ADVERTISEMENT
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வரலாறு

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வரலாறு – Pillayarpatti vinayagar History In Tamil

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வரலாறு – Pillayarpatti vinayagar History In Tamil

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வரலாறு

Pillayarpatti vinayagar History In Tamil: தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி என பெயர் வழங்கும் இந்த ஊர் இங்கு உள்ளது. இந்தப் பழமையான குடைவரைக் கோயில் பிள்ளையார்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளன. திருப்பத்தூர் குன்றக்குடி சாலையில் திருப்பத்தூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. குன்றக்குடி முருகன் கோவிலில் இருந்து 3 கி.மீட்டர் காரைக்குடியில் இருந்து 16 கி.மீட்டர் தொலைவிலும் மற்றும் சிவகங்கையில் இருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றார்கள்.

அங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பட்டுள்ளது. இந்த கோயில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக கூறப்படுகின்றன. இந்த கோயிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகர் விளங்குகிறார் மலையை குடைந்து அமைக்கப்பட்ட சுமார் 6 அடி உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம் வடக்கு திசை பார்த்து காணப்படும். குவைத் கோயிலில் சிவன் மற்றும் பிற கடவுளர்களின் உருவங்கள் கோவிலில் செதுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுகளில் எழுதியுள்ள படி கோயில் 1091 மற்றும் 1238 ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் சேர்ந்தது என கருதப்படுகிறது.

Pillayarpatti vinayagar History In Tamil: பல்லவர்களுக்கு முன்பே இக்கோயில் கொடவர்கள் அமைத்த பெருமை பாண்டிய மன்னர்களுக்கு உண்டு. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்ற சிற்பியால் பிள்ளையாரின் உருவம் சிவலிங்கத்தின் உருவம் செதுக்கப்பட்டுள்ளன ஏன்று கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளன. மகேந்திரவர்மன் பல்லவன் காலத்துக்கு முன்பு இரண்டு மற்றும் ஐந்து நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என இந்தக் குடைவரை கோவில் என்பதை அறியலாம். கிபி 4 -ஆம் நூற்றாண்டில் இந்த பிள்ளையார் சிலை செதுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இக்கோயிலில் இதுபோன்று 14 சிலை உருவங்கள் இங்கு உள்ளது. இக்கோயிலின் கல்வெட்டுகள் மூலமாக மருதங்குடி, திருவெங்கைக்குடி, ஏற்காட்டூர்,திருவெங்கை வரம், இராச நாராயணபுரம், மற்றும் மருதங்கோர், தென்மருதூர், கணேச மாநகரம், கணேசபுரம், பிள்ளை நகர் இதுபோன்று இக்கோயிலின் முக்கால பெயர்கள் என அறிய முடிகிறது.

இந்தக் கோயில் கிபி 12-ஆம் நூற்றாண்டில் முந்தைய காலத்தில் செட்டிநாடு நகரத்தார்கள் வசமானது என்று வரலாறு கூறுகின்றது. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில் இக்கோயில் முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது. இ கோயிலில் இருக்கும் விநாயகருக்கு தேசி விநாயகர் என்றும் பெயரும் உண்டு தேசி விநாயகமர் என்றால் ஒலிமிக்க அழகுள்ள விநாயகர் என்று பொருளாகும்.

ADVERTISEMENT

பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலின் அமைப்பு:

Pillayarpatti vinayagar History In Tamil: பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலின் அமைப்பு இரு பகுதிகளாக அமைந்திருக்கிறது. குடைவரைக் கோயில் ஒரு பகுதியாகவும் மற்றொரு பகுதி கற்றலி எனவும் அமைந்திருக்கிறது. விளார்பட்டி என் கோயில் தமிழ்நாட்டில் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கூறுகின்றனர்.

