ADVERTISEMENT
ஐபிஎல்-2024 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோனி

ஐபிஎல்-2024 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோனி

ஐபிஎல்-2024 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோனி

2024 ஐபிஎல் 17-வது சீசன் நாளை தொடங்குகிறது. கடந்த வருடம் நடைபெற்ற மினி ஏலத்தில் 10-அணிகளிலும் பெரும் வீரர்களை விட்டுக் கொடுத்தும், அதிரடி வீரர்களை வாங்கியும் பெரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளது ஐபிஎல் அணிகள். குறிப்பாக கூறினால், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் போன்ற 5-அணிகளும் கேப்டன்களையே மாற்றி உள்ளனர்.

தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்:

ஐபிஎல் 17-வது சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றது. மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் இந்த போட்டி தொடக்க விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பிரபலங்கள் இருக்கும் நிலையில், மைதானத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் மேற்கூறையில் கலர் கலர் லைட்கள் சோவிற்காக பொருத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் அர்ஜித் சிங், தமன்னா, ராஷ்மிக்க மந்தனா ஆகியோர் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்த நிலையில் தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், பாடகர் சோனு நிகம் போன்றோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. மேலும், அக்ஷய் குமார், டைகர் ஷெராப் போன்றோரும் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

மார்ச் 22-ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் தொடரின் தொடக்க விழா மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து போட்டிகளும் இரவு 7-மணிக்கு டாஸ் போட்டு 7:30-மணி அளவில் ஆட்டம் தொடங்கும் எனவும், முதல் போட்டி மட்டும் அரை மணி நேரம் தாமதமாக 7:30-மணிக்கு டாஸ் போட்டு 8-மணிக்கு பேட்டிங் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியின் மூலமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-2 நெட்வொர்க்கில் தொலைக்காட்சி சேனல்களில் பார்க்கலாம். மொபைல் போனில் ஜியோ சினிமா என்ற ஆப் மூலம் கண்டு களிக்கலாம்.

Leave a Reply