நெல்லிக்காய் பயன்கள் || நெல்லிக்காய் தீமைகள்-Amla(Gooseberry) Benefits in Tamil
Amla gooseberry benefits in Tamil:
நெல்லிக்காய் பயன்கள்: நம் நாட்டில் ஏராளமான இயற்கையான மூலிகைகள் காணப்படுகிறது. மூலிகை செடிகள் நமக்கு பயன் தருவது மட்டும் இல்லாமல், இயற்கையாக கிடைக்கும் சில காய்கள், கனிகள்,பூக்கள் போன்றவற்றில் இருந்தும் கூட ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. அது நம் உடலுக்கு பல நன்மைகளையும் தருகிறது. அது போன்ற காய்கனிகளில் ஒன்று தான் “நெல்லிக்காய்” இந்த நெல்லிக்காய் நம் நாட்டின் எளிதாக கிடைக்கக் கூடிய ஒரு மருத்துவப் பொருள். இதில், ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது.அதனைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
நெல்லிக்காய் பயன்கள் || நெல்லிக்காய் பயன்கள் in english:
1. புற்றுநோய் குணமடைவதற்கு:
நெல்லிக்காயில் அதிகளவு ஆன்டி ஆக்சிடென்ட்கள் காணப்படுகிறது. இது புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து உடலை பாதுகாக்கிறது. நெல்லிக்காய் சாப்பிடுவதனால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி முற்றிலும் தடைபடுகிறது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
2. உயர் இரத்த அழுத்தம் குறையும்:
தினசரி நாள் ஒன்றுக்கு ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வரும் வேளையில் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும. அதுமட்டுமில்லாமல், நெல்லிக்காய் மனம் மற்றும் உடலை சாந்தமான நிலையில் வைத்திருக்கும்.
தேனுடன் நெல்லிக்காய் பொடியை கலந்து தினசரி சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.
3. உடல் எடை குறைய:
உடல் எடை அதிகரிக்க டாக்ஸின்கள் எனப்படும் வேதிப்பொருட்கள் நம் உடம்பில் அதிக அளவு தீமை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இதனால், நாம் நெல்லிக்காய் சாப்பிடும்போது இந்த டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு உடல் எடையை குறைக்க மிகவும் உதவி செய்கிறது.
4. அல்சர் குணமடைய:
நெல்லிக்காய் பயன்கள்: அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் தினமும் நெல்லிக்காயை ஜூஸ் போட்டு குடித்தால் அல்சர் நோயிலிருந்து விரைவாக குணமடையலாம்.
5. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த:
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நெல்லிக்காய் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால், நீரிழிவு நோயாளிகள் 1-டேபிள் ஸ்பூன் அளவு நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து குடித்தால் மிகவும் நல்லது. இது இன்சுலின் சுரப்பை உடலில் அதிகரிக்கிறது.
6. கல்லீரலை பாதுகாக்கிறது:
கல்லீரல் சீராக செயல்படுவதற்கு நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது. இந்த நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்சிடென்ட் அதிக அளவு காணப்படுவதனால் இது நம் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி டாக்ஸின்களால் கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்பை முற்றிலும் தடுக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் கல்லீரல் பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது.
7. உயர் இரத்த அழுத்தம்:
உயர் இரத்த அழுத்தம் காரணமாக இதயத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. இதனால், தினசரி ஒரு நெல்லிக்காயை சாப்பிடுவதன் மூலமாக உயர் இரத்த அழுத்தம் கட்டுபாட்டுடன் இருக்கும். இதைவிட நெல்லிக்காய் பொடியை தேனுடன் தினசரி கலந்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்தும்.
8. மலச்சிக்கல் குணமடையும்:
நெல்லிக்காய் பயன்கள்: நெல்லிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுகிறது. இதனால், குடல் இயக்கத்தை சீராக ஒழுங்குப்படுத்தி மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.
9. வயிற்றுப் புண்களை குணமாக்கும்:
நெல்லிக்காய் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மையுடையது.இதனால், நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலமாக வயிற்றில் உள்ள புண்கள் அனைத்தும் விரைவில் குணமடையும்.
Amla gooseberry benefits in tamil for male:
10. செரிமானத்திற்கு உதவுகிறது:
நெல்லிக்காயில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இது உடல் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது.
11. நெல்லிக்காய் ஆண்மை:
நெல்லிக்காய் குறைந்த விந்தணு எண்ணிக்கை சரி செய்யவும், விரைப்புத்தன்மை குறைபாட்டை சரி செய்யவும் பெரிதும் உதவுகிறது.இது சிறுநீரக கோளாறுகளையும் சரி செய்கிறது.
நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் பவுடரை இரவு தூங்குவதற்கு முன்பாக சாப்பிட வேண்டும். அதன்பிறகு, மிதமான சூட்டில் பாலில் குடிக்க வேண்டும்.
