காலில் கருப்பு கயிறு கட்டினால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா? || அது ஏன் கருப்பு கயிறு மட்டும் கட்ட வேண்டும்?
காலில் கருப்பு கயிறு கட்டினால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?: இன்று பலரும் காலில் ஏன் கருப்பு கயிறு கட்டுகிறார்கள் என்று தெரியுமா? பெண்கள் கருப்பு கயிறு காலில் கட்டுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? அது ஏன் கருப்பு கலரில் மட்டும் கயிறு கட்ட வேண்டும்? அதுவும் கணுக்காலில் மட்டும் கட்டுகிறோமே ஏன்?
இதுபோன்று பல்வேறு கேள்விகளுக்கும் கருப்பு கயரின் நன்மைகளைப் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம் முன்னோர்கள் பழங்காலத்தில் திருஷ்டி கழிப்பது, சுத்திப் போடுவது போலவே காலில் கருப்பு கயிறு கட்டுவதையும் கடைபிடித்து வந்துள்ளனர். ஆண்கள் வலது கால்களிலும், பெண்கள் என்றால் இடது களிலும் இந்த கருப்பு கயிறை கட்டுவார்கள்.
இந்த கயிறு கட்டுவதற்கு சில அறிவியல் காரணங்களும், சில ஆன்மிக காரணங்களும் உண்டு.
அறிவியல் காரணம்:
தர்ப்பை, அருகம்புல், பட்டு ஆகிய மூன்று பொருட்களையும் கயிறு போல திரித்து கையில் கட்டுவது பல நன்மைகளை தருகிறது. இந்த 3-பொருட்களும் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாகும்.
அதுமட்டுமில்லாமல் நவகிரகத்தின் கதிர்வீச்சுகளை ஈர்க்கும் தன்மை இது போன்ற கயிறுகளுக்கு உண்டு எனக் கூறப்படுகிறது. இந்த கருப்பு கயிறு மனதில் நேர்மறை சக்தியை அதிகரிக்க கூடிய பண்பு கொண்டது.
இந்த பண்பு சிவப்பு நிற கயிறுகளுக்கு கிடையாது. இதனால், தான் கருப்பு கலரிலேயே கைகள் மற்றும் கால்களில் கருப்பு கயிறு கட்டுகின்றனர்.
உடல் நலக் கோளாறு:
பெரும்பாலும் கருப்பு நிறங்கள் சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்வீச்சுகளை உள்வாங்கும் தன்மை கொண்டது. இந்த கருப்பு கயிறு கட்டுவதினால் நீண்ட காலமாக குணமடையாத தீராத நோய்கள் மற்றும் உடல்நல கோளாறுகள் போன்றவை குணமடையும்.
நமது உடலில் பல்வேறு முடிச்சுகள் உள்ளது. இந்த ஒவ்வொரு முடிச்சுக்களும் உடம்பின் ஒவ்வொரு இயக்கத்தை வழிநடத்துகின்றது. அந்த வகையில் பார்க்கும்பொழுது முக்கிய முடிச்சுப் பகுதியாக நம்முடைய கணுக்கால் பகுதி தான் நமது எண்ணங்கள் மற்றும் செயல் திறன்கள் மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல்பாடும் அமைகின்றது.
இதனால்தான், கணுக்கால் பகுதியில் கயிறு கட்டினால் நாடியின் இயக்கம் சீராக இயங்குவதன் மூலம் எண்ணங்களும், மனநிலைமையும் சரி நீர் கோட்டில் இருக்கக்கூடும்.
நிதிநிலைமை:
ஆன்மீகத்தின்படியும், ஜோதிடத்தின்படியும் கணுக்காலில் கருப்பு கயிறு கட்டுவதினால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. கணுக்காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம் நிதிநிலைமை பலப்படும் எனக் கூறுவார்கள்.
இதற்கு காரணம் சனி பகவான் முதலில் ஒருவரின் கால்களின் வழியாகத்தான் உடம்பில் குடியேறுவராம். ராகு, கேது பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கயிறு கட்டும் முன் சனி தேவ மந்திரத்தை 21-முறை ஜெபிக்க வேண்டும்.
இதிலும், குறிப்பாக பொருளாதார பிரச்சனை உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை சனி பகவனை வணங்கி கருப்பு கயிற6 ஒன்பது முடிச்சுகள் போட்டு அதன் பிறகு அவர்கள் காலில் கட்டலாம். இதன் மூலம் பண வரவு அதிகமாகும் என்பது ஆன்மீக நம்பிக்கை.
கருப்பு கயிறு:
சனி கிரகத்தின் தாக்கம் குறைவாக இருப்பதுடன் ஜாதகத்தில் ராகு, கேது பலவீனமாக இருக்கும் நபர்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
கருப்பு கலர் என்பது கெட்ட காரியங்களை தடுக்கும் ஒரு நிறமாக மக்களால் கருதப்படுகிறது.எனவே, கருப்பு கயிறை அணிவதன் மூலமாக எதிர்மறை ஆற்றல் மற்றும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆன்மாக்களை விலக்கி விடும்.
கணுக்காலில் கருப்பு கயிறு கட்டுவதினால் தடைபட்ட வாழ்க்கைகள் சீராக அமையும்.கெட்ட காரியங்கள் அனைத்தும் விலகி பாதுகாப்பு தன்மையை ஏற்படும்.
பெண்கள் காலில் கருப்பு கயிறை அணிவதானால் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பர்கள் 12-மணிக்கு அணிந்து கொள்ளலாம். அதிலும், சனிக்கிழமைகள் கட்டுவது இன்னும் சிறந்தது. இந்த 9-முடிச்சுக்களும் தனித்தனியாக இருப்பது நல்லது.
ராசிகள்:
கருப்பைத் தவிர வேறு எந்த நிறத்திலும் கயிறு கால்களில் அல்லது கைகளில் கட்டக்கூடாது. கருப்பு கயிறை கட்டியதுமே தினசரி “ருத்ர காயத்ரி” மந்திரத்தை ஜெபித்து வந்தால் இந்த கயிறுகளுக்கு அதிக சக்தி வரக்கூடும்.
தனுஷ், துலாம், கும்பம் போன்ற ராசிக்காரர்கள் கருப்பு கயிறு கட்டுவது மிகவும் நல்லது. அதுபோன்று மேஷம், விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் கருப்பு நிறத்தை அணிவது மிகவும் உகந்தது என்று ஜோதிடங்களும், சாஸ்திரங்களும் கூறுகிறது.