விநாயகர் சன்னதி 6 அடி உயரமுள்ள மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளதால் இந்த கோயிலை சுற்றி வலம் வர முடியாது. இ கோயிலில் பிள்ளையாரின் உருவம் வடக்கு திசை நோக்கி அவரின் தும்பிக்கை வலது புறமாக சுளித்தும் காணப்படும்.(வலம்புரி விநாயகர்) இந்த கோயிலின் தனி சிறப்பாக இங்கு உள்ளது. இந்த கோயிலில் திருமணம் நடைபெற வைக்கும் “கார்த்தியாயினி”அம்மன் சன்னதியும், பிள்ளை வரம் அளிக்கும் “நாகலிங்கம்” சுவாமி சன்னதியும், அனைத்து செல்வங்களையும் கொடுக்கும் “பசுபதிசுவரர்”சன்னதியில் உள்ளது.

குடைவரைக் கோயிலில் கிழக்கு முகமாக அமைந்திருக்கும் மகாலிங்கம் சுவாமி மிகப் பொலிவுடன் காணப்படுகிறார். திருவீசர் என்று பெருமாளுக்கு திருவேங்கைகுடி மகாதேவர் என்ற இன்னொரு பெயரும் உண்டு. வெளிவரச் சுவரில் லிங்கோத்பார் என்ற சுவாமி காட்சியளிக்கிறார்.

இந்த கோயிலில் சிறிது தூரத்தில் கிழக்கு திசை நோக்கி சன்னதியாக அமைக்கப்பட்டுள்ளது. மருதீஸர் சன்னதி கருவறையின் நடுவே வட்ட வடிவத்தில் ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ளன மருதீஸர் அர்ஜுனவனேசர் என்று பெயருலும் வழங்கப்படுகிறார். அந்த கோயிலின் கருவறை சுற்றியுள்ள பொறுத்தவர்கள் சிற்பங்கள் நுட்பமான கட்டட வேலைபாடுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கிறது.மருதீஸர் கோயில் 30 சிறப்பு தெரு மேல் கொண்டுள்ளன.

Pillayarpatti vinayagar History In Tamil: கோயில் மேல் சுற்றுப்புற பிரகாரத்தின் வடகிழக்கு பகுதியில் வாடாமலர் மங்கை இவரின் சன்னதி தெற்கு முகமாக பார்த்து காட்சியளிக்கிறது. கோயில் நடுவே அம்மனின் திரு உருவம் பத்ம பீடத்தின் இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது. இந்த கோயிலின் தலை விருட்சமாக அர்ச்சன மரம் உள்ளது. வடக்கு திசை கோபுரம் வாயிலின் உள்ளே கிழக்கு பகுதியில் சிவகாமி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. மகா மண்டபத்தின் வடக்கு பகுதியில் நலராசர் சபை அமைந்துள்ளது அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியங்களை எல்லாம் பெருமை சேர்க்கும் விதமாக அமைகிறது இக்கோயில் சிவன் கோயில் இருந்தாலும் கற்பக விநாயகர் மக்களிடையே மிகப் பிரசித்தி பெற்று வழங்குகின்றனர் .பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில் என்றாலே பெருமை தான்

பிள்ளையார்பட்டி விநாயகர் சிறப்பு :

விநாயகருக்கு மிகப்பெரிய குடைவரை கோயில் இதுவே ஒன்று கோயில் விநாயகர் சதுர்த்தி அன்று 18 படி அளவில் ராட்சச கொழுக்கட்டை நைவேத்தியமாக விநாயகருக்கு படைக்கப்படுகிறது. முருக பெருமான் ஆறுபடை வீடு இருப்பது அனைவருக்கும் தெரிஞ்ச ஒன்று அதேபோல் விநாயகருக்கும் ஆறுபடை வீடு உள்ளன இந்த கோயில் உள்ள விநாயகர் சன்னதியின் ஐந்தாவது படை வீடாகும் கூறுகிறார்கள். நகரத்தினர் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

ADVERTISEMENT

இக்கோயிலில் விநாயகர் தேர் திருவிழா நடக்கும் கோவில்களில் எதுவும் ஒன்று. அப்பொழுது சண்டிகேஸ்வரருக்கும், விநாயகருக்கும் தேர்கள் இழுக்கப்படுகின்றன. விநாயகருக்கும் தேரை இழுக்கும்போது தேரின் ஒரு பக்கம் ஆண்களும் மற்றொரு பக்கம் பெண்களும் தேரின் கைத்தை பிடித்து இழுக்கின்றனர்.

