Sanga ilakkiya History in Tamil – சங்க இலக்கியம் வரலாறு
Sanga ilakkiya history in tamil – சங்க இலக்கியம் வரலாறு: உலகின் மூத்த மற்றும் முன்மையான தொன்மை வாய்ந்த புகழ்பெற்ற மொழி தான் நம் தமிழ் மொழி. இந்த தமிழ் மொழி சங்க கால இலக்கிய, இலக்கண நூல்களை கொண்டு தான் போற்றப்பட்டது. இந்த சங்ககால நூல்களை பல புலவர்கள் இயற்றி உள்ளனர்.
இதற்கு, சங்கங்கள் அமைத்து மன்னர்கள் முன்னிலையில் பாடி உள்ளனர். இந்த சங்கத்திற்கு “முச்சங்கம்” என பெயரிட்டனர். இந்த நூல்களின் வாயிலாக தான் நாம் இன்றைய தமிழ் மொழியின் சிறப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறோம். இந்த சங்க இலக்கியம் எவ்வாறு உருவானது அதன் வரலாற்றுப் பதிவுகளை இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
சங்க இலக்கியம் உருவான வரலாறு || Sanga ilakkiya history in tamil essay
ஆயிரம் ஆண்டுக்கு மேல் மிகப் பழமையான மொழியாக நம் தமிழ் மொழி விளங்குகிறது. இதற்கு, காரணம் தமிழ் மொழி நீண்டகால இயக்கிய வரலாற்றை கொண்டு காணப்படுவது தான். இதில், முதல் வரலாற்று காலம் “சங்க காலம்” ஆகும்.
முச்சங்கங்கள்:
பண்டைய தமிழகத்தில் மதுரை பகுதியில் ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் காலத்தில் தமிழ் இலக்கிய ஆய்வுகளும், சங்க இலக்கிய செய்யுள்களும் இயற்றும் பணி முதலில் நடைபெற்றது. இதுவே, “முதல் சங்கம்” எனப்பட்டது.
இயற்கையின் சீற்றங்களால் மதுரை அழிந்தது. அதனால், கபாடபுரம் என்னும் ஊரை பாண்டிய மன்னர்கள் தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார்கள். அங்கு, ஒரு தமிழ் சங்கம் உருவாக்கப்பட்டு புலவர்களும், அரசர்களும் இலக்கிய ஆய்வுகளை மேற்கொண்டனர். இது, “இடைச்சங்கம்” என அழைக்கப்பட்டது.
கபாடபுரம் இயற்கை சீற்றங்களால் அறிவுற்ற பிறகு, மீண்டும் பாண்டிய மன்னர்கள் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். அப்போது அங்கு ஒரு தமிழ் சங்கம் கி.பி.200 வரை நடைபெற்றது. இது “கடைச்சங்கம்” என்று அழைக்கப்பட்டது.
இதுபோன்று மூன்று சங்கங்கள் உருவாக்கப்பட்டு புலவர்களும், அரசர்களும் தமிழ் செய்யுள் நூல்களை இயற்றி தமிழ் இலக்கியங்களை உருவாக்கினார்கள். இந்த மூன்று சங்கங்களின் காலமே “சங்ககாலம்” என்று அழைக்கப்படுகிறது.
முதற் சங்கம்:
முதற் சங்கம் என்பது பண்டைய தமிழகத்தில் தென்மதுரை ஆட்சி செய்த பாண்டிய மன்னர் “காய்சின வழுதி”என்ற மன்னரால் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. 4440-ஆண்டுகள் 89-அரசர்கள் இந்த முதல் சங்கத்தை பராமரித்து நடத்தியுள்ளனர்.
பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை போன்ற நூல்கள் 4449-புலவர்களால் தமிழ் மொழியினை ஆராய்ந்து பாடப்பட்டுள்ளது.
