சுகர் அறிகுறிகள் பெண்கள் || Diabetes Symptoms for Women in Tamil
சுகர் அறிகுறிகள் பெண்கள்:
சுகர் அறிகுறிகள் பெண்கள்:- சுகர் என்பது சர்க்கரை வியாதி என்று அழைக்கப்பட கூடிய நீரிழிவு நோயாகும். முன்னொரு காலத்தில் இந்த நீரிழிவு நோய் பணக்காரர்களுக்கு மட்டும் வரும் நோய் என மக்களால் நம்பப்பட்டது.
ஆனால்,தற்போது இருக்கும் காலகட்டங்களில் ஒரு குடும்பத்தில் ஒரு நபராவது இந்த நீரிழி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள்,பெண்கள் என அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு வியாதியாக தற்போது இருக்கிறது.
இந்த சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் உடலில் சர்க்கரை அளவு அதிகமாக காணப்படுவதால் இதனால் உடல் பருமன் அடைந்து நீரிழிவு நோய் ஏற்பட வழிவகுக்கிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள், உடல் சோர்வு போன்ற காரணங்களினால் நீரிழிவுநோய் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் பெண்களை அதிக அளவு பாதிக்கிறது.
ஆரம்ப நிலை சர்க்கரை நோய்:
ஆரம்ப நிலை சர்க்கரை நோயில் பாதங்களில் வீக்கம் ஏற்படும், மூட்டுகளில் வலி ஏற்படும், கை மற்றும் கண்கள் சிவந்து வீக்கம் அடையும், கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம் உருவாகும், அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்றவை ஆரம்ப கால அறிகுறி ஆகும்.
வாந்தி எடுத்தல், தலை சுற்றுதல், மயக்கம், உடல் சோர்வு போன்றவை ஏற்பட்டால் சிறுநீரகங்கள் பாதிப்படைந்துள்ளதற்கான அறிகுறிகள் ஆகும்.
நீரிழிவு நோய் வகைகள்:
நீரிழிவு நோய் பல வகைகளில் வருகிறது.
1.டைப் 1 நீரிழிவு – இது உடலில் இன்சுலின் சுரக்காமல் இருப்பதினால் ஏற்படும் நோய்.இதற்கு தினமும் இன்சுலின் உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
2. டைப் 2 நீரிழிவு – குளுக்கோஸ் சுரக்கும் அளவை குறைத்து மருந்துகள், உணவு கட்டுப்பாட்டு முறை ஆகியவை மூலம் ஏற்படுகிறது.
3. ப்ரீ டயாபிட்டீஸ் – நீரிழிவு நோய் ஏற்படாமல் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகமாக காணப்படுவது.
4. கர்ப்ப கால நீரிழிவு – பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது குளுக்கோஸின் அளவு அதிகரித்து இந்த நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டால் அறிகுறிகள்:
பொதுவாக நீரிழிவு நோய் ஏற்பட்டால் அதன் ஆரம்ப கால அறிகுறியாக அதிக அளவு தாகம் ஏற்படுதுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல்,அதிகமான பசி போன்ற அறிகுறிகள் தென்படும்.
ஆனால், பெண்களைப் பொறுத்தவரையில் இது போன்ற பிரச்சனைகள் மற்றும் இன்னும் சில அறிகுறிகள் அடிக்கடி ஏற்படும் போது அவர்கள் உடலில் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்கக்கூடும். இதனால், உடனடியாக மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து அதற்கு ஏற்ற மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.
1) மாதவிடாயில் மாற்றம்:
மாதவிடாய் சுழற்சி வழக்கத்திற்கு மாறாக தள்ளிப் போகும் நேரத்தில் அதற்கு பல்வேறு காரணங்கள் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு ஹார்மோன் குறைபாட்டால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படும்.இன்னும் சிலருக்கு கர்ப்பமாக இருந்தால் மாதவிடாய் தள்ளிப் போகும்.
ஆனால்,இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தாலும் மாதவிடாய் சுழற்சியில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இது டைப் 1 நீரிழிவு நோய் இருப்பதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.இதனால், மாதவிடாய் சுழற்சி இயல்பான நிலையை விட மிகவும் தாமதமாக ஏற்படும்.
