You are currently viewing ஐ.பி.எல் 2024 CSK vs RCB முதல் போட்டிக்கான ஐ.பி.எல் டிக்கெட் விலை அறிவிப்பு || முதல் போட்டிக்கான டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா – ரூ.1700 முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை

ஐ.பி.எல் 2024 CSK vs RCB முதல் போட்டிக்கான ஐ.பி.எல் டிக்கெட் விலை அறிவிப்பு || முதல் போட்டிக்கான டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா – ரூ.1700 முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை

ஐ.பி.எல் 2024 CSK vs RCB முதல் போட்டிக்கான ஐ.பி.எல் டிக்கெட் விலை அறிவிப்பு || முதல் போட்டிக்கான டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா – ரூ.1700 முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை

ஐ.பி.எல் 2024 CSK vs RCB முதல் போட்டிக்கான ஐ.பி.எல் டிக்கெட் விலை அறிவிப்பு
ஐ.பி.எல் 2024 CSK vs RCB முதல் போட்டிக்கான ஐ.பி.எல் டிக்கெட் விலை அறிவிப்பு

ipl latest news in tamil:

2024-ஐ.பி.எல் 17-வது சீசனில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22-ஆம் தேதி மோத உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விலை மற்றும் விற்பனை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8-மணிக்கு தொடங்க உள்ளது.

இந்த முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பலபரீட்ச்சை நடத்துகிறது.

இந்த முறை இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் காரணத்தினால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை 2-கட்டங்களாக நடத்துவதற்கு பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் முதல் 21 போட்டிக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முதல் 21 போட்டியில் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 7-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

csk match tickets price:

ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் 74-போட்டிகளை கொண்டதாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிட்டல், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற 10-அணிகள் மோத உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விலைகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அனைத்து டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் மட்டுமே நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

2024 ipl ticket price:

C, D, E Lower பிரிவு தலா ஒரு டிக்கெட் ரூ. 1700-க்கும், I, J, K Upper பிரிவு டிக்கெட்டுகள் ரூ. 4,000-க்கும், I, J, K Lower பிரிவு டிக்கெட்டுகள் ரூ. 4500-க்கும், C, D, E Upper பிரிவு டிக்கெட்டுகள் ரூ.4000 விற்பனை செய்யப்படவுள்ளது.

KMK Terrace பகுதிக்கான டிக்கெட் ஒன்றின் விலை ரூ.7500-யாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

historytamil

Today i am sharing u.s news

Leave a Reply