அகத்தியர், குன்றெறிந்த முருகவேல், முரஞ்சியூர் முடிநாகராயர், நதியின் கிழவன் போன்ற பல புலவர்கள் இந்த முதற்கங்கத்தில் தமிழ் மொழியினை ஆராய்ந்து இந்த செய்யுள்களை பாடியுள்ளனர்.
இடைச்சங்கம்:
தென்மதுரை இயற்கை சீற்றங்களால் அறிவுற்ற பிறகு பாண்டிய மன்னர்கள் கபாடபுரம் என்ற ஊரில் ஒரு சங்கத்தை தோற்றுவித்தனர். அதுதான், “இடைச்சங்கம்”.
இந்த இடைச்சங்கத்தை வெண் தேர்ச் செழியன் என்னும் பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்டு 59-மன்னர்களால், 3700-ஆண்டு காலம் நடத்தப்பட்டது.
இந்த சங்கத்தில் கலை, குருகு, வெண்டாளி, வியாழ மாலை அகவல் போன்ற நூல்கள் 3700-புலவர்களால் பாடப்பட்டுள்ளது.
இந்த சங்கத்தில் அகத்தியர், இருந்தையூர் கருங்கோழியார், வெள்ளூர்க் காப்பியனார், தொல்காப்பியர் போன்ற புகழ்பெற்ற புலவர்கள் செய்யுள் பாடல்களை இயற்றி பாடியுள்ளனர்.
கடைச்சங்கம்:
சங்க இலக்கியம் :- கபாடபுரம் இயற்கை சீற்றங்களால் அறிவுற்ற பிறகு இறுதியாக மதுரையில் ‘முடித்திருமாறன்’ என்னும் பாண்டிய மன்னனால் மூன்றாம் சங்கம் எனப்படும் “கடை சங்கம்” உருவாக்கப்பட்டது.
இந்த கடை சங்கம் 1850-ஆண்டுகள் 49 – மன்னர்களால் நடத்தப்பட்டது. இதில், எட்டுத்தொகை நூல்கள் என குறிப்பிடப்படும் புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, குறுந்தொகை, கலித்தொகை, பரிபாடல் போன்ற நூல்கள் இந்த சங்கத்தில் தான் இயற்றப்பட்டுள்ளது.
நக்கீரனார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதன் இளநாகனார், சேந்தம் பூதனார், அறிவுடையரனார், சிறு மேதாவியார் போன்ற 449-புலவர்களால் இச்செய்யுள் பாடல்கள் இயற்றப்பட்டு பாடப்பட்டது.
சங்க கால இலக்கிய என்றால் என்ன அதனை விவரி? || Sanga ilakkiya history in tamil pdf download
சங்க இலக்கியம் :- 200 காலகட்டங்களில் எழுதப்பட்ட செவ்வியல் “இலக்கியங்கள்” ஆகும். 473-புலவர்களால் இயற்றப்பட்ட 2381-பாடல்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல புலவர்களும், நாட்டை ஆட்சி செய்த மன்னர்களும் மற்றும் பெண்பாற் புலவர்கள் பற்றிய தகவல்கள் ஏராளமாக உள்ளது.
சங்ககால இலக்கிய நூலின் மிகவும் பழமையான மற்றும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான நூல் தான் “தொல்காப்பியம்”. அகத்தியரின் மாணவரான இளங்கோவடிகள் இந்த தொல்காப்பிய நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொல்காப்பியம் மூலம் தான் நாம் இலக்கிய நூல்களை அகம்,புறம் என இரு வகைகளாக பிரித்து கூறுகிறோம்.
இளங்கோவடிகள் கி.மு 500-நூற்றாண்டில் வாழ்ந்ததாக பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றது. ஆனால், இளங்கோவடிகள் இயற்றிய தொல்காப்பியமே இன்றளவும் சங்க கால நூலில் மிகவும் பழமை வாய்ந்த நூலாக கருதப்படுகிறது.
