பொங்கல் வைக்க நல்ல நேரம் – 2024
பொங்கல் வைக்க நல்ல நேரம்:
பொங்கல் வைக்க நல்ல நேரம் – 2024:- எந்த ஒரு நல்ல காரியங்கள் செய்யும் முன்பு நல்ல நேரத்தில் துவங்க வேண்டும் என்பதே வழக்கம். அதுபோன்றுதான் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் தை பொங்கல் அன்றும் பொங்கல் வைக்கும் போது நல்ல நேரம் பார்த்து வைக்கப்படுகிறது. இது போன்ற நல்ல நேரங்களில் ஒவ்வொரு விஷயங்கள் செய்யும் போது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கிறது.
ஜனவரி-15 திங்கள் கிழமை பொங்கல் வைக்க நல்ல நேரம்:
• தை முதல் நாள் தைப்பொங்கல் அன்று காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பொங்கல் வைக்கலாம்.
• காலை 9.30 முதல் 10.30 மணி வரை இந்த நேரத்திலும் பொங்கல் வைக்கலாம்.
• ராகு காலம் – 7.30 மணி முதல் 9 மணி வரை.
• எமகண்டம் – 10.30 மணி முதல் 12 மணி வரை.
ஜனவரி-16 செவ்வாய்க்கிழமை மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்:
• தை இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் அன்று காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை பொங்கல் வைக்க நல்ல நேரம் ஆகும்.
• எமகண்டம் – 9 மணி முதல் 10.30 மணி வரை.
• ராகு காலம் – 3 மணி முதல் 4.30 மணி வரை.
குறிப்பு: கூறப்பட்டுள்ள நல்ல நேரங்களில் பொங்கல் வைப்பது மிகவும் நல்லது. அப்படி கூறப்பட்டுள்ள, நல்ல நேரத்தில் பொங்க வைக்க தவறும் பட்சத்தில் எமகண்டம், ராகு காலம் போன்ற கெட்ட நேரங்களைத் தவிர்த்து பிற நேரங்களில் பொங்கல் வைக்கலாம்.
பொங்கல் வைக்கும் முன்பு அனைவரும் குளித்துவிட்டு புதுப் பானையில் சர்க்கரை, வெல்லம், பால், நெய், புது அரிசி போன்றவற்றை பானையில் போட்டு பொங்கல் வைத்து கதிரவனுக்கு படைத்து வணங்க வேண்டும்.
பொங்கல் வைக்கும் முன்பு நல்ல நேரத்தில் கிழக்கு திசையை நோக்கி பொங்கல் வைப்பது வீட்டிற்கு மிகவும் நல்ல விஷயமாகும். ஏனென்றால், வீட்டிற்கு “மகாலட்சுமி விருட்சம்” கிடைக்கும்.