தற்போது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இந்திய நாடு முழுவதும் ஏப்ரல்-19 தேதி அன்று ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. புதுச்சேரியில் 40-தொகுதிகளிலும், தமிழ்நாட்டில் 39-தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கையின் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே கூறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் மார்ச் 27-ஆம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். மார்ச் 28-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும். வேப்பு மனுவை நீங்கள் திரும்ப பெற நினைத்தால் மார்ச் 30-ஆம் தேதி தான் கடைசி நாள் ஆகும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இருந்து தேர்தல் களம் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என 4-கட்சிகள் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றது.
தி.மு.க கட்சியின் கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இந்த திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில், காங்கிரஸ்-10 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-2 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட்-2 தொகுதிகள், ம.தி.மு.க -1 தொகுதி, விடுதலை சிறுத்தைகள்- 2 தொகுதிகள், கொங்கு மக்கள் தேசிய கட்சி-1 தொகுதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1 தொகுதி போன்ற தொகுதியில் போட்டியிட உள்ளது. மீதி உள்ள 21-தொகுதிகளிலும் தி.மு.க கட்சி போட்டியிட உள்ளது.
இதில், திமுக கட்சி உள்பட அனைத்து கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளது.ஆனால், தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை அறிவிப்பதில் இன்னும் கால தாமதம் ஏற்படுகிறது.
இந்த சூழ்நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் 10-தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி 7-தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்தது.
1. கிருஷ்ணகிரி – கோபிநாத்
2. கடலூர் – விஷ்ணு பிரசாந்த்
3. திருவள்ளுவர் – சசிகாந்த் செந்தில்
4. விருதுநகர் – மாணிக்கம் தாகூர்
5. சிவகங்கை – கார்த்தி சிதம்பரம்
6. கன்னியாகுமரி – விஜய் வசந்த்
7. கரூர் – ஜோதிமணி
எஞ்சி 3-தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
8.திருநெல்வேலி
9.மயிலாடுதுறை
10.புதுச்சேரி