இந்தத் தொல்காப்பியம் மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அவை,, சொல் அதிகாரம், பொருள் அதிகாரம், எழுத்து அதிகாரம் என ஒவ்வொரு அதிகாரமும் 9-இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சொல் அதிகாரம்:
சங்க இலக்கியம் :- பெயர், ஆக்கம், வேற்றுமைகள், இடை, வினை, உரி என நால் வகை சொற்கள் பற்றி இந்த அதிகாரம் கூறுகிறது. இதில், 463-நூற்பாக்கள் உள்ளன. 9-இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
• பெயரியல்
• உயிரியல்
• வினையியல்
• இடையியல்
• எச்சவியல்
• வேற்றுமையில்
• வேற்றுமை மயங்கியல்
• கிழவியாக்கம்
• விளி மரபு
ஆகிய, 9- பிரிவுகள் ஆகும்.
பொருள் அதிகாரம்:
பொருள் அதிகாரத்தில் தான் வாழ்க்கையை அகம், புறம் என பிரித்து வாழ்வதற்கான இலக்கணத்தை இளங்கோவடிகள் கூறியுள்ளார். இந்த பொருள் அதிகாரம் 665-நூற்பாக்களை கொண்டுள்ளது. 9-இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
• அகத்திணையியல்
• புறத்திணையியல்
• களவியல்
• கற்பியல்
• பொருளியல்
• உவமையியல்
• செய்யுளியல்
• மெய்ப்பாட்டியல்
• மரபியல்
ஆகிய, 9- பிரிவுகள் ஆகும்.
எழுத்து அதிகாரம்:
எழுத்தின் பிறப்பு, சொல் தொகை, வகை, பெயர் மயக்கம், சொற்களின் புணர்ச்சி ஆகியவற்றை விளக்கும் அதிகாரமாக 483-நூற்பாக்களை கொண்டு 9-இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
• மொழி மரபு
• தொகை மரபு
• நூல் மரபு
• பிறப்பியல்
• உருபியல்
• புணரியல்
• புள்ளி மயங்கியல்
• உயிர் மயங்கியல்
• குற்றியலுகர புணரியல்
இந்த தொல்காப்பியத்தின் அதிகாரங்கள் தான் நம் தமிழ் நாகரிகத்தினை உலகின் தலைசிறந்த நாகரிகமாக கொண்டு வந்ததற்கு முக்கிய சான்றாக விளங்கியுள்ளது.
சங்க கால இலக்கிய நூல்கள் || sanga ilakkiya noolgal
சங்க இலக்கிய நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
பதினெண்மேற்கணக்கு நூல்களை பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்கள் என இரு வகையாக பிரிக்கலாம்.
பதினெண் மேற்கணக்கு நூல்கள்:
பத்துப்பாட்டு நூல்கள்:
• திருமுருகாற்றுப்படை
• பொருநராற்றுப்படை
• சிறுப்பாணாற்றுப்படை
• பெரும்பாணாற்றுப்படை
• நெடுநால் வாடை
• குறிஞ்சிப்பாட்டு
• முல்லைப்பாட்டு
• மலைபடுகாடம்
• பட்டினப் பாலை
• மதுரை காஞ்சி
1. திருமுருகாற்றுப்படை:
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளைப் பற்றிய தகவல்கள் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. இது மதுரை கணக்காயனார் மகன் நக்கீரர் என்பவர் எழுதிய நூலாகும். இது, 317-அடிகளை கொண்டுள்ளது.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை போன்ற முருகனின் ஆறுபடை வீடுகளின் தகவல்களும் இந்த ஆற்றுப்படை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2. பொருநராற்றுப்படை:
இது, முடத்தாமக் கண்ணியார் சோழன் கரிகாலனுக்காக எழுதியது இதில், 248-அடிகள் உள்ளது. இதில் ஒரு பாடகியின் பேரழகை புலவர் அழகாக வர்ணிக்கும் காட்சியாக எழுதப்பட்டுள்ளது.
இந்த நூலில் சோழ மன்னன் கரிகாலன் தன்னை தேடி வந்த பாணனுக்கு வெள்ளை குதிரை கொண்ட தேரை வழங்கி ஏழ அடி பின் நோக்கி நடந்து பாணனை அந்த தேரில் ஏற சொல்லி போற்றியதாக செய்திகள் கூறப்பட்டுள்ளது. சோழ நாட்டின் செல்வ செழிப்பான வளமும், காவேரி ஆற்றின் செல்வமும் பற்றி இதில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
3. சிறுப்பாணாற்றுப்படை:
ஓய்மான் நாட்டு நல்லிய கோடன் மன்னனுக்காக இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் எழுதிய ஒரு நூலாகும். இதில் 269 –அடிகள் உள்ளது.
இந்த நூலில் சேர, சோழ, பாண்டிய நாட்டின் வளம், பாண்டிய நாட்டின் பெருமை கடையெழு வள்ளல்களில் சிறப்புகள் போன்றவை கூறப்பட்டுள்ளது.
4. பெரும்பாணாற்றுப்படை:
தொண்டைமான் இளந்திரையன் என்ற குறுநில மன்னருக்கு புலவர் கடியலூர் கண்ணனார் எழுதிய ஒரு ஆற்றுப்படை நூலாகும். இது 500 –அடிகளை உடையது.
குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையையும், இடையர் குடியிருப்பு முறைகளையும், முல்லை நிலத்தின் மக்கள் பயணிகளுக்கு அளிக்கும் உணவு முறைகளையும், மருத நிலத்தில் காணப்படும் விருந்தோம்பல் காட்சிகளையும், மீனவர் குடியிருப்பு, காஞ்சீபுரத்தின் சிறப்பு, மன்னன் இளந்திரையானின் சிறப்பு, அவருடைய விருந்தோம்பல் போன்றவற்றைப் பற்றி இந்த நூலில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
5. நெடுநால் வாடை:
சங்க இலக்கியம் :- மதுரை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்காக மதுரை கணக்காயனார் மகன் நக்கீரர் எழுதிய ஒரு
நூல் தொகுப்பாகும். இது 188 – அடிகளை உடையது.
நீண்ட காலமாக குளிர்காலத்தில் துன்பங்களில் தவிக்கும் இடையர்கள், பறவைகள், மாடுகள், ஆடுகள், குரங்குகள், மழைகாலத்தின் சிறப்புகள், மாலை நேரத்தில் பெண்கள் விளக்கேற்றி வழிபடும் முறைகள், அரண்மனையின் அமைப்புகள், அந்தப்புரத்தின் அமைப்புக்கள், அரசியின் அழகிய வேலைபாடு அமைந்த கட்டில், அரசி போருக்கு சென்ற தம் கணவனே நினைத்து வருந்தும் நிலமை போன்றவற்றை பற்றி இந்நூலின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
6. குறிஞ்சிப்பாட்டு:
ஆரிய மன்னன் பிரகதத்தனுக்கு கபிலர் பாடிய பாட்டு ஆகும். இது, 261 – அடிகளை உடையது. இது தமிழ் கழகத் திருமண முறையை பற்றி விரிவாக கூறுகிறது.
இதில், முக்கியமான கருத்து தலைவியின் தோழி ஒருத்தி தலைவியின் தாயிடம் தலைவனை தலைவி எவ்வாறு தினைப்பு புனத்தில் சந்தித்தால், காட்டு யானையிடமிருந்து தலைவன் அவர்களை எப்படி காப்பாற்றினான். தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே எவ்வாறு காதல் ஏற்பட்டது, தலைவன் எவ்வாறு திருமணத்தை விரும்புகிறான், தலைவனை நினைத்து தலைவி படும் துயரம் போன்றவற்றலாம் விவரமாக கூறும் கருத்தாக கூறப்பட்டுள்ளது.
கண்கள் சிவக்க சிவக்க அருவியில் குளித்துவிட்டு தலைவியும், தோழியும் 99-மலர்களால் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் காட்சி சிறப்புடையதாக அமைந்துள்ளது.
7. முல்லைப்பாட்டு:
பாண்டிய மன்னன் செருவென்ற நெடுஞ்செழியனுக்காக நப்பூதனார் இயற்றிய நூலாகும். இது 103 – அடிகளை கொண்டுள்ளது.
இந்த நூலில் மன்னனின் பாசறையில் பணிபுரியும் பெண்கள், தண்ணீர் மணி காட்டி, தன் வீரர்களை நினைத்து வருந்தும் மன்னன்,மன்னனை நினைத்து ஏங்கும் அவன் மனைவி, முல்லை நிலத்தின் அழகான வருணனை பற்றி நாம் விரிவாக பார்க்கலாம்.
8. மலைபடுகாடம்:
குறுநில மன்னன் நன்னன் வேண்மானுக்காக புலவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் எழுதிய நூலாகும். இதில், 583 – அடிகள் உள்ளது.
இந்த பாடலில் பாணர் குடும்பங்கள் பல்வேறு இசைக்கருவிகளை கைகளில் கட்டிக் கொண்டு செல்வதும், நன்னனின் சிறப்பு, நவிர மலையின் தன்மை, பாதையில் ஏற்படும் நல்லது கெட்டது, கானவர் குடியும் விருந்தோம்பலும், நன்னனின் மலைநாட்டு செல்வம், இரவில் பயணம் கூடாது என்ற அறிவுரை, கள்வனிடமிருந்து தப்புதல், இரவில் குகையில் தங்குதல், இறைவனை தொழுது செல்லுதல், மலைப்பாம்பிடம் இருந்து தப்புதல், மலை மக்களின் விருந்தோம்பல், வழியில் காணும் சிற்றூரின் விருந்தோம்பல், உழவர்களின் உதவி, நன்னனின் அரண்மனை, நன்னனின் கொடைத்தன்மை போன்றவற்றை நாம் தெரிந்து கொள்ளலாம்.
9. பட்டினப் பாலை:
கரிகாலச்சோழன் மன்னனுக்காக புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் எழுதிய நூலாகும். இது 301 – அடிகளை கொண்டுள்ளது.
கரிகால சோழனின் பெருமையும் நாட்டின் வளமையும், காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்புகளையும், மறவர்களின் விளையாட்டு களம், பரதவர் இருப்பிடம், காவிரிப்பூம்பட்டினத்தின் இரவு நிகழ்ச்சிகள், ஏற்றுமதி இறக்குமதி, உழவர், அந்தணர், வணிகர், மாளிகைகள், பல்வேறு கொடிகள், வசூலிப்பவர்கள், முனிவர் வாழும் தவப் பள்ளிகள், ஊரின் செல்வம், கரிகாலனின் போர் திறமை போன்றவற்றை நாம் இதில் தெளிவாக காணலாம்.
குறிப்பாக காவிரி பூம்பட்டினத்தின் பற்றிய விரிவான விவரங்களை இதில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
10. மதுரை காஞ்சி:
பாண்டிய மன்னன் செருவென்ற நெடுஞ்செழியனுக்காக புலவர் மாங்குடி மருதனார் பாடிய பாடல் ஆகும். இது, 782 – அடிகளை உடையது.
சங்க இலக்கியம் :- பாண்டிய நெடுஞ்செழியனின் வீரமும் சிறப்பும், நால்வகை படையின் வலிமையும், பாணர்களுக்கு யானைகளையும் பொன்னால் செய்த தாமரை மலர்களையும் மன்னன் பரிசாக கொடுப்பதும், குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை போன்ற நிலங்களின் சிறப்பு, மதுரை நகரின் கோட்டையும், சமணப்பள்ளி, அந்தணர் பள்ளி, நீதிமன்றம், இரவின் மூன்று சமாங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், தொழில் மக்கள், மதுரையின் ஒலிகள், மதுரையின் சிறப்பு போன்றவற்றை நாம் தெரிந்து கொள்ளலாம்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:
1. திருக்குறள்
2. நாலடியார்
3. நான்மணிக்கடிகை
4. சிறுபஞ்சமூலம்
5. முதுமொழிக்காஞ்சி
6. இனியவை நாற்பது.