அந்த காலத்தில் கோவிலில் 9 நாட்களுக்கு விழாக்கள் நடத்தப்படுகின்றன. ஒன்பது நாள் திருவிழாவின் கடைசி நாள் அன்று 80 கிலோ சந்தன காப்பு விநாயகருக்கு சாற்ற படுகிறார்கள். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே செய்யப்படும் இந்த விநாயகர் அலங்கார காட்சியை காண்பதற்காக கோடான கோடி பக்தர்கள் பெருமளவில் கோயிலுக்கு வருகை தந்து விநாயகரை தரிசிக்கின்றனர்.

1. இந்தக் கோயிலின் பெருமானின் துதிக்கை வலம் சூழ்ந்ததாக அமைந்திருக்கிறது

2. வயிறு ஆசனத்தில் படியாமல் “அர்த்தபத்மா” ஆசனம் போன்ற கால்கள் மடித்திருக்க அமைந்தருள்வது

3. வலகரத்தில் மோதகம் தாங்கியருள்வது

4. பெண் ஆண் இருவரையும் புலப்படுத்தும் முறையில் வலது தந்தம் மீண்டும் இடது தந்தம் குறையும் இங்கு காணப்படுகிறது. இவை பிள்ளையார்பட்டி பெருமானிடம் காணப்படும் சிறப்பாகும். தமிழ்நாட்டில் தோன்றிய ஆதி நாளிலேயே இந்த முகூர்த்தம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

விநாயகர் கோயில் ராஜகோபுரம்:

இந்த கோயிலின் திருமதியின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிழலுடன் கொண்ட அமைந்திருக்கும் இந்த கோபுரம் அதிட்டான முதல் கல்லறை வெள்ளை கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதியில் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளன. இந்த கற்பக விநாயகர் சன்னதியில் முன்புறமாக இருக்கும் திருமதி லின் வடக்கு திசை வாயிலில் விநாயக கோபுரம் எழுப்பப்பட்டுள்ளன. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது இந்த கோபுரம் அதிட்டானம் முதல் கல்லறை வரை வெள்ளை கற்களை கொண்டும் அதன் மேல் எழுப்புப்பட்டுள்ள கோபுரங்கள் தளங்கள் செங்கலை கொண்டும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

பிள்ளையார்பட்டி விநாயகர் திருக்குளம் :

இக்கோயிலில் விநாயகர் கோபுரத்திற்கு எதிராக வெளி வெளிப்புற காலத்தில் வடக்கு திசையில் விஷாலமாக திருக்குளம் அமைந்துள்ளது. விநாயகர் கோவிலின் ஒவ்வொரு சதுரத்தின் போது இரவு நேரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் சுற்றி வருவார்.

பிள்ளையார்பட்டி விநாயகர் நேத்திக்கடன்:

இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுகோள் நிறைவேற்றியதும், இந்த விநாயகருக்கு முக்குருணி மோதகம் (கொழுக்கட்டை) செய்து விநாயகருக்கு படைத்து வழிபடுகிறார்கள். தொழிலில் செய்பவர்கள் தொழில் நஷ்டம் அடைந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து கணபதி ஹோமம் செய்து பயனடைகிறார்கள். அருகம்புல் மாலை செய்து விநாயகருக்கு சாற்றி நேர்த்திக்கடன் செய்தும் வழிபடுகிறார்கள்.

பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் நடை திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கோயிலில் நடை திறந்திருக்கும்.

கோவிலின் பூஜை நேரம்:

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரை இந்த கோயிலில் பூஜை நடைபெறும்.

பிள்ளையார்பட்டி கோவில் அமைவிடம்:

பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பேருந்துகள் மற்றும் வாடகை வாகனங்களிலும் செல்லும் வசதிகள் இங்கு உள்ளன.

ADVERTISEMENT
இதையும் படிக்கலாமே

கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி

தஞ்சாவூர் பெரிய கோவில் வரலாறு

பழனி முருகனின் கோவில் வரலாறு

மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு

கள்ளர் கோவிலின் வரலாறு

Leave a Reply