ஆனால்,குறிப்பிடத்தக்க விஷயம் மாதவிடாய் சுழற்சியை சீரான நிலையில் இல்லாமல் தாமதமாக ஏற்பட்டால் நீரில் உன் நோய்தான் இருக்கிறது என்று பயப்பட தேவையில்லை வேறு ஏதுவும் சில காரணங்களுக்காக கூட தள்ளி போகலாம்.
2) பிறப்புறுப்பில் பூஞ்சை தொற்று:
நீரிழிவு நோய் ஏற்படும் தருணத்தில் இருக்கும் பெண்களுக்கு அடிக்கடி “வஜைனல் ஈஸ்ட் இன்பெசன்” என்று அழைக்கப்படும் பிறப்புறுப்பில் பூஞ்சை தொற்று ஏற்படும் நிலை அதிகமாக காணப்படும். இதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கக்கூடும்.
இதன் காரணமாக உடல் நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைந்து இது போன்று ஏற்படும் தொற்றுகளை தானாக சரிசெய்யும் ஆற்றலை இழந்து விடும்.
3) வழக்கத்தைவிட பெரிய அளவில் குழந்தை:
அமெரிக்கன் நோய் தடுப்பு மற்றும் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கர்ப்ப காலத்தில் 10%-கர்ப்பிணி பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறுகின்றனர்.
இதற்கு காரணம் கர்ப்பிணிப் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது போன்று கர்ப்ப காலங்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை வழக்கத்தைவிட பெரிய அளவில் காணப்படும் என ஆய்வுகள் கூறுகின்றது.
அதுமட்டுமில்லாமல், கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் பெண்கள் பல பேருக்கு சில வருடங்களுக்குப் பிறகு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படலாம் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
4) கர்ப்பப்பை நீர்க்கட்டி:
நீரிழிவு நோய் ஏற்பட்டால் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை விட பெண்களுக்கு எண்ணற்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதிலும், குறிப்பாக கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் நீரிழிவு நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.
குறிப்பாக, டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படும் பெண்களுக்கு “பாலி சிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்” என்ற கர்ப்பப்பையில் நீர்கட்டி ஏற்படும் ஆபத்து இருக்கும்.
5) சிறுநீர் பாதை நோய் தொற்றுகள்:
சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய் போன்ற சிறுநீர் பாதைகளில் பாக்டீரியா தொற்றுப் ஏற்படுவதன் காரணமாக சிறுநீர் பாதை தொற்று ஏற்படுகிறது. இது ஆண்களை விட பெண்களை பாதிக்கிறது. இதன் காரணமாக நீரிழிவு நோய் பெண்களுக்கு ஏற்படுகிறது. சிறுநீரில் உள்ள சர்க்கரை பாக்டீரியா வளர்ச்சிக்கு இனப்பெருக்கம் செய்ய உதவுகிறது.
6) உடலுறவின் போது நாட்டம் குறைதல்:
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலியல் உணர்வு குறைந்து காணப்படும். பிறப்புறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் பிரச்சனைகள் காணப்படலாம்.
இதன் காரணமாக பாலியல் உணர்ச்சியை குறைக்ககூடும். யோனி வறட்சி,நரம்பு சேதம் மற்றும் உணர்வு குறைவதை உணர முடியும். இவையும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் தான்.
7) கண்பார்வை குறைபாடு:
நீரிழிவு நோயினால் கண்களில் இரத்த நாளங்கள் சேதமடைந்து கண்பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இது காலப்போக்கில் கண்பார்வை இழப்பு மற்றும் குருட்டுத் தன்மையை ஏற்படுத்தும். இது ஆண்,பெண் என இரு பாலருக்கும் பொதுவான அறிகுறி ஆகும்.
சுகர் குறைய உணவு:
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை கொண்ட மீன்களை நாம் வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சுகரை குறைக்க முடியும். மத்தி மீன்,சால்மன், கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகள் சாப்பிடுவதன் மூலமாக சுகரின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும்.
சிவப்பு அரிசி மற்றும் குதிரைவாலி போன்ற முழு தானிய உணவு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாகவும் சுகரை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும்.
சுகர் அறிகுறிகள் ஆண்கள்:
சுகர் அறிகுறிகள் பெண்கள்:- ஆண்களுக்கு சர்க்கரை அளவு கூடினால் நீரிழிவு நோய் ஏற்படக்கூடும்.இதற்கான அறிகுறிகள் உடல் சோர்வு,அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை ஆரம்ப கால அறிகுறிகள் ஆகும்.