7. இன்னா நாற்பது
8. பழமொழி நானூறு
9. திரிகடுகம்
10. ஆசாரக்கோவை
11. ஏலாதி
12. களவழி நாற்பது
13. கார் நாற்பது
14. ஐந்திணை ஐம்பது
15. ஐந்திணை எழுபது
16. திணைமொழி ஐம்பது
17. கைந்நிலை
18. திணைமாலை நூற்றைம்பது
சங்ககால இலக்கியங்கள் || Sanga ilakkiyam in tamil
- சங்க கால இலக்கியங்கள் அகம், புறம் என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.
- அகம் – அகம் என்பது தலைவன் தலைவிக்கு கூறும் காதல் பற்றிய செய்திகளை கூறுவது ஆகும்.
- புறம் – புறம் என்பது மன்னர்களின் வீரம், கொடை , போர் திறமைகள் போன்றவை கூறுவது ஆகும்.
எட்டுத்தொகை நூல்கள் || எட்டுத்தொகை நூல் எது?
• புறநானூறு
• அகநானூறு
• குறுந்தொகை
• ஐங்குறுநூறு
• பதிற்றுப் பத்து
• பரிபாடல்
• நற்றிணை
• கலித் தொகை
1. புறநானூறு:
இதில் பண்டைத் தமிழகத்தை ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் போர்களையும், வெற்றிகளையும் மற்றும் குறுநில மன்னர்களின் கொடை சிறப்புகளையும் எடுத்துக் கூறுகிறது.
இது மொத்தம் 400 – பாடல்களை கொண்டுள்ளது. இது பல புலவர்களால் எழுதப்பட்டது.
பிற நாட்டு மன்னர்கள் தங்களுடைய வீரர்களிடம் காட்டிய அன்பும், கருணையும், எதற்கும் அஞ்சாமல் உயிர் நீத்த வீர வரலாற்று சிறப்புகளையும் கூறுகிறது.
சுருக்கமாக கூறினால் இது பண்டைய காலத்தின் செய்திகளை திறம்பட அறியும் கருவூலமாக விளங்குகிறது.
2. அகநானூறு:
பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த சேர, சோழர், பாண்டிய மன்னர்கள், கடையேழு மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் பற்றிய வரலாற்று செய்திகளை இதில் நாம் தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் காணப்பட்ட மலைகள், ஆறுகள் போன்ற இயற்கை சூழல் மிகுந்த இடங்களும் இதில் இடம் பெற்றுள்ளது.
இதில் மொத்தம் 400 – பாடல்கள் இடம் பெற்றது.
3. குறுந்தொகை:
இந்த நூலின் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். இதில், ஆதிமந்தியார், ஔவையார், அள்ளூர் நன்முல்லையார், ஒக்கூர் மாசாத்தியார், வெள்ளி வீதியார் மற்றும் காக்கை பாடினியார் போன்ற பல பெண்பாற் புலவர்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளது.
4. ஐங்குறுநூறு:
இதில் இடம் பெற்றுள்ள முல்லைப் பாடல்களை பேயனாரும், குறிஞ்சிப் பாடல்களை கபிலரும், மருதப் பாடல்களை அம்மூவணாரும், பாலை பாடல்களை ஓதலாந்யாரும் இயற்றியுள்ளனர். இதற்கும், கடவுள் வாழ்த்து பாடியவர் பெருந்தேவனார் ஆவார்.
