இந்தியா முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் பள்ளிகளில் மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகளை முடித்து தேர்தல் நடக்கும் பள்ளிகளையும், கல்வியிலும் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் பராமரித்து தேர்தல் நடைபெறுவதற்கான சுங்க சாவடிகளை அமைக்க அரசு அறிவித்துள்ளது.
தற்போது, 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவடையும் தருணத்தில், மார்ச்-26 தேதி முதல் 10-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் அனைத்து இறுதி ஆண்டு தேர்வுகளையும் முடித்து ஏப்ரல் 13-ஆம் தேதியிலிருந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளிப்பள்ள அறிக்கை:
கோடை விடுமுறை குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9-வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான 2023-24-ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான இறுதி ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 2-ஆம் தேதி அன்று தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி அன்று முடிவடையும் என அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை:
இதனால், ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்கள் ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் மற்றும் பணிகளில் கட்டாயம் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் 26-ஆம் தேதி வரையில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி, தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அடுத்த ஆண்டுக்கான(2024-2025)-கான மாணவர் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை நீட்டிப்பு:
தமிழகத்தில் ஏப்ரல் 26-ஆம் தேதி அன்று இந்த ஆண்டிற்கான கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் தேதி பின் நாட்களில் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை நீடிக்கபடும் என தகவல் வெளியாகி உள்ளது.