ADVERTISEMENT
தமிழகத்தில் 2024 - கோடை விடுமுறை தேதி அறிவிப்பு

தமிழகத்தில் 2024 – கோடை விடுமுறை தேதி அறிவிப்பு – மிகுந்த மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் || Tamilnadu Summer Holiday Date Announced-2024

தமிழகத்தில் 2024-கோடை விடுமுறை தேதி அறிவிப்பு – மிகுந்த மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் || Tamilnadu Summer Holiday Date Announced-2024

தமிழகத்தில் 2024 - கோடை விடுமுறை தேதி அறிவிப்பு

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகளில் விரைவாக இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த திட்டமிட்டு வேகமாக அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மார்ச் 26-ம் தேதி முதல் 10-ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான இறுதி ஆண்டு தேர்வு எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் எழுந்த நிலையில் அதற்கான அட்டவணை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

2023-24 ஆண்டுகான கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது பொது தேர்வுகள் தமிழகப் பள்ளிகளில் நடந்து கொண்டு வருகிறது. இதனை, தொடர்ந்து 2024-ஆண்டுக்கான நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை அறிவிப்பு:

ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தல் காரணமாக தேர்தல் நடைபெற உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேர்வு மையங்களாக மாற்றுவதற்கான பணிகள் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று முடிவடைந்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால், ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் அனைத்து வகுப்பு தேர்வுகளையும் முடிக்க வேண்டும் என்ற சூழலில் பள்ளி நிர்வாகம் இருக்கிறது.

தற்போது 11-ஆம் மற்றும் 12-வகுப்புகளின் பொதுத் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனால், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வானது ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. எனவே, ஏப்ரல் 12-ஆம் தேதி தேர்வு முடிவடையும் நிலையில் ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் கோடை விடுமுறையானது தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் விரைவாக 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு விரைவாக நடத்த முடிக்க தற்போது திட்டமிட்டப்பட உள்ளது. இதனால், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள இறுதி ஆண்டு தேர்வுகளையும் விரைவாக நடத்தி முடித்துவிட்டு ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிந்தவுடன் கோடை விடுமுறையானது தொடங்கப்படும். மேலும், விடுமுறை முடிந்து ஜூன் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply