ADVERTISEMENT
தமிழ்நாட்டில் பாஜக கட்சி வலுவடைந்து காணப்படுகிறது

தமிழ்நாட்டில் பாஜக கட்சி வலுவடைந்து காணப்படுகிறது || தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தப் போகிறது

தமிழ்நாட்டில் பாஜக கட்சி வலுவடைந்து காணப்படுகிறது || தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தப் போகிறது

தமிழ்நாட்டில் பாஜக கட்சி வலுவடைந்து காணப்படுகிறது

தற்போது தமிழகத்தில் பாஜக கட்சி அதிக அளவில் சக்தி வாய்ந்த கட்சியாக வலுப்பெற்று வருகிறது. இது திமுக கட்சியை ஆதரிக்கும் மக்களின் மனநிலையை நிச்சயமாக மாற்றும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சிரியத்தில் உறைய வைக்க போகிறது என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி நேற்று கோவையில் பிரம்மாண்ட வாகன அணிவகுப்பில் கலந்து கொண்டார் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மோடியின் வாகன பேரணியில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

மோடியை பார்த்த தொண்டர்கள் அனைவரும் ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். இப்படி பேரணி நடந்து கொண்டிருக்கும் போது கோவையில் குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு மோடி அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.

 இது தொடர்பாக மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்று கூறியிருக்கிறார். அதாவது, 1998-ஆம் ஆண்டு நிகழ்ந்த கோவை தீவிரவாத குண்டுவெடிப்புகளை தன்னால் மறக்கவே முடியாது.

ADVERTISEMENT

அதனால், தான் அந்த ஊர்வலத்தில் குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்தினேன். தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைக்க போகிறது.

பா.ஜ.க கட்சி மாநிலங்கள் முழுவதும் வலுவான கட்சியாக உருவாகப் போகிறது. இனி தமிழகத்தில் திமுக கட்சியை ஆதரிக்கும் மக்களின் மனநிலை கண்டிப்பாக மாறும் என அதில் பதிவிட்டுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதம் காலமே இருப்பதனால் அரசியல் கட்சிகள் முழுவதும் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. குறிப்பாக, ஆட்சியில் இருக்கும் பாஜக கட்சி இந்த முறை தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

இன்று பிரதமர் மோடி சேலம் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதிக்கு மோடி வருகை தருகிறார்‌. அங்கே பிற்பகல் 1-மணி அளவில் பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறார்.

இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்ற கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் சுமார் 44-ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மோடி வருகை முன்னிட்டு பலத்த பாதுகாப்புடன் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2,500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜகவை கழட்டிவிட்ட காரணத்தினால் பாஜக தலைமையில் தனியாக ஒரு கூட்டணி அமையப்போகிறது.

பாஜக கூட்டணியில் பாமக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தந்துள்ளார்.

அந்த வகையில் நேற்று கோவையில் பிரமாண்ட வாகன பேரணியில் கலந்து கொண்டார். இருபுறமும் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திறந்து நின்று மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ரோட்ஷோவின்போது 1998-ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உருவப்படத்திற்கு மோடி அவர்கள் அஞ்சலி செலுத்தினார். ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் முன்பாக உயிரிழந்தவரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்த புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய பிரதமர் காலணிகலை கழட்டிவிட்டு வெறும் காலுடன் சென்று உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

ADVERTISEMENT

Leave a Reply