நம் கழுத்தில் உள்ள தோள் பகுதிகள் கருமை நிறத்தில் காணப்பட்டு பட்டை போல் காணப்படும். இது போன்று இருந்தால் நீங்கள் உடனடியாக இரத்த பரிசோதனை செய்து சர்க்கரை அளவை சரிபார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
High சுகர் அறிகுறிகள்:
சர்க்கரை வியாதி அதிக அளவு இருப்பதற்கான பொதுவான அறிகுறிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக அளவு தாகம் ஏற்படுவது, உடல்நிலை மிகவும் சோர்வாக காணப்படுவது, கண்களில் எரிச்சல் மற்றும் குறைபாடு ஏற்படுவது, ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் ஆறுவதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்வது போன்ற அறிகுறிகள் அனைத்துமே அதிக அளவு சுகர் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
High sugar symptoms in tamil:
* கிட்னியில் பிரச்சனை ஏற்படுவது.
* பார்வையில் ஏதேனும் குறைபாடு ஏற்படுவது.
* அடிக்கடி சிறுநீர் கழிப்பது.
* கால் வலி மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படுவது.
* நரம்பு சேதம் மற்றும் நினைவாற்றலை இழப்பது.
* உடல் சோர்வு மற்றும் தோல் பகுதிகள் கருமை நிறமாக காணப்படுவது.
Low sugar symptoms in tamil:
* அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பது.
* சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகளால் சிறுநீர் பாதையில் நோய் தொற்று ஏற்படுவது.
* உடல் சோர்வு நிலையில் காணப்படுவது.
* அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
* கழுத்து பகுதியில் கருமை நிறமாக காணப்படுதல்.
* கண்களில் எரிச்சல் ஏற்பட்டு பார்வை குறைபாடு மற்றும் கண் வீக்கம் அடைதல்.
* கால் வலி மற்றும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுதல்.
பொதுவான சுகர் அறிகுறிகள்:
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
2. உடல் பருமன் அல்லது உடல் குறைவு
3. உடல் எரிச்சல்
4. பார்வையில் மாற்றம் ஏற்படுதல்
5. அளவுக்கு அதிகமான தாகம் மற்றும் அதிகப்படியான பசி
6. உடல் சோர்வு
7. கழுத்து பகுதியில் கருமை நிறமாக காணப்படுதல்
8. தோல் சம்பந்தப்பட்ட தொற்றுகள்
9. தோல்களில் நிறம் மாறுதல்
10. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படுதல்
சுகர் உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம்?
ஆப்பிள்,வாழைப்பழம்,முலாம்பழம் போன்ற பல வகைகளை சாப்பிடலாம். நட்ஸ் உணவுகள், கோழி, மீன்,முட்டை மற்றும் புரதச்சத்து உணவுகளையும் சாப்பிடலாம். பால் மற்றும் தயிர் போன்ற குறைந்த கொழுப்பு சக்தி கொண்ட உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்.
சுகர் அதிகமானால் என்ன செய்வது?
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக காணப்படும் பொழுது இரத்த நாளங்கள் பாதிப்படைகிறது.இதனால், இதயமும் பாதிப்படைகிறது. இதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் கூட நிகழும்.
சுகர் குறைக்க என்ன செய்ய வேண்டும்?
சுகர் அறிகுறிகள் பெண்கள்:- சுகரை குறைப்பதற்கு காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவு சாப்பிட வேண்டும். சர்க்கரை சத்து அதிகமாக உள்ள உணவுப் பொருட்கள், குளிர்பானங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஆழ் கடல் மீன்கள், நட்ஸ் வகை உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது. தினமும் 1-கிலோமீட்டர் தூரம் நடை பயிற்சி மேற்கொள்வது இதைவிட மிகவும் சிறந்தது.
சர்க்கரை நோயின் அறிகுறி என்ன?
* அதிக தாகம் ஏற்படுதல்
* அடிக்கடி சிறுநீர் கழித்தல்
* கண் பார்வையில் குறைபாடு
* உடல் பருமன் மற்றும் இடை இழப்பு
* உடல் சோர்வு
* தோல்களில் நிறம் மாறுதல்
Read Also:- பெண்கள் உடல் எடை குறைக்க