தலைமகள் ஒருத்தி தலைவன் ஒருவன் மீது காதல் வயப்பட்டு போய்விடுகிறாள். இதனை, தெரிந்து கொண்ட தலைவியின் தாய் அவளை தேடி வரும்படி பல பேரை அனுப்புகிறாள். ஆனால், அவர்களோ காணவில்லை என்று மீண்டும் திரும்பி வருகின்றனர். இதனால், சிறு வயதில் இருந்து பாசமாக வளர்த்த தன் மகளை விட்டு ஒரு நாளும் பிரியாத தாய்க்கு மனதில் மிகுந்த துன்பம் ஏற்படுகிறது. இதனை தெளிவாக இந்நூல் கூறுகிறது.
5. பதிற்றுப்பத்து:
சேர மன்னர்களின் சிறப்புகளையும், செல்வாக்குகளையும், கொடைத் திறமையும் தெரிந்து கொள்வதற்கு இந்நூல் பெரிதும் உதவுகிறது.
“ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியோடு ஆயிடை
மன்மீக் கூறுநர்”
‘ஓவத் தன்னை வினைபுனை நல்லில்
பாவை அன்ன நல்லோள்’
போன்ற அடிகள் சிறந்த சித்திரங்களாக காணப்படுகின்றது.
6. பரிபாடல்:
பரிபாடல் அகம், புறம் என இரு கொண்டுள்ளது. திருமாலின் சிறப்புகளையும், முருகனின் பெருமைகளையும் இந்நூல் அழகாக எடுத்துக் கூறுகிறது. இதில், இடம்பெற்றுள்ள 22 – பாடல்களை, 13 – புலவர்கள் பாடியுள்ளனர்.
இதற்கு பரிமேலழகர் உரை எழுதி உள்ளார். இவர், திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
7. நற்றிணை:
நற்றுணையில் மொத்தம் 400 – பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இது பல புலவர்களால் எழுதப்பட்டுள்ளது.
8. கலித்தொகை:
பழந்தமிழரின் வீர விளையாட்டான “ஏறு தழுவுதல்” பற்றிய முழு விவரங்கள் இந்த நூலில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இதில், 150 – பாடல்கள் இடம் பெற்றுள்ளது. 5 – புலவர்கள் எழுதியுள்ளனர்.
சங்க கால தமிழ் புலவர்கள்:
சங்க காலத்து இலக்கிய நூல்கள் அனைத்தும் பல்வேறு தமிழ் புலவர்களால் இயற்றப்பட்டது. சங்கால இலக்கிய புலவர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள் சிலர்,
• கபிலர்
• பரணர்
• கணியன் பூங்குன்றன்
• நக்கீரனார்
• திருவள்ளுவர்
• மாணிக்கவாசகர்
• ஔவையார்
• பேயனார்
• இளங்கோவடிகள்
• ஓதலாந்யார்
• பாரதம் பாடிய பெருந்தேவனார்
• அம்மூவணார்
இந்த புலவர்கள் அனைவரும் சங்க இலக்கிய நூல்களை இயற்றுவதில் வல்லமை பெற்றிருந்தனர்.
Sanga ilakkiya history in tamil pdf || Sanga ilakkiyam in tamil
சங்க கால சிற்றரசர் யார்?
பண்டைய தமிழகத்தை ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டியன் என்ற மூவேந்தர்கள் மட்டும் இல்லாமல், சில சங்கால அரசர்களை நாம் இங்கே குறிப்பிடலாம். இவர்களை “குறுநில மன்னர்கள்” என்றும் “சிற்றரசர்கள்” என்றும் கூறுகின்றனர்.
சங்க இலக்கியம் எந்த நூற்றாண்டு?
சங்க இலக்கியம் மு.400 லிருந்து கி.பி 300-வரை என சில அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சங்கம் பற்றிய குறிப்புகளை முதன்முதலாக 8-நூற்றாண்டில் வாழ்ந்த ‘இறையனார்’ அகப்பொருளில் கூறியுள்ளார்.
இலக்கண நூல்களில் பழமையான நூல் எது?