நெல்லிக்காய் தீமைகள் || gooseberry in tamil:
• நெல்லிக்காய் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை உடையது. இதனால், ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
• கர்ப்பமாக இருக்கும் பெண்கள் நெல்லிக்காயை சாப்பிடுவதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுவது இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் நெல்லிக்காய் சாப்பிடுவது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
• வைட்டமின்-சி உணவுகள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துமானால், நீங்கள் நெல்லிக்காயை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
• செரிமான பிரச்சனை அதிகம் உள்ளவர்கள் நெல்லிக்காயை சாப்பிடுவது கொஞ்சம் தவிர்க்க வேண்டிய விஷயம்.ஏனென்றால், இது அமிலத்தன்மையை அதிகரிக்கும் பண்பு உடையது. இதனால், சிலருக்கு நெஞ்சு எரிச்சல், தொண்டை வலி, வாயு பிரச்சனை போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள் || amla benifits in tamil:
• நெல்லிக்காய் ஜூஸ் செரிமான உறுப்புகளை வலிமைப்படுத்தும் தன்மை கொண்டது.
• கொழுப்புகளை குறைக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.
• நெல்லிக்காயை ஜூஸில் பேட்டி ஆசிட்ஸ், வைட்டமின்கள் அதிக அளவு காணப்படுகிறது. இதில் உடலில் கொழுப்பை சேரவிடாமல் ஆற்றலை அதிகரிக்கும் மூலக்கூறுகளும் அடங்கியுள்ளது.
நெல்லிக்காய் சாப்பிடும் முறை || amla in tamil:
நெல்லிக்காய் பயன்கள்: நெல்லிக்காயை பச்சையாகவோ, ஜூஸ் செய்தோ மற்றும் பொடியாகவோ எடுத்துக் கொள்ளலாம். இதில் இயற்கையாகவே குளிர்ச்சி ஊட்டும் தன்மை உடைய காரணத்தினால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக, வயிற்றில் காணப்படும் புண்களை குணமடைய செய்கிறது.
தேன் நெல்லிக்காய் பயன்கள்:
• நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு வலிமை சேர்கிறது. குறிப்பாக, இரத்த அழுத்தங்களை சீராக வைத்து இதய தசைகளை வலிமை அடைய செய்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.
• தேனில் கலந்த நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுவதன் மூலமாக இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்தம் சுத்தமாகிறது. இதனால், இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.
நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டால்:
• நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதன் மூலமாக உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கிறது.
• நெல்லிக்காய் பொடியை தேனுடன் தினமும் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் சிறந்தது.
• கண்ணின் பாதுகாப்பு படலமான ரெட்டினாவை நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட் பாதுகாக்கிறது.
• அதுமட்டுமில்லாமல், நெல்லிக்காய் மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்தும் தன்மை கொண்டது.
பெரிய நெல்லிக்காய் பயன்கள் || Amla gooseberry benefits in tamil for skin:
1. பெரிய நெல்லிக்காயில் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகள் உண்டு.
2.இதில்,இயற்கையாகவே குளிர்ச்சியான தன்மை காணப்படுவதனால், வயிற்றில் காணப்படும் புண்களை குணமாக்க பயன்படுகிறது.
3. உயர் இரத்த அளவை கட்டுப்பாடுடன் வைத்து இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
4. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாடுடன் வைத்திருக்க உதவுகிறது. இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கிறது.
மருத்துவ குறிப்பு || நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்:
நெல்லிக்காய் எப்படி சாப்பிடுவது?
• நெல்லிக்காயை பச்சையாகவோ, ஜூஸ் செய்தோ மற்றும் பொடியாகவோ சாப்பிடலாம்.
•அதுமட்டுமில்லாமல், நெல்லிக்காயில் ஊறுகாய் மற்றும் ஜாம் செய்து சாப்பிடலாம்.
• நீங்கள் ஸ்நாக்ஸ் சாப்பிடும்போது நெல்லிக்காய் பொடியை அதில் தூவி சாப்பிடலாம்.
• நெல்லிக்காயை பொடியாக சாப்பிடுவது மிகவும் சுலபமானது.
நெல்லிக்காய் பயன்கள் என்ன?
• நெல்லிக்காய் நமது சருமத்தை பளபளவென பொலிவுடன் வைத்துக்கொள்ள மிகவும் உதவுகிறது என ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.
• கண்ணின் பார்வையை அதிகரிக்கவும், இரத்தத்தை தூய்மை படுத்தவும் பயன்படுகிறது.
•இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தவர் யார்?
நெல்லிக்காய் பயன்கள்: நீண்ட ஆயுளை தரக்கூடிய நெல்லிக்கனியை “அதியமான்” என்னும் அரசன் தமிழ் புலமையில் சிறந்து விளங்கிய ஔவையாருக்கு கொடுத்தார்.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் எது?
நெல்லிக்காயில் வைட்டமின்-C அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது.
Read Also:- அதிமதுரம் பயன்கள்