகும். இது நீங்கள் பயன்படுத்த நினைத்தால் அருகில் உள்ள மனையடி சாஸ்திரம் பார்ப்பவர்கள் அவர்களிடம் கலந்து ஆலோயோசித்து அதன் பின்னர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

History tamil

ADVERTISEMENT

Leave a Reply