You are currently viewing கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 3-முக்கிய அறிவிப்புகள் || பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 3-முக்கிய அறிவிப்புகள் || பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 3-முக்கிய அறிவிப்புகள் || பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தற்போது இந்தியாவில் மிக விரைவில் மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாஜக அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஏழை எளிய மக்களுக்காகவே இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதமரின் “உஜ்வாலா யோஜனா” திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் படி, சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1600 மத்திய அரசால் வழங்கப்படுகிறது. பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என கூறுகின்றனர்.

இந்தத் திட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர். இந்த திட்டத்தின் கீழ், முதலாவதாக கேஸ் பயன்படுத்தும் நபர்களுக்கு கேஸ் அடுப்பும், சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படுகிறது.

அதேபோன்று சமையல் சிலிண்டர் பயன்படுத்துவதற்கு சிலிண்டர் நிறுவனத்திடம் இருந்து விபத்து காப்பீடாக ரூபாய் 50-லட்சம் வழங்கப்படுகிறது. அதாவது, கேஸ் லீகேஜ் மற்றும் கேஸ் வெடிப்பு போன்ற விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு இந்த விபத்து தொகை வழங்கப்படுகிறது. முன்னெச்சரிக்கையாக மக்கள் எதுவும் பணம் செலுத்த தேவையில்லை இலவசமாக இந்த காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது.

இந்த காப்பீடு தொகையை பெறுவதற்கு பொதுத்துறை, எண்ணெய் நிறுவனங்கள், ஐசிஐசிஐ லம்பாடு போன்ற காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் இதுவரை 9-கோடிக்கு அதிகமான மக்களுக்கு எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் படி ஏழ்மையில் உள்ள குடும்பத் தலைவிக்கு கேஸ் அடுப்பு, ரப்பர் குழாய், ரெகுலேட்டர் மற்றும் டெபாசிட் தொகை போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவுகளை மத்திய அரசே வழங்குகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் தான் மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பாஜக அரசு இன்னும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் தான் தற்போது தமிழகத்தில் எண்ணை நிர்வாக அதிகாரிகள் கிராமப்புறங்களுக்கு சென்று பயனாளிகளை தேர்வு செய்து கேஸ் இணைப்புகளை வழங்கி வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் கேஸ் இணைப்பு திட்டத்தில் கிட்டத்தட்ட 37.லட்சம் பயனாளருக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இது இன்னும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது ‌.

historytamil

Today i am sharing u.s news

Leave a Reply