ஐபிஎல் 2024 சி.எஸ்.கே அணியின் கான்வே காயம் காரணமாக இந்த சீசனின் விளையாட மாட்டார் || மாற்று வீரரை தேர்வு செய்யும் சி.எஸ்.கே அணி அதிர்ச்சியில் ரசிகர்கள்
கான்வே காயம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் அதிரடி பேட்ஸ்மேன் டிவான் கான்வே காயம் ஏற்பட்ட காரணத்தினால் அவர் இந்த முறை நடக்க இருக்கும் 17-வது சீசன் ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக விளையாட வாய்ப்பு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இதனைக் கேட்ட சி.எஸ்.கே ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
ஓய்வு குறித்த அறிக்கை:
காயம் ஏற்பட்டதன் காரணமாக டிவோன் கான்வே கிரிக்கெட் விளையாடவே இல்லை. தொடர்ந்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய மருத்துவ கண்காணிப்பில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா இடையில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் டிவோன் கான்வே-வின் மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது.
அறுவை சிகிச்சை உறுதி:
நியூசிலாந்தின் கிரிக்கெட் வாரிய மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “டிவோன் கான்வேவின் கட்டை விரலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் விரைவில் குணமடையாது. கொஞ்சம் காலதாமதம் ஆகும். இதனால், அவருக்கு அறுவை சிகிச்சை கட்டாயம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
8-வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும்:
இதைத் தொடர்ந்து கான்வேவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் அவர் மே மாதம் முதல் வாரம் வரை கட்டாயமாக ஓய்வில் இருக்க வேண்டும். அதன் பிறகு அவர் பயிற்சியை மேற்கொண்டு சி.எஸ்.கே அணிக்கு திரும்பினால் ஒருவேளை சி.எஸ்.கே அணி பிளே ஆப் போகும் பட்சத்தில் அதில் விளையாட வேண்டிய நிலை இருக்கும்.
கான்வே நீக்கம் உறுதி:
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டிவோன் கான்வே நீக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கு மாற்று வீரராக அதே நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரன் இருப்பதினால் கான்வே இல்லாதது சி.எஸ்.கே அணியில் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
பிலிப் சால்ட் சி.எஸ்.கே அணியில் சேர்ப்பு:
இந்த தருணத்தில் டிவான் கான்வேவுக்கு மாற்றுவீராக இங்கிலாந்து அணியின் அதிரடி ஓப்பனர் பேட்ஸ்மேன் பிலிப் சால்ட் சி.எஸ்.கே சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் சி.எஸ்.கே அணி நிர்வாகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சால்ட் இங்கிலாந்து அணிக்காக 21-டெஸ்ட் போட்டியில் விளையாடி அதில் இரண்டு அதிரடி சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 166-ஆக உள்ளது. கிட்டத்தட்ட 9-ஐ.பி.எல் போட்டிகளில் 163-ஸ்ட்ரைக் ரேட்டில் 218-ரன்களை பிலிப் சால்ட் அடித்துள்ளார்.