ADVERTISEMENT
பொங்கல் பற்றிய சில வரிகள்

பொங்கல் பற்றி சில வரிகள்

பொங்கல் பற்றி சில வரிகள்

பொங்கல் பற்றி சில வரிகள்

 

மாட்டு பொங்கல் பற்றி சில வரிகள்:

பொங்கல் பற்றி சில வரிகள்:- “ஆடிப்பட்டம் தேடி விதை”, “தை பிறந்தால் வழி பிறக்கும்”, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” போன்ற மொழிகளுக்கு ஏற்ப பொங்கல் பண்டிகை தமிழகத்தில் 4-நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.

• ஆடி மாதம் விவசாயம் செய்த பயிர்களை தை மாதம் அறுவடை செய்யும் விழாவாக தமிழர்களால் 4 – நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை தான் இந்த பொங்கல் திருநாள்.

• மக்கள் தங்களுடைய உழைப்பிற்கு உதவிய கதிரவனுக்கும், இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றிகளை தெரிவிக்கும் விதமாக இந்த பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

• முதல் நாள் போகிப் பண்டிகை, இரண்டாவது நாள் தை பொங்கல், மூன்றாவது நாள் மாட்டுப்பொங்கல், நான்காவது நாள் காணும் பொங்கல் என பொங்கல் திருநாள் 4-நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

• அதுமட்டுமில்லாமல், வெளி நாடுகளில் இருக்கும் தமிழ் மக்கள் தமிழ் கலாச்சார முறைப்படி அந்த நாடுகளிலும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

• முதல் நாள் போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள தேவையில்லாத பொருட்கள் மற்றும் பழைய துணிகள் போன்றவற்றை நெருப்பில் போட்டு எரித்து மகிழ்வார்கள்.

• இரண்டாம் நாள் தைப்பொங்கல் அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீடுகளில் தூண்களில் இருபுறமும் கரும்புகளை கட்டி, வீட்டின் கதவு நிலைகளில் ஆவரம் பூ மற்றும் மா இலைகளை தோரணமாக கட்டி தொங்க விடுவார்கள்.

• வீட்டின் வாசலின் முன் அழகான கோலங்கள் போட்டு அதற்கு கலர் கலர் வண்ண பூச்சுகளை பூசி அழகு படுத்துவார்கள்.

• இந்த நாளில் புத்தாடைகளை உடுத்தி பயிர்கள் விளைச்சலுக்கு காரணமாக இருந்த கதிரவனுக்கு புத்தரிசி, சர்க்கரை, பால், நெய் போன்றவற்றை புது பானையில் இட்டு பொங்கல் வைத்து கதிரவனுக்கும், மாட்டுக்கும் படைத்து தாங்களும் உண்டு மகிழ்வார்கள்.

• இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் இந்த நாளில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. கால்நடைகளை குளிப்பாட்டி அதற்கு கலர் கலர் வண்ணங்களில் பொட்டு வைத்து அழகு படுத்துவார்கள்.

ADVERTISEMENT

தைப்பொங்கல் பற்றி சில வரிகள்:-

• ஆடு, மாடுகளின் கொம்புகளை கூர்மையாக சீவி அதற்கு வண்ணக் கலர்கள் இட்டு, புது மூக்கணாங்கயிறு மாற்றி, தாம்பு கயிறு மாற்றி, கழுத்தில் மாலை போட்டு அலங்கரித்து மாட்டு தொழுவத்தில் பொங்கல் வைத்து மாடுகளுக்கு படைப்பார்கள்.

• பொங்கல் வைத்து முடித்த பிறகு “பொங்கலோ பொங்கல்”, “மாட்டு பொங்கல்”, “பட்டி பெருக”, “பால்பனை பொங்க”, “நோயும் பிணியும் தெருவோடு போக” என்று கோஷம் போட்டு மகிழ்வார்கள்.

பொங்கல் பற்றி சில வரிகள்:- பொங்கல் பண்டிகையின் கடைசி நாளாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் உறவினர்களின் வீடுகளுக்கு அல்லது தங்களுக்கு பிடித்த கோவில்களுக்கு நண்பர்களுடன் சென்று நேரத்தை செலவிட்டு மகிழ்வார்கள்.

• தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் குறிப்பாக “மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு” போன்ற இடங்களில் “ஜல்லிக்கட்டு” எனும் வீர விளையாட்டு இந்த நாளில் நடைபெறுகிறது.

பொங்கல் பற்றிய 10 வரிகள்:

• இதில் ஜல்லிக்கட்டு காளைகளை வீரர்களால் பிடிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. பிடி படாத ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்படும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

• இந்த நாளில் இதை தவிர சிறு கிராமங்களில் ஆண்கள், பெண்கள், சிறுவர்களுக்கு சிறு சிறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

• வீட்டிற்கு வாங்கிய இனிப்பான செங்கரும்பை உண்டு இந்த போட்டியினை கண்டுகளிப்பார்கள்.

• இந்தப் பொங்கல் பண்டிகையை “தமிழர் திருநாள்” என்று அழைப்பார்கள். ஏனென்றால், இந்த பொங்கல் பண்டிகை அதிகளவில் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது.

• வட இந்தியாவில் பொங்கல் பண்டிகையை “மகர சங்கராந்தி” என்ற பெயரால் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

பொங்கல் பண்டிகை அன்று செய்யக்கூடாத சில காரியங்கள்:

பொங்கல் பற்றி சில வரிகள்:- தை முதல் நாள் தைப்பொங்கல் கொண்டாடப்படும் போது வீட்டில் அனைவரும் கண்டிப்பாக குளிக்க வேண்டும்.

• குளிக்கும்போது யாரும் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.

• குளித்து முடித்த பிறகு புது ஆடைகளை உடுத்த முடியவில்லை என்றாலும், அழுக்கான மற்றும் கிழிந்த ஆடைகளை உடுத்தக்கூடாது.

ADVERTISEMENT

• நாம் பொங்கல் வைக்கும் பானையை அன்றே கழுவக்கூடாது. இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் அல்லது மூன்றாம் நாள் காணும் பொங்கல் அன்று தான் பானையை சுத்தம் செய்ய வேண்டும்.

• எனவே, இந்த பொங்கல் திருநாளை இனிதே கொ