தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் யார்? || புது கேப்டனை நியமிக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுத்த முடிவு என்ன?
ipl 2024 latest news in tamil:
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் 17-வது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
கிட்டத்தட்ட 17-ஆண்டுகாலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட மகேந்திர சிங் தோனி தற்போது ஓய்வு பெறும் நிலையை நெருங்கி விட்டார்.
இதனால், இந்த ஆண்டுதான் அவரது கடைசி ஐபிஎல் தொடராக இருக்க கூடும் என ரசிகர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஏற்றது போல் தோனியும் அவரது ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கை போல தற்போது அவரது ஹேர் ஸ்டைலை மாற்றி உள்ளார்.
இதனால், அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கு, சிஎஸ்கே நிர்வாகம் ஒரு சிறந்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு ரவீந்திர ஜரேஜாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் கேப்டன் பதவியை வழங்கியது.
இருப்பினும் அவரால் எதிர்பார்த்த அளவுக்கு கேப்டன் பொருப்பை ஏற்று அணியை வழிநடத்த முடியவில்லை. அதன் பிறகு தோனியே மீண்டும் கேப்டன் பொருப்பை ஏற்றுக் கொண்டார்.
இதனால், தற்போது தோனிக்கு 41-வயது ஆகும் நிலையில் இந்த ஆண்டுதான் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனனாக இருக்கக்கூடும் என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு பரவிக் கொண்டு வருகிறது.
2024-ipl trending news in tamil:
இதனால், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை யார் வழிநடத்த போவது என்ற கேள்விக்கு சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் தற்போது பதில் ஒன்று கூறியுள்ளார்.
அதாவது, அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பொறுப்புகளுக்கு யார் சரியானவர்கள் என்பதை அணியின் நிர்வாகம் முடிவு செய்ய முடியாது.
ஏனென்றால், அணியை வழிநடத்தக் கூடிய திறமை யாருக்கு உள்ளது என்பது அணியின் பயிற்சியாளருக்கும், கேப்டனுக்கும் தான் நன்றாக தெரியும். இதனால், அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்.
இதன் காரணமாக அவர்கள் யார் கேப்டன் பதவிக்கு சரியானவர்கள் என்று கூறுகின்றார்களோ அவர்களே சிஎஸ்கே அணியை வழிநடத்துவார்கள் என்று நம்புகிறேன். இதைப் பற்றிய செய்திகளை கூடிய விரைவில் தெரிவிப்பார்கள் என்று நானும் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.