தமிழ் மொழியில் கிடைத்த மிகவும் பழமையான இலக்கண நூல் “தொல்காப்பியம்” ஆகும். தமிழ் மொழிப்பாங்கை இந்த உலகிற்கு உணர்த்தும் ஒரு நூல் தான் இலக்கணம்.
அகமும் புறமும் கலந்து வரும் நூல் எது? || எட்டுத்தொகை நூல்களுள் அகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல் எது?
அகப்பொருள் பற்றிய நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு கலித்தொகை.
புறப்பொருள் பற்றிய நூல்கள் – புறநானூறு, பதிற்றுப்பத்து.
அகமும் புறமும் கலந்து வரும் நூல் – “பரிபாடல்” ஆகும்.
புறநானூறு பதிப்பித்தவர் யார்?
1894-ஆம் ஆண் வே.சாமிநாதையர் பழைய உரையோடு நூல் முழுமைக்கும் குறிப்புகளை எழுதி முதன் முதலாக பதிப்பித்து வெளியிட்டார்.
அகநானூறு இயற்றியவர் யார்?
இந்நூலை இயற்றியவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இந்த நூலை தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிர பெருவழுதி மன்னன் ஆவார். 140-புலவர்கள் இந்நூலை பாடியுள்ளனர்.
மிக முக்கியமான தமிழ் இலக்கிய நூல் எது?
தமிழ் மொழியை அறிய உதவும் மிகவும் பழமை வாய்ந்த முக்கியமான இலக்கண நூல் “தொல்காப்பியம்” ஆகும். தொல்காப்பியம் இலக்கிய வடிவில் இருக்கும் ஒரு இலக்கண நூலாக கருதப்படுகிறது.
தொல்காப்பியத்தின் வழி நூல் எது?
தொல்காப்பியத்தின் வழி நூலாக “நன்னூல்” பார்க்கப்படுகிறது. நன்னூல் என்பது ஒரு தமிழ் இலக்கணம் நூலாகும்.
எட்டுத்தொகையில் முதல் நூல் எது?
எட்டுத்தொகை நூல்களில் முதல் நூலாக கருதப்படுவது “நற்றிணை” ஆகும்.
பத்துப்பாட்டு எட்டுத்தொகை எந்த இலக்கிய வகை?
பத்துப்பாட்டு சங்க இலக்கிய நூல்களின் தொகுப்புகளில் ஒன்றாகும். பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை இவை இரண்டு நூல்களும் “பதினெண்மேற்கணக்கு” நூல்களாகும்.
எட்டுத்தொகை நூல்களுள் குறைந்த அடிகளை கொண்ட நூல் எது?
எட்டுத்தொகை நூல்கள் ஒன்றுதான் இந்த குறுந்தொகை. இந்த குறுந்தொகை “நல்ல குறுந்தொகை” என சிறப்பித்து போற்றப்படுகிறது. இதில், குறைந்த அடிகள் கொண்ட பாடல்கள் காணப்படுவதால் இதற்கு “குறுந்தொகை” என பெயர் வந்தது.
குறிப்பு:
சங்க இலக்கியம் :- இது போன்று பல புலவர்களை கொண்டு மன்னர்கள் சங்கம் தோற்றுவித்து எண்ணிலடங்கா இலக்கிய நூல்களை இயற்றி அவற்றை அகம், புறம், பதினெண்மேற்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு என தனித்தனி வகையாக பிரித்து எழுதியுள்ளனர்.
இந்நூல்களை, பாடி தமிழ் மொழியின் பெருமையையும், புகழையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடும், மிகுந்த ஆர்வத்தோடும் அந்தக் காலத்தில் இந்த இலக்கிய நூல்களை இயற்றியுள்ளனர்.
இவ்வாறு தான் சங்க கால தமிழ் இலக்கியம் உருவானது. நாமும், இதுபோன்ற சங்க கால இலக்கிய நூல்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று நம் தமிழ் மொழியின் பெருமையை போற்றுவோம்.
Read Also:- கடையேழு வள்ளல்கள் வாழ்க்கை வரலாறு