ஆண் குழந்தைகளுக்களுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம் || அஞ்சல் அலுவலகத்தில் சேமிக்கும் வழிமுறைகள்
ஆண் குழந்தைகளுக்களுக்கான பொன்மகன் சேமிப்பு:- 2015-ஆம் ஆண்டு பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி அஞ்சல் அலுவலகத்தில் பணத்தை சேமிக்கும் வழிமுறைகளை உருவாக்கியது. அப்போது ஆண் குழந்தை இருக்கும் நபர்கள் இப்படி ஒரு திட்டம் எங்களுக்கும் வேண்டும் என்று அஞ்சலகங்களை அணுகி கேட்டுக் கொண்டனர்.
இதன் காரணமாக ஏற்கனவே உள்ள PPF என்ற பொது வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மைனர் என கூறப்படும் 18-வயது பூர்த்தி அடையாதோர் திட்டத்தின் கீழ் சேமிப்பை நாம் தொடங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டது. இந்த திட்டத்தின் படி ஆண் குழந்தை இருப்பவர்களும் தங்களுடைய குழந்தையின் பெயரில் அவருடைய எதிர்காலத்துக்காகவும், படிப்பின் உதவிக்காகவும் சிறு சிறு சேமிப்பாக இத்திட்டத்தில் இணையலாம் என்று கூறப்பட்டது.
இந்தத் திட்டத்தில் எவ்வளவு சேமிக்கலாம்? யார் யார் சேரலாம்? என்ன சலுகைகள் உண்டு? எவ்வளவு வட்டி? இது குறித்து அஞ்சலக அதிகாரிகள் விவரிக்கின்றனர்.
எவ்வளவு சேமிக்கலாம்?
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 நாம் சேமித்து வைக்கலாம்.
எவ்வளவு வட்டி?
ஆண் குழந்தைகளுக்களுக்கான பொன்மகன் சேமிப்பு:- தற்போது இருக்கும் சூழலில் இந்த திட்டத்தில் 7.1% வட்டி கொடுக்கப்படுகிறது. இருப்பினும், இது 3-மதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. இது மத்திய இணைந்து அமைச்சகத்தால் மாற்றப்படுவதனால் நம் வட்டிகளின் சதவீதங்களை அஞ்சலகங்களிலோ அல்லது இந்தியா போஸ்டின் (Post Office Saving Schemes (indiapost.gov.in) அதிகாரப்பூர்வ இணையதளத்திலையோ தெரிந்து கொள்ளலாம்.
கடந்த 10-ஆண்டுகளாக 7% குறையாமல் தான் வட்டி கொடுக்கப்பட்டதாக அஞ்சலக அதிகாரிகளின் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டத்தை விட தற்போது உள்ள வட்டி விகிதம் இந்த திட்டத்தில் 1.1% குறைவுதான்.
எவ்வாறு கணக்கிடுவார்கள்?
சாதாரணமாக மாதம் ரூ.1000 செலுத்தினால் 15-ஆண்டுகளில் ரூ. 1,80,000 நாம் செலுத்தி இருக்க வேண்டும். அப்படி பார்த்தால் அதற்கு வட்டியாக ரூ. 1,35,578 தொகை நமக்கு கிடைக்கும். முதிர்வு கால தொகையாக 15-ஆண்டுகளில் ரூ.3,15,572 என்ற தொகை கிடைக்கும்.
எப்போது எப்படி பணம் செலுத்த வேண்டும்?
1-ஆண்டில் கட்டாயம் ஒரு முறையாவது பணம் செலுத்த வேண்டும். உதாரணத்துக்கு, மே 1-ஆம் தேதி இந்த நிதியாண்டில் பணம் செலுத்திய ஒரு நபர் மறு நிதியாண்டில் ஏப்ரல் 31-குள் அடுத்த தவணையை செலுத்த வேண்டும். இதை செலுத்தாமல் தவறும் பட்சத்தில் அதற்கு அபதாரத்துடன் செலுத்தும் நிலை ஏற்படும்.
இதற்கு என்ன ஆவணங்கள் தேவை?
பெற்றோரின் ஆதார், பான் கார்டு போன்றவற்றின் நகல்கள், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், புகைப்படம் நாமினியின் பெயர் போன்ற விவரங்கள் தேவை.
எப்படி இணைவது?
பெற்றோர்கள் அஞ்சலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இந்த கணக்கை ஆரம்பிக்கலாம். அல்லது அஞ்சலகத்தின் இணையதள பேங்கிங் வசதி மூலம் ஆன்லைன் முறையில் கணக்கை தொடங்கவும் முடித்துக் கொள்ளவும் முடியும்.
இணையதளம் பேங்கிங் அல்லது இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் என்ற ஆப் மூலமாக ஆன்லைனில் நாம் பணத்தை செலுத்திக் கொள்ளலாம்.
வரி சலுகை எப்படி இருக்கும்?
வரிமான வரி விலக்கு 80-சி வரம்பின் கீழ் சேமிப்பு மற்றும் முதலீட்டின் அதிகபட்ச தொகை ரூ.1,50,000 வரை ஒரு நிதி ஆண்டுக்கு வரி விலக்கு சலுகைகள் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் கூட இந்த திட்டத்தில் இணைந்தால் கூட வரி சலுகையை பெற முடியும்.
இறப்பு நேர்ந்தால் என்ன நடக்கும்?
சரியான முறையில் பணம் செலுத்தி கொண்டிருக்கும் நேரத்தில் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இறந்தால் குழந்தையின் 18-வயது பூர்த்தி அடையும் நேரத்தில் குழந்தைக்கு அந்த பணம் கண்டிப்பாக கிடைக்கும். அது இல்லாவிட்டாலும் குழந்தையின் பாதுகாவலரிடம் அந்த பணம் ஒப்படைக்கப்படும்.